அன்னையின் தரிசனம் பெற

16 மார்ச்

இதுவரை வெண்பா – 1 2 3 4

இந்த வார வெண்பா – 5

பாடத்தின் ஞானம் பிறவிக்கடல் நீந்திட

ஓடத்தின் நீள்துடுப்பாய் மாறிடும் – வேடம்

அவசியமே இல்லை அருள்மிகு அன்னை

அவளின் தரிசனம்பெற் றிட

 பொருள்:

அன்னையின் அருளால் ஞானப் பாடலாய் உருவாகும் கருத்துக்கள் மனித குலத்துக்கு பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் துடுப்பாக மாறி உதவும். பலவித வண்ண உடைகளைத் தரித்து ஆன்மீக வாழ்வில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை. அப்படி தரிப்பதிலும் தவறு எதுவுமில்லை. அது அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. சித்தர்கள் பலர் வெறும் கோவணம் மட்டுமே உடுத்தி நடமாடினார்கள். ஆனால் சாதாரண மனிதரைப் போலவே தோற்றம் கொண்டு வாழுபவர்களும் இருக்கிறார்கள். அதே போன்று மற்ற மனிதர்களிடமிருந்து தோற்றத்தில் வேறுபடாமல் இக வாழ்வில் தத்தம் கடமையை முறையாகச் செய்து வந்தாலும் அன்னையில் அருளால் காண்பதற்கரிய அன்னையின் திவ்ய தரிசனம் பெறலாம்.

நம் வாழ்விலும் பலரைப் பார்க்கலாம். ஆனால் அவர்களை சரியாக உணர்ந்து கொள்வதற்கு அன்னை அருள் வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: