Tag Archives: ஜலதோஷம்

ஜலதோஷத்திற்கு ஒரு எளிய வைத்திய முறை

4 பிப்

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த இடுகை வருகிறது. இடையில் எழுத்து உட்பட பல விதமான வேலைகள். இந்த இடுகை ஒரு எளிய பாட்டி வைத்தியம் போன்ற  விஷயம் பற்றியது. எங்கோ படித்தது… இயற்கை உணவு உலகம் என்று ஞாபகம்… அது எனக்கு நல்ல பலனைக் கொடுத்ததால் மற்றவர்களுக்கும் (நம்புபவர்களுக்கு மட்டும்) அறியத் தரலாமே என்பது இதன் காரணம்.

ஏற்கெனவே ஒரு இடுகையில் சொன்னதுபோல் மனிதனுக்கு தொந்திரவு தரும் ஒரு வியாதி(?) ஜலதோஷம். அதிலும் குளிர்காலம் வந்து விட்டால்,. ரஜினி சொல்வது போல் எப்போது வரும் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் திடீரென்று வரும், வந்தால் ஒரு நான்கு நாட்களுக்காவது படுத்தி எடுத்து விடும்.

எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் ஆரம்பிக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால் ஆஸ்த்துமா, வீசிங் பிரச்சினை இருப்பவர்கள் கதை வேறு. ஆனால் பொதுவாக சாதாரண ஜலதோஷம் திடீரென்று ஏதோ ஒரு ஒவ்வாமையினால் தோன்றலாம். கல்யாணத்திற்குப் போய் சாப்பிட்டு முடித்தவுடன் தாராளமாக கிடைக்கும் ஐஸ்கிரீமை ஒரு கை பார்த்து விட்டு அடுத்து இரண்டு மூன்று நாட்களுக்கு தும்முவது போல.

எனக்கு அப்படித்தான் ஆரம்பிக்கும். ஆரம்ப கட்டத்தில் மூக்கில் லேசான குறுகுறுப்பு ஒருவித எரிச்சலைக் கொடுக்கும். பேசுவதில் சிரமம் தெரியும். அந்த அவஸ்தையை கடந்து விட்டால் அடுத்து லேசான தலைவலி, மூக்கடைப்பு. அதன் பிறகு மற்ற வழக்கமான அவஸ்தைகள்.

இந்த ஆரம்ப கட்டம்தான் நாம் கவனிக்க வேண்டியது. மூக்கில் லேசான குறுகுறுப்பு அல்லது ஜலதோஷத்திற்கு முந்தைய லேசான தலைவலி ஆரம்பித்த உடனே நாம் இந்த வைத்தியத்தை முயற்சிக்கலாம். செலவு அதிகமில்லாத எளிய மருத்துவம்.

பெண்கள் வீட்டில் முகத்தில் பூச மஞ்சள் வைத்திருப்பார்கள். (மஞ்சள் பூசும் பழக்கம் இப்போது இருக்கிறதா?) இல்லையென்றால் கடையில் வாங்கிக் கொள்ளலாம். அப்புறம் சிறிது வெள்ளை சுண்ணாம்பு. அவ்வளவுதான்.

இரவு படுக்கப் போகுமுன், சிறிது மஞ்சள் (கால் டீ ஸ்பூனுக்கும் குறைவாக) எடுத்து ஒரு சிறிய பிளாஸ்டிக் மூடியில் போட்டு ஒரு மிளகு அளவுக்கு வெள்ளை சுண்ணாம்பை அதனுடன் கலந்து நாலைந்து சொட்டு நீர் விட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் திக் பேஸ்ட் ஆகவோ, தண்ணீராகவோ ஆகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையை எடுத்து மூக்கைச் சுற்றி பூசிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நெற்றியிலும் தடவிக் கொள்ளலாம். அவ்வளவுதான். நேரமாக ஆக அது கொஞ்சம் கொஞ்சமாக உலரும். இரவில் நன்றாக உறங்கி காலையில் விழித்தால் ஜலதோஷம் போயே போச்சு.

உலர்ந்த தூள் கண்களில் படாமல் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளவும். லேசாக கண்களில் விழுந்து உறுத்தினால் உடனே தண்ணீர் விட்டு கண்களை கழுவி விடலாம். சுண்ணாம்பு அதிகமானால் சிறிது எரிச்சல் இருக்கும். கவனம் தேவை.

இந்த முறையில் உட்கொள்ள எதுவுமில்லை. அதனால் பக்க விளைவுகள் கிடையாது. அதிக செலவுமில்லை. சில நாட்களாக உபயோகிக்கிறேன். ஒரே ஒரு பிரச்சினை மட்டும் உள்ளது. முகத்தில் கிரிக்கெட் வீர்ர்கள் தடவிக் கொள்வது போல ஒருவித வேஷம் போலத் தோன்றலாம். அதனால் மற்றவர்கள் பார்க்காத வேளைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டி இருக்கும்.

இந்த வழிமுறையை இணையத்தில் தந்தவர்களுக்கு (அகத்திய முனிவர் சொன்ன வைத்திய முறை என்று எழுதி இருந்ததாக ஞாபகம்) நமது நன்றி!

Advertisements

எது விலை அதிகம்? எது விலை குறைவு?

1 ஆக

நமது அழைப்பினை ஏற்று கவிஞர் கடிவேலு வந்தார். வழக்கம்போல உள்ளே நுழைந்ததும் அப்பு….. வணக்கம்ப்பு…..  என்றார். அவரை வரவேற்று உட்காரச் சொன்னோம். நல்லதொரு மருத்துவத்தை சொல்லி நம்மை ஜலதோஷத்திலிருந்து விடுதலை பெற உதவியதற்காக கவிஞர் கடிவேலுவிடம் நமது நன்றியை தெரிவித்தோம். உடனே அவர்,

இன்பத்தை எழுதும் கூர்நிறைந்த

      பென்சிலாக இல்லாவிடினும் – மற்றவர்தம்

துன்பத்தை அழிக்கும் வெண்ணிறத்து

      மென்ரப்ப ராகவாவது மாறிவிடு

என்று ஒரு கவிதையைச் சொல்லி இதுதான் நமது கொள்கை என்றார். எப்படியெல்லாம் உவமையில் விளையாடுகிறார் என்று ஆச்சரியப்பட்டேன்.

பின் அவர் பரிந்துரைத்த BIO C மாத்திரையைப் பற்றி மேலும் சில விபரங்கள் சொல்ல வேண்டும் எனக் கேட்டேன். ஒரு பாடமே எடுத்து விட்டார். இதோ அவர் சொன்னது:

பொதுவாக வைட்டமின் என்று சொன்னாலே அது இப்போது வைட்டமின் `C யைத் தான் குறிக்கிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக, நமது உடலில் 300 வகையான செயல்பாடுகளுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. இருதய நோய், கேன்சர் போன்ற தீவிரமான நோய்களிலிருந்து வைட்டமின் `C நம்மை பாதுகாக்கிறது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. மேலும் அது இல்லாவிட்டால் எந்த நோயிலிருந்தும் குணமடைவது கடினம்.

நமது தசைகளில் இருக்கும் கொலாஜன் என்ற பஞ்சு போன்ற தசைப்பகுதி உற்பத்தி ஆவதற்கே வைட்டமின் `C தேவைப்படுகிறது. உடலில் எங்காவது வெட்டுக்களோ, காயமோ ஏற்பட்டால் இந்த கொலாஜன்தான் அதை சரி செய்ய உதவுகிறது. நமக்கு ஒரு உருவம் கொடுக்கவும், உடல் உறுப்புக்களை சரியான வடிவத்தில் வைத்திருக்கவும் கொலாஜன்தான் உதவுகிறது. எனவே போதுமான அளவு வைட்டமின் `C இல்லையென்றால் இதெல்லாம் நடைபெறாது.

மேலும் ஃபோலிக் ஆசிட் போன்ற சில வைட்டமின்களையும் இரும்புச் சத்து போன்ற சில தாதுக்களையும் உடல் கிரகித்துக் கொள்ளவும், உடலில் அதன் பயன்பாட்டை அதிகப்படுத்தவும் வைட்டமின் `Cதேவைப்படுகிறது. சரியான அளவில் வைட்டமின் `Cஇருந்தால் அது உடலின் எதிர்ப்பு சக்தியைக் கூட்டி ஜலதோஷம் போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை அளிக்கிறது. எனவே, இது மனிதனைத் தாக்கும் வைரஸை தடுக்கிறது என்ற சொல்ல முடியாவிட்டாலும், விரைவில் குணமடைய வைட்டமின் `Cஉதவுகிறது என்பது நிச்சயம்.

மேலும் ஒருவர் சுறுசுறுப்பு குறைவாகவும், ரொம்ப சோர்வாகவும் இருந்தாலோ, உணர்ந்தாலோ, வைட்டமின் `Cகுறைபாடுதான் காரணம் என்று தெரிந்து கொள்ளலாம். சரிவிகித உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளும்போது இந்த குறைபாடு நீங்குகிறது. இதில் ஒரு விசேஷம் என்றவென்றால் அதிகப்படியான வைட்டமின் `Cஉடலில் இருந்தாலும் ஆபத்து எதுவுமில்லை. அந்த அதிகப்படியான வைட்டமின் `Cதானாக வெளியேற்றப்பட்டு விடும்.

நிறைய காய்கறி மற்றும் பழங்களில் வைட்டமின் `Cகிடைக்கிறது. எலுமிச்சை, நெல்லிக்காய், மிளகு, அஸிரோலா செர்ரி பழங்கள் போன்றவை சிறந்த உதாரணங்கள். ஆனால், இது தண்ணீரில் கரையும் வைட்டமின் என்பதால், அதை சமைக்கும் போது அதிகமான நேரம் கொதிக்க வைப்பதால், தன்னுடைய வீரியத்தை இழந்து விடுகிறது. அதனால் நேரடியாக அதை சாப்பிடுவதை விட துணை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நல்ல பலன் கிடைக்கிறது. முக்கியமாக உடலில் உள்ள செல்களை, வளர்சிதை மாற்றத்தின் போது ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

வெளி மார்க்கெட்டில் நிறைய வைட்டமின் `Cகிடைக்கிறது என்றாலும், அது செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது என்பதால், உடல் அதை கிரகித்துக் கொள்வது மிக மெதுவாகவே நடைபெறும், பக்க விளைவுகளையும் உண்டாக்கும். அதனால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட BIO C யே சிறந்தது. அது பக்க விளைவுகள் இல்லாதது. மேலும் உடனே உடலில் கிரகித்துக் கொள்ளப்படுவதால், விரைவில் பலன் கிடைக்கிறது. செல்களை பாதுகாத்து நீடூழி வாழ வகை செய்கிறது.

இவ்வாறு கவிஞர் கடிவேலு சொல்லி முடித்தார். அவர் சொன்ன விஷயங்கள் முழுவதுமாக புரியாவிட்டாலும், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட்து என்பதும், பக்க விளைவுகள் இல்லாதது என்பதும் புரிந்தது. ஆனால் நமது மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை மீண்டும் கேட்டேன். “எல்லாம் சரிதான்! ஆனால் விலைதான் கொஞ்சம் இடிக்கிறது. இவ்வளவு செலவு செய்து இதை பயன்படுத்த வேண்டுமா?” என்றேன்.

உடனே கவிஞர் சிரித்தார். “விலை அதிகம் அல்லது குறைவு என்று எதை வைத்து தீர்மானிக்கிறீர்? எல்லாம் மனித மனத்தில் ஏற்படும் ஒரு வினோதமான மாய பிம்பம்தான். ஆனால் தரமான பொருளுக்கு விலை கொஞ்சம் அதிகம் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக, காரில் கியர் சரியாக விழவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதை சரி செய்ய 2000 ரூபாய் ஆகும் என்கிறார் தொழிலில் அனுபவம் மிக்க மெக்கானிக். இதற்குப் போய் இரண்டாயிரம் ரூபாயா? என்று வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மெக்கானிக்கிடம் கேட்கிறீர்கள். அவன் 900 ரூபாய்தான் கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இப்போது 2000 ரூபாய் என்பது அதிக விலை போலத் தோன்றும். ஆனால் நாளை, அனுபவமில்லாத மெக்கானிக் 900 ரூபாய்க்கு செய்த வேலையினால் கியர் பிரச்சினையாகி விபத்து நேரிட்டால், அப்போது எவ்வளவு பணம் செலவாகும்? ஒருவேளை உயிருக்கே ஆபத்தாக முடிந்தால்? இப்போது சொல்லும் 2000 ரூபாய் விலை அதிகமா?” என்று நம்மையே திருப்பிக் கேட்டார்.

நம்மால் பதில் சொல்ல முடியவில்லை. இந்த கவிஞர் கடிவேலு இப்போதெல்லாம் நன்றாகவே பேசுகிறார்.

ஜலதோஷமா? கவலை வேண்டாம்! ஒரு அதிசய அனுபவம்!

30 ஜூலை

சமீபத்தில் வெளிவந்த ஒரு சினிமாவில் காமெடிக் காட்சி வருமே, “விடுப்பா, விடுப்பா, பஞ்சாயத்துன்னா லைட்ட வைக்கிறதும், படத்தோட முடிவுல ஃபைட்ட வைக்கிறதும் சகஜந்தானப்பா” என்று ஒருவர் சம்பத்தமேயில்லாமல் பேசுவார். ரசிக்கும்படி இருக்கும்.

அதுபோல, தினம் தினம் ஒரு மணி நேரம் கரண்ட் போறதும், மாதம் ஒரு நாள் ஷட் டவுன் (Power Shut down) ஆகுறதும் சகஜந்தானப்பா என்று சொல்லும்படி ஆகி விட்டது சென்னை வாழ்க்கை. ஒரே ஒரு ஆறுதல், முதல் நாள் தினசரி பத்திரிக்கையில் அடுத்த நாள் எந்த ஏரியாவில் முழுநேரமும் கரண்ட் இருக்காது என்று தெரிவித்து விடுவார்கள்.

ஆனால் சென்ற புதன்கிழமை ஷட் டவுன் என்பதை நான் கவனிக்கத் தவறி விட்டதால் அன்று ஆபீஸ் போன பின்புதான் மின்சாரம் இல்லையென்பது தெரிந்தது. சரியென்று வீட்டுக்குத் திரும்பினேன். ‘வீட்டிலேயே இருக்க மாட்டேங்கிறீர்களே’, என்ற மனைவியின் அன்பான அங்கலாய்ப்பை இன்றாவது நிவர்த்தி பண்ணலாம் என்று ஒரு எண்ணம்.

வீட்டில் ரொம்ப நாள் கவனிக்காமல், செய்வதற்கு நேரமில்லாமல் தவிர்த்த ரிப்பேர் வேலைகள் (ஃபிரிட்ஜில் லைட் எரியவில்லை, CFL விளக்கை மாட்ட அதன் ஹோல்டர் சரியில்லை) எல்லாவற்றையும் ஆட்களை வைத்து சரி செய்ய மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. பிறகு சாப்பிட்டு விட்டு, வெளியே ஷாப்பிங் போகலாம் என்று கிளம்பினோம்.

ரங்கனாதன் தெருவில் ஏதாவது ஒரு கடையில் நுழைந்தால், உங்களுக்கு அப்போதைக்கு தேவையில்லை என்றால் கூட, வாங்கி வைத்துக் கொள்ளலாமே என்று ஆசை வரும் வகையில் நிறையப் பொருட்கள் இறைந்து கிடக்கும். பெண்களின் மனநிலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எதைப் பார்த்தாலும் இதை வாங்கலாம், அதை வாங்கலாம் என்று எடுத்து எடுத்து பில் போட வைத்து விடுவார்கள்.

அது போல் நிறையப் பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது, ஐஸ்கிரீம், சென்னா மசாலா, பாதாம் பால் என்ற வித விதமான ஐட்டங்களையும் சுவைக்காமல் நகர முடியாது. நமக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று சொன்ன மனைவியின் சொல்லைத் தட்ட முடியாமல் சாப்பிட்டு விட்டேன். அதில் வந்தது வினை. அப்பாடா! ஒரு வழியாக விஷயத்துக்கு வந்து விட்டேன்.

இருப்பதிலேயே மோசமான வியாதி எது என்று என்னைக் கேட்டால் ஜலதோஷம் என்றுதான் சொல்வேன். அது ஏன் வருகிறது, எப்போது வருகிறது என்று தெரியாது. ஆனால் வந்தால் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு படாத பாடு படுத்தி விடும். சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வாரே, மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகும், இல்லேன்னா ஏழு நாள்ல சரியாகும்னு; அதற்கு அர்த்தம் என்னன்னா, ஜலதோஷம் வந்துவிட்டால் மருந்து சாப்பிட்டாலும், இல்லாவிட்டாலும் ஒரு வாரம் அதோடு அவஸ்தைப் பட வேண்டும் என்பதுதான்.

என்னோட அனுபவத்தில், வெளியில் எங்காவது ஐஸ்கிரீம் சாப்பிட்டாலோ, குளிர்பானங்கள் சாப்பிட்டாலோ, அடுத்த நாளிலிருந்து அவஸ்தைதான் என்பதை எழுதிக் கொடுத்து விடலாம். அன்று சாயந்திரமோ அல்லது அடுத்த நாளோ அதற்கான அறிகுறி தெரிய ஆரம்பிக்கும். மூக்கிலும் தொண்டையிலும் லேசாக ஒரு கரகரப்பு ஆரம்பிக்கும், குளிர்ச்சியாக தண்ணீர்கூட குடிக்கப் பிடிக்காது. மூக்கில் நீர் ஒழுக ஆரம்பிக்கும், தொடர்ச்சியான தும்மல், உடம்பை படாதபாடு படுத்தும். இரண்டு நாட்களுக்குத் தூக்கம் போய்விடும். தைலம் ஏதாவது போட்டால் பிரச்சினைதான் இன்னும் அதிகமாகும்.

பொதுவாக இதுபோல் அவஸ்தைக்கெல்லாம் மருத்துவரிடம் செல்ல மாட்டேன். அவர் எழுதிக் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டு அது வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்த வேண்டுமா என்ற ஜாக்கிரதை உணர்வுதான் காரணம். இதையெல்லாம் விவரமாகச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ஜலதோஷத்தினால் அவஸ்தைப் படும் நமது நிலையைப் பார்த்து விட்டு ஆளாளுக்கு ஒரு வைத்தியம் சொல்வார்கள். அப்படித்தான் கவிஞர் கடிவேலு சொன்னபோதும் நினைத்தேன்.

நமது இயற்கையின் அதிசய நெட்வொர்க்கை புரிந்து கொள்வோம் இடுகையைப் படித்து விட்டு கவிஞர் கடிவேலு போன் பண்ணினார். அவருடைய கவிதைக்கு நாம் தந்த விளக்கம் நன்றாக இருந்ததாக பாராட்டினார். பிறகு எல்லாமே மனிதனின் மனோபாவம்தான் என்றார்.

அவர் சொல்லச் சொல்ல உம்.. கொட்டினேன். எதுவுமே பேசவில்லை. பேசமுடியவில்லை. இதை உணர்ந்த அவர் என்ன என்று விசாரித்தார். ஜலதோஷத்தினால் படும் அவஸ்தையைச் சொன்னேன். அதற்கு தான் ஒரு மாத்திரை வைத்திருப்பதாகவும், உடனே எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொன்னார். அடுத்த அரை மணி நேரத்தில் நம்மிடம் அதைக் கொடுத்தார்.

வாங்கிப் பார்த்தேன். BIO C என்று எழுதியிருந்தது. விலையைப் பார்த்தேன். மயக்கமே வந்து விட்டது. “ஒரு ஜலதோஷத்திற்கு மருந்து இவ்வளவு விலையா?” என்று கேட்டேன். “இதை மருந்து என்று சொல்லமுடியாது. உடலின் எதிர்ப்பு சக்தியை நல்ல நிலையில் வைத்திருக்க இது உதவுகிறது. வைட்டமின் `C’ குறைபாடுதான் இந்த ஜலதோஷத்திற்குக் காரணம். இதைப் பயன்படுத்திப் பாரும்” என்றார்.

விலையைப் பார்த்தால் பயமாக இருந்தது. ஆனாலும் கவிஞர் கடிவேலு மீது நம்பிக்கை இருந்ததால் அவர் சொல்வதை நம்பி அதை வாங்கிக் கொண்டேன். “ஒரு நாளைக்கு மூன்று மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இப்போது உமக்கு ஜலதோஷம் இருப்பதால் முதல் நாள் மட்டும் இரண்டு இரண்டாக மூன்று வேளைக்கு எடுத்துக் கொள்ளும்” என்றார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஜலதோஷத்தின் ஆரம்ப நிலையிலேயே அதை எடுத்துக் கொண்ட காரணத்தினால் அடுத்த நாள் நான் காலையில் கண் விழித்த போது, முதல் நாள் பட்ட அவஸ்தையே தெரியவில்லை. உடலும் நல்ல தெம்பாக இருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். இது என்ன வகையான மருத்துவம் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டி கவிஞரை அழைத்திருக்கிறேன்.