சுயநலமின்றி வாழ்ந்தால் புண்ணியம்

7 செப்

அந்தாதி வெண்பா1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

24 25 26

இந்த வார வெண்பா – 27

பயனைப் பெரிதாய் கருதாமல் என்றும்

சுயநலம் இன்றியே வாழு – தயவினை

நாடியே வந்தவர்தம் துன்பமது நீக்கினால்

தேடியே புண்ணியம் சேரும்

பொருள்:

யோகத்தால் வரும் பயனை மட்டுமே கருதி சுயநலத்துக்காக அதைப் பழகாமல், பிறருக்கு உதவ அதை ஒரு வாய்ப்பாகக் கருதி வாழ வேண்டும். துன்பத்தால் தவித்து அதிலிருந்து விடுபட வேண்டி தம்மை நாடி வருபவர்களின் துயரத்தை துடைப்பதை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால், எல்லாப் புண்ணியங்களும் தேடி வந்து சேரும்.

Advertisements

2 பதில்கள் to “சுயநலமின்றி வாழ்ந்தால் புண்ணியம்”

  1. Kanniappan Kanniappan ஜூலை 22, 2016 இல் 5:46 முப #

    ஈற்றடியில் ஈற்றுச்சீர் ’சே/ரும்’ – நேர்/நேர் – மாச்சீர் என்று வராது. இதில் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடில் வரும்.

    இந்த வார வெண்பா – 27

    இரு விகற்ப நேரிசை வெண்பா

    பயனைப் பெரிதாய் கருதாமல் என்றும்
    சுயநலம் இன்றியே வாழு – தயவினை
    நாடியே வந்தவர்தம் துன்பமது நீக்கிநீ
    தேடியே புண்ணியம் சேர்.

    சேர் – ’நாள்’ என்பது வாய்பாடு. .

    • rasippu ஓகஸ்ட் 1, 2016 இல் 8:42 முப #

      அய்யா,

      தங்களது ஆலோசனைப்படி தாங்கள் குறிப்பிட்ட பாடல்களில் மாற்றம் செதிருக்கிறேன். ஆனால்,

      பயனைப் பெரிதாய் கருதாமல் என்றும்
      சுயநலம் இன்றியே வாழு – தயவினை
      நாடியே வந்தவர்தம் துன்பமது நீக்கினால்
      தேடியே புண்ணியம் சேரும்

      என்ற வெண்பாவில் ஈற்றடி `சேரும்’ என்பது காசு என்ற வாய்ப்பாட்டில் வருவது சரியானது என்று கருதுகிறேன்.
      நிரையசை முன் மாச்சீர் வருவது சரியானதுதானா, தங்களது மேலான ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.

      நன்றி! வணக்கம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: