Tag Archives: புத்தகம்

துணிந்தவனுக்கே வாழ்வு

21 டிசம்பர்

அமேசான் அறிவித்த pentopublish2019  என்ற பெயரில்  நடத்தும் போட்டிக்கு புத்தகங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு 14-12-2019 அன்றுடன் முடிவடைந்து விட்டது. இனி புத்தகங்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெறும் என்று நினைக்கிறேன். முடிவுகள் அடுத்த வருடம் 2020ல் வெளியாகும்.

நேற்று ஃபேஸ்புக்கில் ஒருவர் பேசி இருந்ததை பார்த்தேன். மின்புத்தகம் (E-book) வெளியிடுவதைப் பற்றி அவர் இவ்வாறு சொல்லி இருந்தார்.

“ நீங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டால் அதை யாரும் வாங்க மாட்டார்கள். அப்படியே யாராவது வாங்கினாலும் அதிகபட்சம் ஒரு பத்து புத்தகம் விற்பனையாகும். அதற்கும் யாரும் மதிப்புரை எழுத மாட்டார்கள்.

அதனால்தான் நாங்கள் ஒரு குழுவாக சேர்ந்து எங்களுடைய புத்தகங்களை விற்பனை செய்வதற்கும் அவர்களிடம் மதிப்புரை எழுதி வாங்குவதற்கும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.

அவர் சொன்ன இந்தக் கருத்து ஒரு வேளை சரியாக இருக்குமோ என்று என்னை யோசிக்க வைத்தது. ஏன் அவர் இப்படி சொல்கிறார்? இது உண்மைதானா? மக்கள் ஏன் புத்தகங்களை வாங்கி படிக்க மாட்டார்கள் என்று சொல்கிறார். அப்படியே படித்தாலும் ஏன் மதிப்புரை செய்ய மாட்டார்கள் என்று சொல்கிறார் என்று யோசித்தேன்

எனக்கு சில விஷயங்கள் புலப்பட்டது. ஒருவர் தன்னுடைய கருத்துக்களை வெளியிட தயங்குவதற்கு சில காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றியது. அவை என்னவென்று யோசித்தேன்.

  1. புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்திருக்கலாம்.

இன்றைய டிவி, கம்ப்யூட்டர் கலாச்சாரத்தில் புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அதற்குத்தான் இன்றைய புத்தகங்கள் E-book  வடிவில் கிடைக்கிறது. கம்ப்யூட்டர், லேப்டாப், கிண்டில், மொபைல் போன் என்று எதில் வேண்டுமானாலும் படிக்கலாம்.

உண்மையில் புத்தகம் படிக்கும்போது நம்முடைய சிந்தனையில் ஒரு தெளிவு பிறக்கிறது. இதை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

  1. பயம் காரணமாக இருக்கலாம்

தாங்கள் தமிழ் புத்தகம் படிப்பது பிறருக்குத் தெரிந்து விடுமோ என்ற பயம் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் தமிழில் பேசுவதும் தமிழில் எழுதுவதும் சிலருக்கு கௌரவ குறைச்சலாக இருக்கலாம்.

இன்னொரு பயம் என்னவென்றால், மதிப்புரை எழுதி அது வெளியாகி விட்டால் தங்களுடைய பெயர் வெளியில் தெரிந்து விடும் என்ற பயமும் சிலருக்கு இருக்கலாம்.

மதிப்புரை தருபவர்கள் பெயர் வெண்பாவில் வருமாறு கவிதை எழுதுகிறாரே, அதில் நமது பெயர் வந்து விடுமோ என்ற கூச்சம் காரணமாக இருக்கலாம்.

மேலும் தாங்கள் சொல்லும் கருத்து சிலருக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் காரணமாக இருக்கலாம்.

அல்லது ஒரு வேளை புத்தகம் நன்றாக இல்லை என்று நாம் மதிப்புரை செய்தால் அது அந்த எழுத்தாளரை புண்படுத்தி விடுமோ, அவர் கோபப்பட்டு விடுவாரோ என்ற நல்ல எண்ணத்தினால் வரும் பயம் காரணமாக இருக்கலாம்.

அப்படி நன்றாக இல்லை என்று நாம் எழுதி இருந்ததைப் படித்து விட்டு சிலர் அந்த புத்தகத்தை வாங்க மாட்டார்களோ என்ற நல்லெண்ணமும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். எந்தப் புத்தகத்தையும் படித்து சரியான கருத்துக்களை சொல்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் பாராட்டினால் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும். திருத்தங்கள் சொன்னாலோ அல்லது ஆலோசனைகளை எடுத்துரைத்தாலோ அதை நிச்சயம் கருத்தில் கொள்வேன். எந்த வகையிலும் விமர்சனம் செய்தவர்களை நான் திட்டவோ, புண்படுத்தவோ மாட்டேன்.

என்னதான் சொன்னாலும் பயமாகத்தான் இருக்கிறது என்று சொல்பவர்கள் தயவு செய்து மதிப்புரை எழுத வேண்டாம். உங்கள் தனி மனித சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எதையுமே துணிந்து செய்தால்தான் அது நமக்கு மட்டும் இல்லாமல் பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

துணிந்தவனுக்கே வாழ்வு.

மதிப்புரைக்கு நன்றி

20 டிசம்பர்

எழுத்தாளர் வில்லவன் கோதை அவர்கள் மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டவர். பிறருடைய புத்தகங்களை வாசித்து தான் என்ன உணருகிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்துபவர்.

Appavin

அவர் புத்தகத்திற்கு ரேட்டிங்காக ஐந்து நட்சத்திரங்கள் கொடுப்பதில் தயக்கம் காட்டுபவர். ஒருவருக்கு அதிக பட்ச ரேட்டிங் கொடுத்து விட்டால் அவருடைய இன்னொரு புத்தகம் இதை விட நன்றாக இருந்தால் அப்போது என்ன ரேட்டிங் கொடுப்பது என்று கருதுபவர்.

அப்பாவின் பெண் புத்தகத்துக்கு அவர் மதிப்புரை தந்திருக்கிறார். அதை வாசிக்கவும் புத்தகத்தை தரவிறக்கவும் அருகில் உள்ள படத்தையோ அல்லது லிங்க்கையோ சொடுக்கவும்.

அதனால் அவர் கொடுத்த மூன்று நட்சத்திர மதிப்பீட்டையே எனக்குக் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

வேலைப்பளு காரணமாக உடனடியாக அதற்கென்று இடுகை போட முடியவில்லை.

நான் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி மதிப்புரை வழங்கிய திரு. வில்லவன் கோதை அவர்களுக்கான வெண்பா இது.

நல்லகதை என்றாலும் ஐந்துஸ்டார் யாருக்கும்

வில்லவன் கோதை தருவதில்லை – வல்லவனாய்

ஏற்றம்நான் பெற்றிட வேண்டியே உண்மையை

சாற்றியவர் தம்கருத்து நன்று

 

E-book இன்று இலவசம்

28 நவ்

# ஒரு மனிதன் முதலாளி ஆவதற்கும் கடைசி வரை வேலைக்காரனாகவே இருப்பதற்கும் அவரவர் மனப்பாங்குதான் அடிப்படைக் காரணம். #

# செங்கிஸ்கான் வாழ்க்கை இன்னுமொரு உதாரணம். மிகவும் சாதாரண குடுமபத்தில் பிறந்து சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் பின்னாளில் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். அந்த அளவுக்கு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அதன் பிறகு யாராலும் உருவாக்க முடியவில்லையே. #

Appavinஅப்பாவின் பெண் புத்தகத்திலிருந்து சில வரிகள் இவை. இது போல நிறைய கருத்துக்கள் இந்தப் புத்தகத்தில் உண்டு.

அந்தப் புத்தகம் இன்று (26-11-2019) பகல் 1.30 PM முதல் நாளை (27-11-2019) பகல் 1.29 PM வரை அமேசானில் இலவசமாக கிடைக்கும்.

இங்குள்ள படத்தை கிளிக் செய்து டவுன்லோடு செய்யலாம். படித்து விட்டு தங்களது மேலான கருத்துக்களை அமேசானில் ஸ்டார் ரேட்டிங்கோடு ரிவ்யூ செய்யலாம்.

தலைப்பு தாருங்கள் வெண்பா கிடைக்கும்

26 நவ்

Clinic - 4aஇங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அன்பர்கள் கிளினிக்கில் ஒருநாள் புத்தகத்தின் அமேசான் பக்கத்திற்குச் செல்லலாம். புத்தகத்தைப் படித்து விட்டு ஸ்டார் ரேட்டிங்குடன் மதிப்புரை (Review) செய்யலாம்.

மதிப்புரை செய்து அதை இங்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கும் அன்பர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.

நீங்கள் கொடுக்கும் ஏதாவது ஒரு தலைப்பு அல்லது ஈற்றடியைக் கொண்டு ஒரு வெண்பா இந்த வலைப்பூவில் வெளியாகும்.

வெண்பாவை ரசிக்கத் தயாராகுங்கள்.

சும்மா ஊதுங்க பாஸ் – E-book

23 நவ்

#AMAZON

Summa-newஇன்று (23-11-2019) பகல் 1.30 PM முதல் நாளை (24-11-2019) பகல் 1.29 வரை இந்தப் புத்தகம் அமேசானில் இலவசமாக கிடைக்கும்.

புத்தகத்தை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

அப்பாவின் அருமை – ebook இலவசம்

21 நவ்
appavain arumai#AMAZON
இந்த கவிதைத் தொகுப்பை (ebook) இன்று (21-11-2019) பகல் 1.30 PM முதல் நாளை பகல் 1.29 PM வரை அமேசானில் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.

அப்பாவின் பெண் – E-Book இலவசம்

16 நவ்
அப்பாவின் பெண் – ரூபாய் 216 விலை மதிப்புள்ள இந்த நாவல் இந்திய நேரப்படி இன்று (16-11-2019) 12.30 PM மணியிலிருந்து நாளை 12.29 PM வரை இலவசமாகக் கிடைக்கிறது. புத்தகத்தைப் படித்து விட்டு தங்களது ரிவியூவை அமேசான் தளத்தில் ஆங்கிலத்தில் எழுதலாம். படத்தை கிளிக் செய்து அமேசான் தளத்திற்குச் செல்லலாம்.
Appavin
அல்லது இங்கே சொடுக்கவும் அப்பாவின் பெண்

அப்பாவின் பெண் – நாவல்

14 நவ்

ஒரு ஆண் முதன் முதலாக ஒரு பெண்ணை பார்க்கும்போது அவளுடைய அழகைத்தான் முதலில் ரசிக்கிறான். அவளுடன் பேசிப்பழக வாய்ப்புக் கிடைக்காதா என்று தவிக்கிறான். அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அவள் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டுகிறான். அவளுடன் பேசி விட்டால் உலகமே தன் காலடியில் வந்து விட்டதுபோல நினைக்கிறான். ஆனால் அந்த ஈர்ப்பு தற்காலிகமானது தான்.

அவளிடம் ஏதோ ஒAppavinருவகையில் தனக்குத் திருப்தி ஏற்பட்டு விட்டால் அவளின் மீது உள்ள ஈர்ப்பு குறைய ஆரம்பிக்கிறது. அந்த ஈர்ப்பு குறையாமல் வைத்திருக்க முடிந்தால் அந்தப்பெண் பேரழகியாக கருதப்படுகிறாள். அதற்கு கிளியோபாட்ரா சிறந்த உதாராணம்.

ஆனால் ஒரு பெண் ஒரு ஆணை முதலில் பார்க்கும் போது அவள் நிலைப்பாடே வேறு. அவன் அழகாய் இருப்பதை விடத் தனக்குப் பாதுகாப்பாக இருப்பானா, தன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்வானா, தான் எது சொன்னாலும் செய்து முடிப்பானா, தன்னைக் கஷ்டப்படுத்தாமல் நடத்துவானா தன்னை ஒரு மகாராணியாக ஆக்குவானா அல்லது அதுபோல் நடத்தவாவது செய்வானா என்று பலவிதமாக ஆராய்கிறாள். அவனைப் பலவிதமாகச் சோதிக்கிறாள். அவன் சரியானவன் என்று தோன்றினால் அவனை எத்தனை முடியுமோ அந்தளவுக்கு உயர்த்துகிறாள், தன்னை மோசம் செய்கிறான் என்று உணர்ந்தாள் அவன் எழ முடியாத அளவுக்கு வீழ்த்துகிறாள்.
மாவீரன் ஜூலியஸ் சீசர் எகிப்தின் பேரழகி கிளியோபாட்ராவிடம் மயங்கியதற்கும், ஆனால் அவள் ஜூலியஸ் சீசரைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியில் அமர்ந்ததற்கும் இந்த மாறுபட்ட குணங்களே காரணம். ஜூலியஸ் சீசர் மறைந்த பின் மார்க் ஆண்டனியை தன் வலையில் கிளியோபாட்ரா சிக்க வைத்ததற்கும் அதுவே காரணம்.

ஒரு அழகான பெண் தன்னை கடற்கரையில் வந்து சந்திக்கவும் என்று அழைத்தால் ஒரு இளைஞனுக்கு மகிழ்ச்சியாக இருக்கத்தானே செய்யும். ஆனால் அங்கு அவன் சந்திக்கும் பெண் வேறாக, குடிப்பழக்கம் உள்ளவளாக இருக்கிறாள். அவளைத் திருத்தி நல்ல பெண்ணாக மாற்றும் பொறுப்பு அவனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பெண்ணின் அப்பாவே அந்த வாய்ப்பைத் தருகிறார். ஆனால் அவர் எதிபாராத விஷயம் அங்கு நடக்கிறது.
கடற்கரையில் ஒரு அழகான பெண்ணும் இளைஞனும் அடிக்கடி சந்தித்தால் காதல் வருவது இயற்கைதானே. அந்தக் காதலுக்கு அவளது அப்பாவிடமிருந்தே எதிர்ப்பு வருகிறது. அவளுக்கு வேறு ஒருவனுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

இது ஒரு மெல்லிய காதல் கதை. அப்பாவின் பெண் என்ற தலைப்பு கொஞ்சம் வித்தியாசமானது. அப்பாவிப் பெண் என்பதும் அதில் மறைந்திருக்கிறது. அப்பாவின் பெண்ணாக இருக்கும் ஒரு பெண்ணை அப்பாவிப் பெண் என்று நினைத்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்தக் கதையின் அடிப்படை. பெண் என்பவள் சக்தியின் வடிவம் அல்லவா?.

