மகாலட்சுமி மந்திரம் – 23

16 ஏப்

மந்திரம் – 23

वर्षन्तु ते विभावरि दिवो अभ्रस्य विद्युतः ।
रोहन्तु सर्वबीजान्यव ब्रह्म द्विषो जहि ॥२३॥

வர்ஷந்து தே விபாவரி திவோ அப்ரஸ்ய வித்யுதஃ ।
ரோஹந்து ஸர்வபீஜாந்யவ ப்ரஹ்ம த்விஷோ ஜஹி ॥23॥

அர்த்தம்:

வர்ஷந்து – மழை

தே – உன்னுடைய

விபாவரி – கருணை ஒளி

திவோ – வானம்

அப்ரஸ்ய – இடி(யோசை)யுடன் மேகங்கள்

வித்யுதஃ – மின்னல்
ரோஹந்து – (உயர்ந்த ஆன்மீக தளத்துக்கு) வளரட்டும்

ஸர்வபீஜாந்யவ – வேறுபாட்டின் விதைகள்

ப்ரஹ்ம – அனைத்தும் அறிந்தவள்

த்விஷோ – விரோதம்

ஜஹி – அழிப்பாய்


பொருள்:

மகாலட்சுமி தாயே! இடியோசை, மின்னலுடன் மேகங்கள் மழையைப் பொழிவது போல் உன்னுடைய கருணை ஒளி எங்கும் பொழியட்டும். வேறுபாட்டின் விதைகள் யாவும் உயந்த ஆன்மீக தளத்துக்கு மேலோங்கி வளரட்டும். தெய்வநிந்தனை செய்வோரை விலக்கி ஓட்டுவாய்.

வெண்பா:

பாரினில்யா வும்செழிக்க மின்னலுடன் பெய்திடும்

மாரிபோல் நின்கருணை யைப்பொழிவாய்வீரியமாய்

ஆன்மீகம் மேலோங்கி வேறுபாடு நிந்தனைகள்

நீங்கிடயா வும்அறிந்த தேவி

விளக்கம்:

அன்னையே, வானில் இடியோசையுட்ன் மழை வரும்போது ஏற்படும் மின்னல்போல் உன்னுடைய கருணை ஒளி எங்கும் பரவச் செய்வாய்.

அதன் மூலம் வேறுபாட்டின் விதைகள் யாவும் உயர்ந்த ஆன்மீக தளத்தை நோக்கி வளரட்டும். அனைத்தும் அறிந்தவளும் எல்லா நிந்தனைகளையும் அழிப்பவளும் நீயே!

பின்னூட்டமொன்றை இடுக