Tag Archives: சிறுகதை

சும்மா ஊதுங்க பாஸ் – E-book

23 நவ்

#AMAZON

Summa-newஇன்று (23-11-2019) பகல் 1.30 PM முதல் நாளை (24-11-2019) பகல் 1.29 வரை இந்தப் புத்தகம் அமேசானில் இலவசமாக கிடைக்கும்.

புத்தகத்தை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.

கிளினிக்கில் ஒருநாள் E book

16 அக்

Clinic - 4aKindle instant previews

இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அன்பர்கள் கிளினிக்கில் ஒருநாள் புத்தகத்தின் Preview வை பார்க்கலாம். படித்து விட்டு பிடித்திருந்தால் அமேசானின் இந்தப் புத்தகப் பக்கங்களில் மதிப்புரை (Review) செய்யலாம்.

E – book புத்தகம் இலவசம்

10 அக்

இந்திய நேரப்படி 10-10-2019 அன்று 12.30PM இலிருந்து 11-10-2019 அன்று 12.29PM வரை, இன்று ஒருநாள் மட்டும் அமேசான் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது. அன்பர்கள் படித்து விட்டு பிடித்திருந்தால் அமேசானின் இந்தப் புத்தகப் பக்கங்களில் மதிப்புரை செய்யவும்.

Clinic - 4a

கிளினிக்கில் ஒருநாள்  புத்தகத்தை டவுன்லோடு செய்ய இந்தப் படத்தை கிளிக் செய்யவும்.

 

நகைச்சுவை நாடகம்

 

 

 

Vazhkaiவாழ்க்கைத்தரம் புத்தகத்தை டவுன்லோடு செய்ய இந்தப் படத்தை கிளிக் செய்யவும்.

 

சிறுகதைத் தொகுப்பு

InspireInspire Yourself with real life stories புத்தகத்தை டவுன்லோடு செய்ய இந்தப் படத்தை கிளிக் செய்யவும்.

Inspiring Short stories

நகைச்சுவை நாடகம்

17 செப்

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது நோய்கள் நாட்டில் அவ்வப்போது உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றைக் குணப்படுத்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்களின் நோய் தீர்க்கும் புனிதமான பணியில் டாக்டர்கள் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் எனக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. ஒருவேளை மக்கள் எல்லோரும் கவலையின்றி, மகிழ்ச்சியாக, நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழும் ஒரு நிலை வந்தால் (அப்படி ஒரு நிலை வருவதற்கு வாய்ப்பில்லை என்றாலும்) எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
அதன் விளைவாக உதித்ததே இந்த நகைச்சுவை நாடகம்.

Clinic - 4a

நோயாளிகளை எதிபார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் டாக்டரின் கிளினிக்கில் ஒரு நாள் திருடன் புகுந்து விடுகிறான். அவனைத் தேடி போலீஸ் வருகிறது. அப்போது என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக நடத்திச் செல்கிறது இந்த மேடை நாடகம்.
ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அமேசான் தளம் நடத்தும் pen to publish 2019 என்ற போட்டிக்காக எழுதியது.

புத்தகத்தைப் படித்துவிட்டு தங்களது ரிவ்யூவை அமேசான் தளத்தில் தெரிவியுங்கள்

அமேசானில் நமது மின் நூல்கள்

5 செப்

Success

அமேசான் பக்கத்துக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்

Summa

அமேசான் பக்கத்துக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்

ஆகஸ்டு 6,7 மற்றும் 8 தேதிகளில் இந்தப் புத்தகம் கிண்டிலில் இலவசமாக கிடைக்கிறது.

மனித நேயம்

16 ஜன

சிறுகதை

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (14-01-2018) நான் எழுதிய மனித நேயம்’ என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தக் கதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும் மனித நேயம்

திண்ணைக்கு நமது நன்றி!

மற்ற கதைகளைப் படிக்க இந்த தலைப்பை சொடுக்கவும் கதைகள்

பாவக்கணக்கு

11 ஜன

சிறுகதை

“என்னங்க, ஆபீஸிலிருந்து வரும்போது இரண்டு நாளைக்கு காய்கறி வாங்கிட்டு வந்திடறீங்களா?”

“ஏன் இன்னிக்கி நீ மார்க்கட்டுக்கு போகலியா”

“எனக்கு உடம்பு முடியலீங்க. புதன்கிழமை போய் வாங்கிக்கிறேன். இன்னிக்கு நீங்க வாங்கிட்டு வந்துருங்க”

மாதத்தில் இப்படி இரண்டு தடவையாவது கணேசனுக்குப் போன் பண்ணுவாள் அவருடைய மனைவி கமலா. வீட்டில் இவர்கள் இருவர் மட்டும்தான். ஒரே மகளுக்குப் போன வருடம்தான் திருமணம் ஆனது.. வெளியூரில் இருக்கிறாள்.

ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகிற வழியில், ஜெயா மெடிக்கல்ஸ் பக்கத்தில் ஒரு வண்டியில் காய்கறிகள் விற்றுக் கொண்டிருப்பான் ரங்கன். அவனிடம்தான் கணேசன் எப்போதும் வாங்குவார். முக்கியமாக முருங்கைக்காய் சதைப் பற்றுதலாக இருக்கும். ரிலையன்ஸில் காய் கொஞ்சம் முத்தலாக இருக்கிறதென்று கமலா சொல்வாள். பழமுதிர்சோலையில் விலை அதிகம் என்பாள்.

ரங்கன் ஒரு சாக்குப் பையிலிருந்து சாம்பார் வெங்காயத்தை ஒரு பெட்டியில் தட்டிக் கொண்டிருந்தான். அவனது மனைவிதான் எடை போட்டு கணக்குப் பார்த்து பணம் வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் மனதிலேயே கணக்குப் போடுவாள். சரியாக இருக்கும் கில்லாடி.

வலதுபுறத்தில் தக்காளி பளிச்சென்று இருந்தது. தக்காளி மலிவாக இருந்தால் கொஞ்சம் அதிகமாகவே வாங்கிக் கொள்ளலாம். தக்காளிச் சட்னி கமலா பிரமாதமாக வைப்பாள்.

“ஒரு தட்டு கொடுங்க”

அவள் ஒரு தட்டை நீட்டினாள். அதில் தக்காளியை எடுத்து நிரப்பினார். எடை போடுவதற்கு எடுத்துக் கொடுத்து, “சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ போடும்மா” என்றார்.

“ஐயா, சாம்பார் வெங்காயம் அரை கிலோ அம்பது ரூபா” என்றான் ரங்கன்.

“கிலோ நூறு ரூபாயா”

“அதுக்கே இப்ப டிமான்டு சார்”

“சரி கால் கிலோ கொடு போதும்” இங்கு வெங்காயமும் நன்றாக பெரியதாக இருக்கும்.

மேலும், முட்டைக் கோஸ், அவரைக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் எல்லாம் வாங்கிக் கொண்டு, “ஐந்து ரூபாய்க்கு பச்சை மிளகாய், அப்புறம் கருவேப்பிலை கொத்துமல்லி” என்றார் கணேசன்.

கணேசன் மனதிற்குள்ளேயே கணக்குப் போட்டார். தொன்னூறு ரூபாய் ஆகிறது. “சரி, எவ்வளவு ஆச்சு?” என்றார் அவளிடம்.

கடைக்கார அம்மாள் எல்லாவற்றையும் பையில் போட்டு, கணவனைப் பார்த்து, “ஏங்க, இவருக்கு எவ்வளவு ஆச்சுனு கணக்குச் சொல்லுங்க” என்றாள்.

ரங்கன் பையில் உள்ள அயிட்டங்களை வைத்து கணக்குப் பார்த்து, “மொத்தம் எண்பத்தைந்து ரூபாய் ஆகிறது” என்றான்.

ஐந்து ரூபாய் குறையாகச் சொல்கிறானே என்று மனதில் நினைத்தவாறே ரூபாயை எடுத்துக் கொடுத்தார். தொன்னூறு ரூபாய் அல்லவா வருகிறது. அவனிடம் சொல்லலமா என்று யோசித்தார். ஆனால் சொல்லவில்லை. அவன் லாபத்தோடுதானே விற்கிறான். நாம்தான் இவ்வளவுக்கு வாங்கி இருக்கிறோமே ஐந்து ரூபாய் தள்ளுபடி செய்தது போல் இருக்கட்டுமே.

வீட்டிற்கு வந்து கமலாவிடம் சொன்னார்.

“அந்த ஐந்து ரூபாயைக் கொடுத்திருக்கலாமே. சரி, அடுத்த முறை போகும் போது ஞாபகமாகக் கொடுத்து விடுங்கள்”

இது நடந்து நாலு நாட்களுக்குப் பிறகு, புதிதாகத் திறந்திருக்கும் போத்தீஸுக்குப் போய்விட்டு வரலாம் என்று கிளம்பினார்கள். கடை முழுக்க ஒளி வெள்ளம். எஸ்கலேட்டரில் மேலும் கீழுமாக ஒவ்வொரு மாடிக்கும் போகும் போது ஒரே பிரமிப்பாக இருந்தது.

எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும் மற்ற கடையை விட விலை அதிகமாக இருப்பது போல் தோன்றியது. கமலா தேவையென்று எடுத்துக் கொண்ட பொருட்களுக்கு கம்ப்யூட்டரில் பில் போட்டு, பணத்தை கட்டி விட்டு வெளியே வந்தார்கள். வெளியே சாட் அயிட்டங்கள் விற்ற இடத்தில் கூட்டம் மொய்த்தது. எப்படியோ இரண்டு பேல்பூரி வாங்கி வாந்தார் கணேசன்.

“நன்றாக இருக்கிறது. விலைதான் கொஞ்சம் அதிகம்”

“விலையைப் பார்த்தால் முடியுமா. சரி, வாங்க போகலாம்”

வீடு இருக்கும் தெரு முனையின் திருப்பத்தில் ஒரு மூன்று சக்கர சைக்கிளில் மேலே கலர் கலராய் குடை விரித்து உள்ளே பேட்டரி லைட் வெளிச்சத்தில் ஒருவன் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தான்.

“ஏங்க, ஐஸ் வாங்கிட்டு வாரீங்களா, நான் முன்னாடி வீட்டுக்குப் போயிடறேன்”

ரோட்டைக் கடந்து, அந்த வண்டிக்காரனிடம், “எவ்வளவு” என்றார்.

“எவ்வளவுக்கு வேணும். இருபத்தைந்து, முப்பது, அம்பது”

“கப் ஐஸா, சாக்கோபாரா”

“எல்லாமே இருக்கிறது. எவ்வளவுக்கு வேணும்”

“சாக்கோபார் எவ்வளவு”

“இருபத்தைந்து”

“சரி, ரெண்டு கொடு”

ஐமபது ரூபாயைக் கொடுத்து விட்டு நான்கு வீடு தள்ளி இருக்கும் தன் வீட்டுக்கு வந்தார்.

ஐஸை சாப்பிட்டு முடித்த பிறகு,

“நல்லா இருக்குங்க. கம்பெனி ஐஸ் போல” என்றாள் கமலா.

“கம்பெனி ஐஸ்தான். நல்ல குவாலிட்டி” என்று சொல்லிவிட்டு, அந்த ஐஸ் வைத்திருந்த அட்டையை எடுத்துப் படித்துப் பார்த்தார். அதிச்சி.

அதில் அதிகபட்ச விலை பதினைந்து ரூபாய் என்று போட்டிருந்தது.

“ஐயய்யோ, பதினைந்து ரூபாய் ஐஸை, இருபத்தைந்து ரூபாய் என்று சொல்லி ஏமாற்றி விட்டானே”

“நீங்க வாங்கும்போது கவனிக்கலையா”

“அங்கே இருட்டாக இருந்தது. பக்கத்தில்தானே, நான் போய் அவனிடம் கேட்டு விட்டு வருகிறேன்”

“வேணாம் விடுங்க. போனாப் போகுது. அன்னிக்கு அந்தக் காய்கறிக் காரனுக்கு ஐந்து ரூபாய் கொடுக்காதது, இப்போ இருபது ரூபாய்க்கு வேட்டு வைத்து விட்டது. அந்தப் பாவம் தொலைந்தது என்று விடுங்கள்”.

அன்று இரவு முழுக்க கணேசனுக்குத் தூக்கம் வரவில்லை.

பாசத்தின் விலை – சிறுகதை

17 அக்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (16-10-2016) நாம் எழுதிய ‘பாசத்தின் விலை’ என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தக் கதையின் சுருக்கம் இதோ

 

தந்தை இறந்த பின் தாயைப் பராமரிக்க வேறு வேறு காரணங்களைச் சொல்லி, அவருடைய மூன்று மகன்களும் தட்டிக் கழிக்கிறார்கள். அப்போது அவரது மருமகன் அனைவரிடமும் பேசுகிறார். அதன் முடிவில் மூன்று மகன்களும் தாயைக் கவனித்துக் கொள்வதற்கு ஆர்வத்துடன் முன் வருகிறார்கள்.

அப்படி அவர்கள் மாறும் வகையில் என்ன நடந்தது? அதுதான் இந்தக் கதை.

அந்தக் கதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும் பசத்தின் விலை

திண்ணைக்கு நமது நன்றி!

கெட்டிக்காரன் – சிறுகதை

29 பிப்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (29-02-2016) நாம் எழுதிய ‘கெட்டிக்காரன்’ என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தக் கதையின் சுருக்கம் இதோ

ஆனந்த் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன். அவனுடைய சைக்கிள் காணாமல் போகிறது. பிறகு இரண்டு நாட்களில் திரும்பக் கிடைக்கிறது.

இடையில் நடந்தது என்ன?

அதைக் கண்டு பிடிக்கிறார் அவனுடைய மாமா. 

சைக்கிள் தொலைந்த காரணத்தையும் அது திரும்பக் கிடைத்த விதத்தையும் அவர் விளக்கும்பொது ஆச்சரியம் ஏற்படுகிறது.

ஆமாம்! இதில் யார் கெட்டிக்காரன்?

அந்தக் கதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும் கெட்டிக்காரன்

திண்ணைக்கு நமது நன்றி!

நாய் இல்லாத பங்களா

8 ஜூன்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (07-06-2015) நாம் எழுதிய ‘நாய் இல்லாத பங்களா’ என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தக் கதையின் சுருக்கம் இதோ

நாய் என்றால் பயப்படும் ஒருவர் சொல்வதாக இந்தக் கதை செல்கிறது.

வேலை விஷயமாக காவலுக்கு நாய் எதுவும் இல்லாத ஒரு பங்களாவிற்குச் செல்கிற அவர், அங்கு திடீரென்று ஒரு நாய் ஓடித்திரிவதைப் பார்த்து திகைத்து விடுகிறார். அந்த நாயிடம் கடி வாங்காமல் தப்பிக்கிறார்.

மறுபடி அந்தப் பங்களாவுக்குப் போகக்கூடாது என்று முடிவெடுத்திருந்த நிலையில் அங்கு நாய் இல்லை என்று உறுதி கூறி பங்களா மானேஜர் வரச்சொல்கிறார். அங்கு போன பிறகு அதே நாய் மறுபடி அந்த பங்களாவில் இருக்கிறது என்பது தெரிகிறது. அங்கு அவர் வேலையில் இருக்கும்போது திடீரென அந்த நாய் முன்னால் வந்து நிற்கிறது. அந்த நாயிடமிருந்து  கடிபடாமல் அவர் தப்பித்தாரா? இல்லையா?

அந்தக் கதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும் நாய் இல்லாத பங்களா

திண்ணைக்கு நமது நன்றி!