முன்பு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருந்தது. ஆண்களுக்கு முன்னால் வரக்கூடாது. கல்வி அறிவு பெறக்கூடாது என்றெல்லாம் நடைமுறை இருந்தது. மகாகவி பாரதியும் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று பாடினான்.
ஆனால் இன்றுள்ள பெண்கள் நிறையவே மாறியிருக்கிறார்கள். ஆண்களுக்கு சமமாக நடைபோடுகிறார்கள். கல்வியிலும், அரசியலிலும், தொழில் வளர்ச்சியிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் ஆணுக்கு நிகராக பங்காற்றுகிறார்கள்.

என்றாலும் இன்னும் நம் நாட்டில் ஒரு பெண் எவ்வளவுதான் படித்திருந்தாலும் புத்திசாலியாய் இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையைத்தானே சுதந்திரமாகத் தீர்மானிக்க முடியாது என்பதுதான் எதார்த்தம்.
பெற்றோர்களின் நிர்ப்பந்தம் மற்றும் அவர்கள் மீதுள்ள பாசம், சொந்தக்காலில் நிற்க முடியாமல் இருக்கும் பொருளாதார நிலைமை ஆகியவற்றால் தனது விருப்பத்தையும் ஆசைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்பின் தெரியாத யாரோ ஒருவனுக்கு வாழ்க்கைப் படுகிறாள்.
அப்படி ஒரு சூழ்நிலை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஒரு பெண் என்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறாள். பிறகு எப்படித் தன் வாழ்க்கையைத் தானே நிர்மாணிக்கிறாள் என்பதுதான் இந்தக் கதை சொல்லும் செய்தி. அப்பாவின் பெண்ணாக இருப்பதில் தவறில்லை ஆனால் அப்பாவிப் பெண்ணாக இருக்கக்கூடாது என்பதைத்தான் இந்தக் கதையின் நாயகி வந்தனாவின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.
பெண்ணின் சக்தி மகத்தானது. அதை ஆராதிக்கத் தவறினால் பாதிப்பு அந்தப் பெண்ணுக்கல்ல என்று வாழ்ந்து காட்டுகிறது வந்தனாவின் பாத்திரப்படைப்பு. எல்லாம் விதி, தன் தலையெழுத்துப்படி நடக்கட்டும் என்று முடங்கி விடாமல் தன்னுடைய ஆளுமையால் தன் சுதந்திரத்தைத் தானே கட்டமைத்துக் கொள்ளும் ஒரு கதாபாத்திரம் வந்தனா.

இந்த நாவல் இப்போது அமேசானில் கிடைக்கிறது.

இங்கே சொடுக்கி வந்தனாவைச் சந்தியுங்கள்.

கிளினிக்கில் ஒருநாள் E book

16 அக்

Clinic - 4aKindle instant previews

இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அன்பர்கள் கிளினிக்கில் ஒருநாள் புத்தகத்தின் Preview வை பார்க்கலாம். படித்து விட்டு பிடித்திருந்தால் அமேசானின் இந்தப் புத்தகப் பக்கங்களில் மதிப்புரை (Review) செய்யலாம்.

E – book புத்தகம் இலவசம்

10 அக்

இந்திய நேரப்படி 10-10-2019 அன்று 12.30PM இலிருந்து 11-10-2019 அன்று 12.29PM வரை, இன்று ஒருநாள் மட்டும் அமேசான் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது. அன்பர்கள் படித்து விட்டு பிடித்திருந்தால் அமேசானின் இந்தப் புத்தகப் பக்கங்களில் மதிப்புரை செய்யவும்.

Clinic - 4a

கிளினிக்கில் ஒருநாள்  புத்தகத்தை டவுன்லோடு செய்ய இந்தப் படத்தை கிளிக் செய்யவும்.

 

நகைச்சுவை நாடகம்

 

 

 

Vazhkaiவாழ்க்கைத்தரம் புத்தகத்தை டவுன்லோடு செய்ய இந்தப் படத்தை கிளிக் செய்யவும்.

 

சிறுகதைத் தொகுப்பு

InspireInspire Yourself with real life stories புத்தகத்தை டவுன்லோடு செய்ய இந்தப் படத்தை கிளிக் செய்யவும்.

Inspiring Short stories