Tag Archives: சிறுகதை

பாசத்தின் விலை – சிறுகதை

17 அக்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (16-10-2016) நாம் எழுதிய ‘பாசத்தின் விலை’ என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தக் கதையின் சுருக்கம் இதோ

 

தந்தை இறந்த பின் தாயைப் பராமரிக்க வேறு வேறு காரணங்களைச் சொல்லி, அவருடைய மூன்று மகன்களும் தட்டிக் கழிக்கிறார்கள். அப்போது அவரது மருமகன் அனைவரிடமும் பேசுகிறார். அதன் முடிவில் மூன்று மகன்களும் தாயைக் கவனித்துக் கொள்வதற்கு ஆர்வத்துடன் முன் வருகிறார்கள்.

அப்படி அவர்கள் மாறும் வகையில் என்ன நடந்தது? அதுதான் இந்தக் கதை.

அந்தக் கதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும் பசத்தின் விலை

திண்ணைக்கு நமது நன்றி!

Advertisements

கெட்டிக்காரன் – சிறுகதை

29 பிப்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (29-02-2016) நாம் எழுதிய ‘கெட்டிக்காரன்’ என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தக் கதையின் சுருக்கம் இதோ

ஆனந்த் ப்ளஸ் டூ படிக்கும் மாணவன். அவனுடைய சைக்கிள் காணாமல் போகிறது. பிறகு இரண்டு நாட்களில் திரும்பக் கிடைக்கிறது.

இடையில் நடந்தது என்ன?

அதைக் கண்டு பிடிக்கிறார் அவனுடைய மாமா. 

சைக்கிள் தொலைந்த காரணத்தையும் அது திரும்பக் கிடைத்த விதத்தையும் அவர் விளக்கும்பொது ஆச்சரியம் ஏற்படுகிறது.

ஆமாம்! இதில் யார் கெட்டிக்காரன்?

அந்தக் கதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும் கெட்டிக்காரன்

திண்ணைக்கு நமது நன்றி!

நாய் இல்லாத பங்களா

8 ஜூன்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (07-06-2015) நாம் எழுதிய ‘நாய் இல்லாத பங்களா’ என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தக் கதையின் சுருக்கம் இதோ

நாய் என்றால் பயப்படும் ஒருவர் சொல்வதாக இந்தக் கதை செல்கிறது.

வேலை விஷயமாக காவலுக்கு நாய் எதுவும் இல்லாத ஒரு பங்களாவிற்குச் செல்கிற அவர், அங்கு திடீரென்று ஒரு நாய் ஓடித்திரிவதைப் பார்த்து திகைத்து விடுகிறார். அந்த நாயிடம் கடி வாங்காமல் தப்பிக்கிறார்.

மறுபடி அந்தப் பங்களாவுக்குப் போகக்கூடாது என்று முடிவெடுத்திருந்த நிலையில் அங்கு நாய் இல்லை என்று உறுதி கூறி பங்களா மானேஜர் வரச்சொல்கிறார். அங்கு போன பிறகு அதே நாய் மறுபடி அந்த பங்களாவில் இருக்கிறது என்பது தெரிகிறது. அங்கு அவர் வேலையில் இருக்கும்போது திடீரென அந்த நாய் முன்னால் வந்து நிற்கிறது. அந்த நாயிடமிருந்து  கடிபடாமல் அவர் தப்பித்தாரா? இல்லையா?

அந்தக் கதையை திண்ணையில் வாசிக்க இங்கே சொடுக்கவும் நாய் இல்லாத பங்களா

திண்ணைக்கு நமது நன்றி!

திண்ணை வார இதழில் சும்மா ஊதுங்க பாஸ் – 4

1 ஜூன்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (31-05-2015) நகைச்சுவைக் கதையாக நாம் எழுதிய சும்மா ஊதுங்க பாஸ் சிறுகதைத் தொடரின் இறுதிப்பகுதி வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுவரை வெளியான அனைத்துப் பகுதிகளின் கதைச் சுருக்கம் இதோ

மருந்துக் கம்பெனிக்குத் தேவையான இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் அசிஸ்டென்ட் மானேஜராக இருக்கும் ரகுபதி. தன்னைப் பொருட்படுத்தாதவர்களை பழி வாங்குபவர். திறமையான தொழிலாளியான வாசு அவரால் பாதிக்கப் பட்டவன். அவன் தன்னை கிண்டல் செய்வதாக மானேஜர் சங்கரனிடம் புகார் செய்கிறார். ஆனால் வாசு சாதுர்யமாக அதை மறுக்கிறான். ரகுபதிக்கு ஊதுங்க என்ற வார்த்தையே பிடிக்காமல் போகிறது.

ரகுபதியுடைய தகுதியின்மைக்கு சான்றாக அவரின் தவறினால் வேஸ்ட் என்று ஒதுக்கி வைக்கப் பட்ட ஒரு மெஷினுக்கு பூஜை செய்து வாசு மீண்டும் கிண்டல் செய்கிறான். ரகுபதி மனம் வெறுத்து நிம்மதி தேடி காரில் கடற்கரைக்குச் செல்கிறார். பட்டாபி வாங்கி வந்த சிகரெட் பாக்கெட் அவரது பழைய நினைவுகளைக் கிளறுகிறது.

பிறகு பட்டாபி கொண்டு வந்த மதுவை அருந்துகிறார். இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்குக் கிளம்பும் நேரத்தில் போலீஸார் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதிக்கிறார்கள் என்ற தகவலைச் சொல்லி, தானும் ஒருமுறை அப்படி மாட்டிக் கொண்டதை நகைச்சுவையாக விவரிக்கிறான். அதைக் கேட்டு ரகுபதியின் மனபாரம் குறைந்தாலும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்துடனே காரை ஓட்டிச் சென்ற ரகுபதி போலீஸில் மாட்டிக் கொள்கிறார்.

அப்போது அங்கு தற்செயலாக வரும் வாசு போலீஸிடமிருந்து ரகுபதியைக விடுவிக்கிறான். அது ரகுபதிக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. அதனால் வாசுவிடம் அது எப்படி முடிந்தது என்று விசாரிக்கிறார். அது எப்படி என்று தெரிந்து கொள்ள அந்தக் கதையின் இறுதிப் பகுதியைப் படிக்கவும்.

இந்த சிறுகதைத் தொடரின் இறுதிப் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 4
இந்த சிறுகதைத் தொடரின் மூன்றாம் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 3
இந்த சிறுகதைத் தொடரின் இரண்டாம் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 2
இந்த சிறுகதைத் தொடரின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 1

திண்ணைக்கு நமது நன்றி!

திண்ணை வார இதழில் சும்மா ஊதுங்க பாஸ் – 3

25 மே

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (24-05-2015) நகைச்சுவைக் கதையாக நாம் எழுதிய சும்மா ஊதுங்க பாஸ் சிறுகதைத் தொடரின் மூன்றாம் பகுதி வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுவரை வெளியான மூன்று பகுதிகளின் கதைச் சுருக்கம் இதோ 

மருந்துக் கம்பெனிக்குத் தேவையான இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் அசிஸ்டென்ட் மானேஜராக இருக்கும் ரகுபதி. தன்னைப் பொருட்படுத்தாதவர்களை பழி வாங்குபவர். திறமையான தொழிலாளியான வாசு அவரால் பாதிக்கப் பட்டவன். அவன் தன்னை கிண்டல் செய்வதாக மானேஜர் சங்கரனிடம் புகார் செய்கிறார். ஆனால் வாசு சாதுர்யமாக அதை மறுக்கிறான். ரகுபதிக்கு ஊதுங்க என்ற வார்த்தையே பிடிக்காமல் போகிறது.

ரகுபதியுடைய தகுதியின்மைக்கு சான்றாக அவரின் தவறினால் வேஸ்ட் என்று ஒதுக்கி வைக்கப் பட்ட ஒரு மெஷினுக்கு பூஜை செய்து வாசு மீண்டும் கிண்டல் செய்கிறான். ரகுபதி மனம் வெறுத்து நிம்மதி தேடி காரில் கடற்கரைக்குச் செல்கிறார். பட்டாபி வாங்கி வந்த சிகரெட் பாக்கெட் அவரது பழைய நினைவுகளைக் கிளறுகிறது.

பிறகு பட்டாபி கொண்டு வந்த மதுவை அருந்துகிறார். இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்குக் கிளம்பும் நேரத்தில் போலீஸார் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதிக்கிறார்கள் என்ற தகவலைச் சொல்லி, தானும் ஒருமுறை அப்படி மாட்டிக் கொண்டதை நகைச்சுவையாக விவரிக்கிறான். அதைக் கேட்டு ரகுபதியின் மனபாரம் குறைந்தாலும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்துடனே காரை ஓட்டிச் சென்ற ரகுபதி போலீஸில் மாட்டிக் கொள்கிறார்.

இந்த சிறுகதைத் தொடரின் மூன்றாம் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 3
இந்த சிறுகதைத் தொடரின் இரண்டாம் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 2
இந்த சிறுகதைத் தொடரின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 1
கதையின் இறுதிப் பகுதி அடுத்த வாரம் வரும்…

திண்ணைக்கு நமது நன்றி!

திண்ணை வார இதழில் சும்மா ஊதுங்க பாஸ் – 2

18 மே

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (17-05-2015) நகைச்சுவைக் கதையாக நாம் எழுதிய சும்மா ஊதுங்க பாஸ் சிறுகதைத் தொடரின் இரண்டாம் பகுதி வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுவரை வெளியான இரண்டு பகுதிகளின் கதைச் சுருக்கம் இதோ 

மருந்துக் கம்பெனிக்குத் தேவையான இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் அசிஸ்டென்ட் மானேஜராக இருக்கும் ரகுபதி. தன்னைப் பொருட்படுத்தாதவர்களை பழி வாங்குபவர். திறமையான தொழிலாளியான வாசு அவரால் பாதிக்கப் பட்டவன். அவன் தன்னை கிண்டல் செய்வதாக மானேஜர் சங்கரனிடம் புகார் செய்கிறார். ஆனால் வாசு சாதுர்யமாக அதை மறுக்கிறான். ரகுபதிக்கு ஊதுங்க என்ற வார்த்தையே பிடிக்காமல் போகிறது. ரகுபதியுடைய தகுதியின்மைக்கு சான்றாக அவரின் தவறினால் வேஸ்ட் என்று ஒதுக்கி வைக்கப் பட்ட ஒரு மெஷினுக்கு பூஜை செய்து வாசு மீண்டும் கிண்டல் செய்கிறான். ரகுபதி மனம் வெறுத்து நிம்மதி தேடி காரில் கடற்கரைக்குச் செல்கிறார். பட்டாபி வாங்கி வந்த சிகரெட் பாக்கெட் அவரது பழைய நினைவுகளைக் கிளறுகிறது.

அந்த சிறுகதைத் தொடரின் இரண்டாம் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 2

முந்தைய இடுகையை வாசிக்க இங்கே சொடுக்கவும்

கதையின் மூன்றாவது பகுதி அடுத்த வாரம் வரும்…

திண்ணைக்கு நமது நன்றி!

திண்ணையில் நமது நகைச்சுவை சிறுகதைத் தொடர்

11 மே

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் (10-05-2015) நகைச்சுவைக் கதையாக நாம் எழுதிய சிறுகதைத் தொடரின் முதல் பகுதி வெளியாகி இருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தக் கதையின் முதல் பகுதியின் சுருக்கம் இதோ 

மருந்துக் கம்பெனிக்குத் தேவையான இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் அசிஸ்டென்ட் மானேஜராக இருக்கும் ரகுபதி. தன்னைப் பொருட்படுத்தாதவர்களை பழி வாங்குபவர். திறமையான தொழிலாளியான வாசு அவரால் பாதிக்கப் பட்டவன். அவன் தன்னை கிண்டல் செய்வதாக மானேஜர் சங்கரனிடம் புகார் செய்கிறார். ஆனால் வாசு சாதுர்யமாக அதை மறுக்கிறான். ரகுபதிக்கு ஊதுங்க என்ற வார்த்தையே பிடிக்காமல் போகிறது. 

அந்த சிறுகதைத் தொடரின் முதல் பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் சும்மா ஊதுங்க பாஸ் – 1

கதையின் தொடர்ச்சி அடுத்த பகுதியில்…

திண்ணைக்கு நமது நன்றி!

இதற்கு முன்னால் திண்ணையில் வெளியான நமது சிறுகதைகளை வாசிக்க கீழே உள்ள அந்தந்த கதை தலைப்புகளை சொடுக்கவும்.

திண்ணை 03-11-2013 இதழில் வெளியான சிறுகதை வாழ்க்கைத்தரம்

திண்ணை 03-02-2013 இதழில் வெளியான சிறுகதை அதிர்ஷ்டம்!!

திண்ணை 02-12-2012 இதழில் வெளியான சிறுகதை விருப்பும் வெறுப்பும்

திண்ணை 11-11-2012 இதழில் வெளியான சிறுகதை நைலான் கயிறு…!…?

திண்ணை 04-11-2012 இதழில் வெளியான சிறுகதை  சந்திராஷ்டமம்!

திண்ணை 28-10-2012 இதழில் வெளியான சிறுகதை மனிதாபிமானம்!!

திண்ணை 14-10-2012 இதழில் வெளியான சிறுகதை மன தைரியம்!

திண்ணை 30-09-2012 இதழில் வெளியான சிறுகதை வெற்றியின் ரகசியம்!

திண்ணை 16-09-2012 இதழில் வெளியான சிறுகதை நம்பிக்கைகள் பலவிதம்!

சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 19

22 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

அத்தியாயம் 9 இலிருந்து 14 வரை அந்தக் கதையின் லிங்க் கொடுக்கப் பட்டது. ஆனால் லிங்க் மூலமாக திறப்பதை விட எளிதாக இருக்கும் என்பதால்  11-11-14 அன்று வெளியான அத்தியாயம் 19 இங்கே நேரடியாகவே பதிவிடப் படுகிறது.

அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நமது நன்றி!

இதற்கு முந்தைய அத்தியாயம் 18 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

11-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

18.சந்திரிகையின் துணிவு

ஆமாம், அந்தக் கொடியவர்களை அழித்தே தீர வேண்டும்என்றாள் சந்திரிகை. அவளுடைய குரலில் ஒரு உறுதி இருந்தது.

 அது மட்டுமில்லை. அது பற்றிய விசாரணையின் போது, குண்டுகள் தீர்ந்து விட்டன. இல்லையென்றால் இன்னும் பலரை கொன்று குவித்திருப்பேன் என்று திமிராகப் பதில் சொல்லி இருக்கிறான் ஜெனரல் டயர். இப்போது அவர்கள் இருவரும் லண்டனுக்குச் சென்று விட்டார்கள். நானும் எப்படியாவது லண்டன் செல்ல வேண்டும் என்று முயற்சித்தேன். சென்ற வருடம் ஆப்பிரிக்காவில் கென்யாவில் உள்ள நைரோபி நகருக்குச் சென்றேன். அங்கிருந்து அமெரிக்கா சென்று பின் எப்படியாவது லண்டன் சென்று விடலாம் என்று முயன்றேன். முடியவில்லை. அதனால் மறுபடி இந்தியாவுக்கு திரும்பி விட்டேன். நான் எப்படியாவது லண்டன் சென்று அவர்களைக் கொல்வேன். ஆனால் என்னைக் கண்காணித்தபடி போலீசார் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர்கள் கையில் அகப்படாமல் நான் தப்பிச் செல்ல வேண்டும்என்றான்.

கவலைப்படாதே, நீ தப்பிச் செல்ல நான் உதவுகிறேன்என்றாள் சந்திரிகை.

சிறுவயதில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கடவுள், எதையும் எதிர் கொள்ளும் ஒரு மனோதிடத்தையும்,சக்தியையும், வலிமையையும் கொடுத்திருக்கிறார். சிறுவயதிலேயே அது அவர்களுக்கு உலகத்தை எதிர் கொள்ளவும், சாதனை புரியவும் தேவையான தைரியத்தைக் கொடுக்கிறது. அந்த வகையில் பார்த்தால் சந்திரிகையும், உத்தம் சிங்கும் குழந்தைப் பருவத்திலேயே தாய் தந்தையரை இழந்தவர்கள். அதனால் அவர்களுக்கு இருந்த உறுதியும், மனோதிடமும் புதுமையான விஷயமல்ல.

19.சந்திரிகையின் தியாகம்

அங்கிருந்து கிளம்பி இருவரும் பம்பாய் சென்றார்கள். அப்போது சரோஜினி அவர்களும் லண்டனில் இருந்து இந்தியா திரும்பி வந்து பம்பாயில் தங்கி இருந்தார். அங்கு சென்று சரோஜினி அவர்களைச் சந்தித்தாள் சந்திரிகை. அவளைப்பற்றி விசாரித்த சரோஜினி, சுபாஷ் சந்திராவும் லண்டனிலிருந்து இந்தியா திரும்பி விட்டதாகவும், காந்தியை சந்தித்து விட்டு, வங்காளத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பதாகவும் சொன்னார். நாளை நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள அவரும் இங்கு வந்திருக்கிறார் என்பதையும் சொன்னார்.

 பிறகு தன்னுடன் வந்த உத்தம் சிங்கை அறிமுகப்படுத்தி வைத்தாள் சந்திரிகை. அவனது லட்சியத்தைக் கேள்விப்பட்ட சரோஜினிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

 பழிக்குப்பழி வேண்டாம்; அஹிம்சைதான் காந்திஜியின் வழி. அதனால் இந்த எண்ணத்தை கைவிடுஎன்று அவனிடம் அறிவுறுத்தினார். ஆனால் உத்தம் சிங் பிடிவாதமாக தன் லட்சியத்தில் உறுதியாக இருந்தான். மறுநாள் வேல்ஸ் இளவரசர் பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்குகிறார் என்றும், அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க நாளை அனைவரும் பகிஷ்கரிப்பு போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதன் பிறகு இந்த விஷயத்தைப் பற்றி பேசலாம் என்று சொல்லி அப்போதைக்கு அந்தப் பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

 அவனுக்கும், சந்திரிகைக்கும் தங்குவதற்கு தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த அறைகள் இருந்த கட்டிடம் பம்பாய் துறைமுகத்துக்கு வெகு அருகாமையில் இருந்தது. கொஞ்ச தூரம் நடந்தாலே துறைமுக வாயிலை எட்டி விடலாம்.

 உத்தம் சிங்குக்கு அன்று இரவு படுத்தவுடன் உறக்கம் வரவில்லை. கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம் என்று நினைத்தவன் படுக்கையிலிருந்து எழுந்து அறையை விட்டு மெதுவாக வெளியேறினான். மறுநாள் வேல்ஸ் இளவரசர் வருவதாக இருந்ததால், அந்த இரவு நேரத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாக இருந்தது. அப்படியே நடந்து சென்றவன் யார் கண்ணிலும் படாமல் துறைமுக வாயிலுக்கு அருகே வந்து விட்டான்.

 அங்கு கேட்டில் இருந்த காவலாளி, “யார் நீ, உனக்கு என்ன வேண்டும்?” என்று விசாரித்தான். ஐயா, நான் ஒரு அனாதை. இங்கு கப்பலில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தெரிந்து கொள்வதற்காக வந்தேன்என்றான் உத்தம் சிங்.

 கப்பலில் வேலையா, நல்ல வேலை கேட்டாய் போ. இருக்கிறவனுக்கே வழியில்லை. போ, போய் வேறு ஏதாவது வேலை இருந்தால் பார்என்றான்.

12-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

19.சந்திரிகையின் தியாகம்

 ஐயா, நீங்கள்தான் எப்படியாவது உதவ வேண்டும். நான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும்போது,உங்களுக்குப் பிடித்தமான பொருள் ஏதாவது கொண்டு வந்து தருகிறேன். தயவுசெய்து கருணை காட்டுங்கள்என்றான்.

 இப்படியெல்லாம் சொல்லி என்னை ஏமாற்றப் பார்க்கிறாயாஎன்று சிரித்தான் காவலாளி.

 ஐயா, எனக்கு யாரையும் ஏமாற்றிப் பழக்கமில்லை. நான் உண்மையைத்தான் சொல்லுகிறேன்என்றான் உத்தம் சிங். கொஞ்ச நேரம் யோசித்த காவலாளி,

 சரி, நாளைக்கு வா. நாளைக்கு இளவரசர் வரும் கப்பலில் யாருடனாவது பேச வாய்ப்புக் கிடைத்தால், கேட்டுப் பார்க்கிறேன்என்றான்.

