பதஞ்சலி யோக சூத்திரம்

6 ஏப்

இதுவரை வெண்பா – 1 2 3 4 5 6 7

இந்த வார வெண்பா – 8

அத்ரி முனிவர் அனுசூயை தம்பதிக்கு

புத்திரராய் வந்தார் பதஞ்சலி – உத்தி

பலநிறைந்த நல்யோக சூத்திரம் தந்தார்

நலமாய் அதைப்போற்றி வாழு

 பொருள்:

அத்ரி மகரிஷிக்கும் அவரது பத்தினியான அனுசூயைக்கும் மகனாக பூமியில் உதித்தவர் சித்த புருஷர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர். அவர் பாணினி இயற்றிய சமஸ்கிருத இலக்கணத்துக்கு விளக்கவுரை தந்தார். மனிதர்கள் நோய் நொடியின்றி நலமாக வாழ ஆயுர்வேத சாஸ்திரமும் படைத்தார். அவரே மனம் செம்மை பெற யோக சூத்திரமும் வகுத்தார். அதில் பல வகை உத்திகள் உள்ளன. அவர் சமஸ்கிருதத்தில் இயற்றிய யோக சூத்திரத்தைப் போலவே அவரது சம காலத்தவரான திருமூலத்தேவர் தமிழில் திருமந்திரமாக அருளினார் என்று சொல்வோரும் உண்டு. பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சூத்திர்த்தை பின்பற்றினால் மனம் ஒருநிலைப் பட்டு மனத்தினால் ஏற்படும் குற்றம் குறைகள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: