மகாலட்சுமி மந்திரம் – 17

26 பிப்

மந்திரம் – 17

पद्मानने पद्म ऊरु पद्माक्षी पद्मासम्भवे ।
त्वं मां भजस्व पद्माक्षी येन सौख्यं लभाम्यहम् ॥१७॥

பத்மாநநே பத்ம ஊரூ பத்மாக்ஷீ பத்மா – ஸம்பவே | த்வம் மாம் பஜஸ்வ பத்மாக்ஷீ யேந ஸெளக்யம் லபாம்யஹம் ||..17 ||.

அர்த்தம்:

பத்மானநே – தாமரை போன்ற முகமும்

பத்ம –தாமரைத் தண்டு போன்ற

ஊரூ – தொடை (கால்கள்)

பத்மாக்ஷீ – தாமரை போன்ற கண்களை உடைய

பத்மா-ஸம்பவே – தாமரையில் அவதரித்தவள்

த்வம் – உன்னை

மாம் – நான்

பஜஸ்வ –பக்தியுடன் (வேண்டுகிறேன்(

பத்மாக்ஷீ – தாமரை போன்ற கண்களை உடையவளே

யேந – எதனால் (யாரால்)

ஸெளக்யம் – வளமான வாழ்க்கை (கிடைக்குமோ)

லபாம்யஹம் – எனக்கு அதை தந்தருள்க

பொருள்:

தாமரைபோன்ற முகமும், கண்களும், கால்களும் எழிலாய் அமையப் பெற்றுச் செந்தாமரையில் தோன்றியவளே! எவ்வெப் பொருள்களால் நான் வாழ்க்கையில் வளம்பெற்று வாழ்வேனோ, அவ்வப் பொருள்களை எனக்குத் தந்தருள வேண்டுகிறேன்.

வெண்பா:

தாமரைக்கண் தாமரைப்பூ வாய்வதனம் மற்றும்செந்

தாமரைத் தண்டுகால்கள் கொண்டுசெந் – தாமரையில்

தோன்றியவ ளேநான்வாழ் வாங்குவாழ பொன்பொருள்

போன்றவற்றைத் தந்தருள் வாய்

விளக்கம்:

தாமரை போன்ற அழகான முகம் கொண்டவள் அன்னை லட்சுமி. அவள் கண்கள் தாமரை மலரைப் போன்றவை. அவள் கால்களும் தாமரைத் தண்டு போன்றவை. அந்த மஹாலட்சுமி தோன்றியதும் செந்தாமரையில்தான்.

தாமரைபோன்ற முகமும், கண்களும், கால்களும் (தொடைகளும்) பெற்று தாமரை மலரில் அவதரித்த அன்னை மஹாலட்சுமியே உன்னை வேண்டுகிறேன்.

எந்தப் பொருட்களையெல்லாம் பெற்றால் நான் வளமாய் வாழ்வேனோ, எவையெல்லாம் நான் வளமாக வாழ்வதற்குத் தேவையோ அந்தப் பொருட்களை எனக்குத் தந்து அருள்வாய்.

பின்னூட்டமொன்றை இடுக