யோகத்தால் பயன் உண்டு

21 ஆக

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

24 25

இந்த வார வெண்பா – 26

தெறித்தே பலதிசையும் ஓடும் மனம்ஓர்

நெறியை அறியா நிலையில் – அறிந்தே

முறையாக யோகம் பயின்றால் அதன்பின்

குறையாது வந்திடும்நற் பயன்

பொருள்:

மனதைக் கட்டுப் படுத்தும் வழிமுறை அறியாத நிலையில், அது ஒரு நிலையில் நில்லாது கண்டபடி ஓடும். ஆனால் தகுந்த குருவிடம் தீட்சை பெற்று முறையாக யோகப் பயிற்சி செய்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். அதன் காரணமாக சிறந்த பயன் நம்மை வந்தடையும் என்று நிச்சயமாக நம்பலாம்.

Advertisements

4 பதில்கள் to “யோகத்தால் பயன் உண்டு”

 1. Nagendra Bharathi ஓகஸ்ட் 21, 2015 இல் 7:36 பிப #

  அருமை

  • rasippu ஓகஸ்ட் 22, 2015 இல் 4:16 முப #

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி, திரு. நாகேந்திர பாரதி அவர்களே.

 2. Kanniappan Kanniappan ஜூலை 22, 2016 இல் 6:17 முப #

  அன்புள்ள நண்பர்க்கு,

  பெரும்பாலான பாடல்கள் வெண்பா இலக்கணத்திற்கு உட்பட்டு இல்லை. முதல் பாடலிலேயே தளை தட்டுவதை ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார். தயவுசெய்து மீண்டும் அனைத்துப் பாடல்களையும் சரி பார்க்கவும். நான் கடந்த இரண்டு வருடங்களாக http://www.eluthu.com என்ற இணைய தளத்தில் மரபுக் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி வருகிறேன். வாசித்துப் பாருங்கள்.

  தெறித்தே பலதிசையும் ஓடும் மனம்ஓர்

  நெறியை அறியா நிலையில் – அறிந்தே

  முறையாக யோகம் பயின்றால் அதன்பின்

  குறையாது வந்திடும்நற் பயன்.

  வந்திடும்நற் பயன் என்ற இடத்தில் தளை தட்டுகிறது.

  காய்ச்சீர் முன் நேரசை தான் வரும். பயன் – நிரையசை.

  தெறித்தே பலதிசையும் ஓடும் மனம்ஓர்

  நெறியை அறியா நிலையில் – அறிந்தே

  முறையாக யோகம் பயின்றால் அதன்பின்

  குறையாது நற்பயன் கூறு.

  கூறு – நேர்/நேர் – நேர்பு – வாய்பாடு – காசு – இரண்டாவது அசை உகரத்தில் அமைய வேண்டும்.

  அன்புடன்,

  வ.க.கன்னியப்பன்,
  முன்னாள் கண் மருத்துவப் பேராசிரியர்,
  மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை

  • rasippu ஜூலை 22, 2016 இல் 6:59 முப #

   அன்புள்ள அய்யா திரு. வ.க. கன்னியப்பன் அவர்களுக்கு,

   முதலில் தங்களது வருகைக்கும், மதிப்பு மிக்க கருத்துக்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
   என்னுடைய தமிழார்வம் காரணமாக வெண்பா எழுதும் முயற்சியாக இந்த அந்தாதி வெண்பா பக்கத்தை தொடங்கினேன்.
   அந்த வெண்பாக்களில் என்னுடைய அறியாமை காரணமாக இலக்கணப் பிழைகள் இருப்பதைத் தாங்கள் சுட்டிக் காட்டியதற்கு
   என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

   தங்களது ஆலோசனையின்படி http://www.avalokitam.com என்னும் தளத்திற்குச் சென்று, இது போன்ற பிழைகளை திருத்திக்கொள்ள
   முயற்சிக்கிறேன். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்த முயற்சியைத் தொடரலாம் என்று இருக்கிறேன்.

   தங்களது ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்று நம்புகிறேன்.
   மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: