சொல்லும் வார்த்தைகளில் கவனம் தேவை

17 அக்

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

24 25 26 27 28

இந்த வார வெண்பா – 29

சொல்தான் நினைப்பை செயலாக மாற்றிடும்

நல்லவழி; இன்னொரு எச்சரிக்கை – கொல்வதும்

வெல்வதும் என்றே நடைமுறை வாழ்வில்சொல்

எல்லாமாய் இருந்திடும் நம்பு

பொருள்:

மனிதன் மனதில் உருவாகும் எண்ணத்தை செயலாக மாற்ற உதவுவது சொல்தான். எண்ணத்துக்கும் செயலுக்கும் இடையில் ஒரு கதவு போல் அது செயல்படுகிறது.

ஆனால் வார்த்தைகள் மிகவும் சக்தி உள்ளவை. எனவே அதைக் கவனமாகக் கையாள வேண்டும். கவனமில்லாது சொல்லப் படும் கோபமான வார்த்தைகள் அழிவைக்கூட ஏற்ப்டுத்தி விடும்.

இதையே தெய்வப் புலவர் திருவள்ளுவரும்,

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு

என்ற குறளில் விளக்குகிறார்.

ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்று சொல்வார்கள். மனிதர்களிடையே சண்டையை உண்டாக்குவதும் சொல்தான். சமாதானம் பேசி அதை நிறுத்துவதும் சொல்தான். எனவே

அன்பான வார்த்தைகளைப் பேசுங்கள்; தன்னம்பிக்கையை கொடுக்கும்.

ஆறுதல் வார்த்தைகளைப் பேசுங்கள்; தற்கொலையைக்கூடத் தடுக்கும்.

இனிமையான வார்த்தைகளைப் பேசுங்கள்; நட்பை வளர்க்கும்.

ஊக்கமான வார்த்தைகளைப் பேசுங்கள்; முயற்சியைத் தூண்டும்..

கருணையான வார்த்தைகளைப் பேசுங்கள்; சோகத்தை விரட்டும்.

நன்றிமிக்க வார்த்தைகளைப் பேசுங்கள்; உதவிடத் தூண்டும்.

பொறுமையான வார்த்தைகளைப் பேசுங்கள்; கோபத்தைக் குறைக்கும்

2 பதில்கள் to “சொல்லும் வார்த்தைகளில் கவனம் தேவை”

  1. Valayapatti Kanniappan Kanniappan ஜூலை 21, 2016 இல் 7:51 முப #

    அன்பு நண்பருக்கு,

    இந்த வார வெண்பா – 29

    சொல்தான் நினைப்பை செயலாக மாற்றிடும்
    நல்லவழி; இன்னொரு எச்சரிக்கை – கொல்வதும்
    வெல்வதும் என்றே நடைமுறை வாழ்வில்சொல்
    எல்லாமாய் இருந்திடும் நம்பு.

    இதில் ‘எல்லாமாய் இருந்திடும்’ தளை தட்டுகிறது. எல்லாமும் ஆகுமே நம்பு! என்றிருந்தால் தளை தட்டாது என்று நம்புகிறேன்.

    சொல்தான் நினைப்பை செயலாக மாற்றிடும்
    நல்லவழி; இன்னொரு எச்சரிக்கை – கொல்வதும்
    வெல்வதும் என்றே நடைமுறை வாழ்வில்சொல்
    எல்லாமும் ஆகுமே நம்பு!

    பாக்களை பதியுமுன் w.w.w.avalokitam.com என்ற தளத்தில் பதிவு செய்து ஆராய்ந்தால் என்ன வகையான பா என்றும், தளை தட்டுவதையும் அறிந்து திருத்தலாம்.

    அன்புடன்,
    வ.க.கன்னியப்பன்

  2. Kanniappan Kanniappan ஜூலை 22, 2016 இல் 5:27 முப #

    இந்த வார வெண்பா – 29

    சொல்தான் நினைப்பை செயலாக மாற்றிடும்
    நல்லவழி; இன்னொரு எச்சரிக்கை – கொல்வதும்
    வெல்வதும் என்றே நடைமுறை வாழ்வில்சொல்
    எல்லாமாய் இருந்திடும் நம்பு.

    இதில் ‘எல்லாமாய் இருந்திடும்’ தளை தட்டுகிறது. எல்லாமும் ஆகுமே நம்பு! என்றிருந்தால் தளை தட்டாது என்று நம்புகிறேன்.

    சொல்தான் நினைப்பை செயலாக மாற்றிடும்
    நல்லவழி; இன்னொரு எச்சரிக்கை – கொல்வதும்
    வெல்வதும் என்றே நடைமுறை வாழ்வில்சொல்
    எல்லாமும் ஆகுமே நம்பு!

    பாக்களை பதியுமுன் w.w.w.avalokitam.com என்ற தளத்தில் பதிவு செய்து ஆராய்ந்தால் என்ன வகையான பா என்றும், தளை தட்டுவதையும் அறிந்து திருத்தலாம்.

    அன்புடன்,
    வ.க.கன்னியப்பன்.

பின்னூட்டமொன்றை இடுக