யோகசூத்திரம் பதவுரை – ஒரு முயற்சி

26 மே

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

இந்த வார வெண்பா – 15

பதஞ்சலி மாமுனியின் பாதம் பணிந்து

பதவுரை தந்திட யானும் – இதந்தரும்

வார்த்தையில் வெண்பா வடித்தேன் அதைஉணர்ந்து

பார்த்தோர் தமக்குப் பலன்

 

பொருள்:

பதஞ்சலி மகரிஷி அருளிய யோக சூத்திரம் நான்கு பாதங்களைக் கொண்டது. அதில் உள்ள ஒவ்வொரு சூத்திரமும் யாவரும் அறிந்து பயன்பெறத் தக்கது. பதஞ்சலி மகரிஷியின் பாதங்களைப் பணிந்து அவரின் ஆசியை வேண்டுகிறேன். நானறிந்த வரையில் அந்த சூத்திரங்களில் சிலவற்றுக்கு தெளிவுரையை இங்கே வெண்பாக்களாக தர முயற்சிக்கிறேன். அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை.

பிறகு ஏன் இந்த முயற்சி என்று கேட்டால் எனக்கே நான் அறிந்தவற்றை நினைவு படுத்திக் கொள்ளும் முயற்சியாகவே இதைக் கருதுகிறேன். எனவே பல அறிஞர்கள் எழுதியவற்றைப் படித்து அறிந்து கொண்ட கருத்துக்கள் மற்றும் நான் புரிந்து கொண்டவை ஆகியவற்றையே இங்கு குறிப்பிடுகிறேன். ஆனால் அந்த சூத்திரங்களைப் படித்து ஆழமாக சிந்திப்பவர்களுக்கு மற்றொரு பொருளும் அறியக் கிடைக்கலாம் பதஞ்சலியின் யோக சூத்திரங்களை நன்றாக உண்ர்ந்து பார்ப்பவர்கள் பலன் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

இந்தக் கருத்துக்களில் ஏதாவது பிழை இருந்தால் அது என்னையெ சாரும். நிறைகள் எல்லாம் பதஞ்சலி மகரிஷியையும் மற்றும் கற்றறிந்த அறிஞர்களையும் சாரும்.

 

Advertisements

2 பதில்கள் to “யோகசூத்திரம் பதவுரை – ஒரு முயற்சி”

  1. krishnamoorthys மே 26, 2015 இல் 6:05 முப #

    அற்புதமான துவக்கம் ..

    • rasippu மே 26, 2015 இல் 8:59 முப #

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: