வரம் தரும் சக்தி

16 பிப்

இந்த வார வெண்பா – 1

இன்று முதல் வாரம் ஒரு வெண்பா என்ற புதிய பகுதி ஆரம்பமாகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வகையான தலைப்பிலும் வெண்பா இருக்கும். அனைத்துக்கும் ஆதாரமான அன்னை பராசக்தியை வணங்கி இந்த வார வெண்பா தொடங்குகிறது.

முன்னைப் பிறப்பின் வினையாவும் கண்ணியாய்

உன்னைப் பிடிக்கும் அதுநீக்க – அன்னை

பராசக்தி தாள்தொழுவ ரம்தருவாள் அண்ட

சராசரம்ப டைத்திட் டவள்

பொருள்:

அண்ட சராசரங்களையும் படைத்து அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழும் அன்னை பராசக்தி யை வணங்கினால்முன்வினையால் ஏற்படும் துன்பங்களை நீக்கி வாழ்வை வளம் பெறச் செய்வாள்.

இதையே வேத வியாசர் ஸ்ரீ தேவி பாகவத்தில் வலியுறுத்துகிறார்.

Advertisements

3 பதில்கள் to “வரம் தரும் சக்தி”

 1. ஊமைக்கனவுகள் பிப்ரவரி 16, 2015 இல் 4:21 பிப #

  அய்யா வணக்கம்.
  தங்களின் முயற்சிக்கும் முனைவிற்கும் முதலில் வாழ்த்துகள்.
  அழிந்துவரும் தமிழ் மரபொன்றைத் தாங்கி நிறுத்தும் தங்கள் பணி நிச்சயம் போற்றப்பட வேண்டியதே!
  அம்முயற்சி பாராட்டப்பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை.
  நானறிந்தவரை,
  சில கருத்துகளை இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
  வெண்பா தனக்கெனச் சில இலக்கண மரபுகளுக்கு உட்பட்டு இயங்குவது.
  இன்னும் சொல்லப்போனால் தமிழ் யாப்பு மரபில் பிற தளைகளை ஏலாத் தூய்மையான சட்டகம் கொண்டது.
  தங்கள் வெண்பாவில்,

  முன்னை செய்த என்பதை அசைபிரிக்கும் போது, நேர் நேர் – நேர் நேர் என நேருடன்நேர் ஒன்றி ஆசிரியத்தளையாகிறது.
  அதைப்போலவே
  பாடாய் உன்னை என்பதும் நேரோன்றாசிரியத்தளையாய் வருகிறது.
  தாள்தொழுக வரம்தருவாள் என்பது காய் முன் நிரைவரும் கலித்தளை.
  சராசரம் படைத்து மற்றும் படைத்து நின்றவன் இவ்விருவிடத்திலும் ஆசிரியத் தளைகளே வருகின்றன.
  நான் தமிழ்ப்பண்டிதனல்ல.
  எடுத்த எடுப்பிலேயே ஒரு முயற்சியைக் குற்றம் கூறும் தகுதி உடையவனும் அல்ல.
  இக்கருத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் உங்கள் விருப்பம்.
  தோன்றியதைக் கூறிப்போகிறேன் அவ்வளவே!
  நன்றி

  • ஊமைக்கனவுகள் பிப்ரவரி 16, 2015 இல் 4:26 பிப #

   தங்களுக்கு நேரமிருந்தால் யாப்புச்சூக்குமம் எனும் என் பதிவொன்றைக் காண அழைக்கிறேன்.
   நன்றி.

  • rasippu பிப்ரவரி 17, 2015 இல் 4:50 முப #

   அய்யா, தங்களது வருகைக்கும் வாசிப்பிற்கும் எனது நன்றி! தாங்கள் சுட்டிக் காட்டியது போல் இலக்கணப் பிழைகள் இருப்பதைத் தெரிந்து கொண்டேன். என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளவும் நல்ல வெண்பாக்கள் இயற்றவும் தங்களது வழிகாட்டுதல்கள் உதவும். அதனால் தங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
   அய்யா, என்னுடைய எழுத்துக்களில் பிழை இருக்கும் பட்சத்தில் தங்களைப் போன்றவர்கள் தயங்காது எடுத்துரைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நிச்சயம் திருத்திக் கொள்வேன்.
   தாங்கள் குறிப்பிட்ட யாப்புச்சூக்குமம் நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி!

   கீழே காணப்படும் முந்தைய வெண்பா இப்போது பிழை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
   முன்னை செய்த வினையாவும் பாடாய்

   உன்னை படுத்தும் அதுநீக்க – அன்னை

   பராசக்தி தாள்தொழுக வரம்தருவாள் அண்ட

   சராசரம் படைத்து நின்றவள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: