மகாலட்சுமி மந்திரம் – 18

5 மார்ச்

மந்திரம் – 18

अश्वदायि गोदायि धनदायि महाधने ।
धनं मे जुषतां देवि सर्वकामांश्च देहि मे ॥१८॥

அஶ்வதாயீ கோதாயீ தநதாயீ மஹாதநே |

தனம்-மே ஜுஷதாம்-தேவி ஸர்வ காமாம்ஶ்ச தேஹி மே ||..18

அர்த்தம்:

அஶ்வதாயீ – குதிரைகளை அளிப்பவளே

கோதாயீ – பசுக்களை அளிப்பவளே

தநதாயீ – செல்வத்தை அளிப்பவளே

மஹாதநே – அளப்பரிய செல்வத்துக்கு அதிபதியானவளே

தனம் – செல்வம்

மே – எனக்கு

ஜுஷதாம்- மனம் மகிழந்து

தேவி – லட்சுமி தேவியே

ஸர்வ காமாம்ஶ்ச – அனைத்து ஆசைகளும் பூர்த்தியாகும் வகையில்

தேஹி மே – எனக்கு தந்தருள்வாய்

பொருள்:

செல்வம் தருபவளே, பசுக்களை தருபவளே, குதிரைகளை தருபவளே, அளப்பரிய செல்வத்தின் தலைவியே! தனலட்சுமியே! என்னுடைய அனைத்து ஆசைகளும் நிறைவேறி இகபர சுகம்பெற்று இனிதே நான் வாழவழி செய்யும் பெரும் நிதியை மனமுவந்து தந்தருவாய்..

வெண்பா:

செல்வம் பசுபரியா வும்தரும் லட்சுமியே

செல்வத்திற் கெல்லாம் தலைவியே – நல்வாழ்வு

நான்வாழ என்அனைத் தாசையும் தீர்ந்திட

வான்போல்நீ தந்தருள் வாய்

விளக்கம்:

வளமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான அனைத்து செல்வம், பசுக்கள், குதிரைகள் ஆகியவற்றைத் தந்தருள்பவளே! செல்வத்திற்கு அதிபதியே! தனலட்சுமியே!

இந்த உலக வாழ்வில் நான் சுகமாய் வாழ வழிசெய்யும் வகையில் அளவற்ற பொருட்களையும் செல்வத்தையும் என்னுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறும் வண்ணம் தந்தருள்வாய் தேவி.

பின்னூட்டமொன்றை இடுக