 மறுநாள் வருவதாகச் சொல்லி உத்தம் சிங் கிளம்பிப் போன கொஞ்ச நேரத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு வந்தார்கள். அவர்கள் காவலாளியிடம் வந்து, “நாங்கள் வரும் போது, தலைப்பாகையுடன் சிங் ஒருவன் போவதைப் பார்த்தோம். அவன் இங்கே வந்தானா?” என்றனர்.

 கப்பலில் வேலை வாங்கித்தரச் சொல்லிக கேட்டு ஒருவன் வந்தான். எதற்குக் கேட்கிறீர்கள்?” என்றான் காவலாளி.

 உத்தம் சிங் என்ற ஒருவனை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். அவன் ஒரு தீவிரவாதி. இங்கே வந்தவன் அவனாகக்கூட இருக்கலாம். இளவரசர் வரும் சமயத்தில் அவன் இங்கே வந்திருப்பதால், அவருக்கு ஆபத்து ஏற்படுத்துவதற்காக இருக்கலாம். அதனால் மறுபடியும் அவன் வந்தால் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி அவனை பிடித்து வைத்துக் கொண்டு எங்களுக்குத் தகவல் கொடு. இல்லாவிட்டால் நீயும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் படுவாய்என்று தங்கள் முகவரியைத் தந்து விட்டு சென்றார்கள்.

காவலாளி பயந்து விட்டான். நம்மிடம் வந்து பேசியவனின் பேரைக் கேட்க மறந்து விட்டோமே. இவர்கள் உத்தம் சிங் என்றும், தீவிரவாதி என்றும் சொல்கிறார்களே. அவனைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. எதற்கும் நாளை வந்தால் அவனைப் பிடித்துக் கொடுத்து விட வேண்டும். அதுதான் நமக்குப் பாதுகாப்பு என்றெல்லாம் யோசித்தான்.

 மறுநாள் வேல்ஸ் இளவரசர் பம்பாய் துறைமுகத்தில் வந்து இறங்கினார். ஏற்கெனவே காங்கிரஸில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது போல், அவருடைய வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போய் சில இடங்களில் வன்முறையும் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கைது செய்யப் பட்டார்கள். சரோஜினி அவர்களும் சிறையில் அடைக்கப் பட்டார்.

 அன்று மாலை சந்திரிகையை, உத்தம் சிங் சந்தித்தான். துறைமுக வாயில் காவலாளியிடம் தான் பேசியதையும்,அவன் இன்று தன்னை வரச்சொல்லி இருப்பதையும் தெரிவித்தான். தான் போய் அதுபற்றி விபரம் தெரிந்து கொண்டு வர இருப்பதாகவும் சொன்னான். பிறகு கிளம்பி வெளியே சென்றவன், சில நிமிடங்களிலேயே அவசரமாகத் திரும்பி வந்தான்.

 என்ன விஷயம்?” என்று வினவினாள் சந்திரிகை.

 வெளியே இரண்டு போலீசார், என்னைத் தடுத்து நிறுத்தி விசாரிக்கத் தொடங்கினார்கள். எப்படியோ அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்து விட்டேன்

 அப்படியானால் உன்னை சந்தேகப்பட்டு இன்னும் தீவிரமாகத் தேடுவார்களே

 ஆமாம், ஆனால் நிறையப் பேர் பெட்டி படுக்கைகளுடன் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதை வரும் வழியில் பார்த்தேன். இன்று ஏதாவது கப்பல் புறப்படும் என்று நினைக்கிறேன்

12-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

19.சந்திரிகையின் தியாகம்

 சரி, நீ இங்கேயே இரு. நான் போய் விசாரித்து விட்டு வருகிறேன். அப்படியே கப்பல் எதுவும் கிளம்புவதாக இருந்தால், எங்கு செல்கிறது என்றும் விசாரித்துக் கொண்டு வருகிறேன்என்றாள் சந்திரிகை.

 உத்தம் சிங்கை அங்கேயே விட்டு விட்டு, சிங் வேடத்தில் துறைமுகத்தை நோக்கி நடந்தாள். போலீஸ் தலை ஏதாவது தெரிகிறதா என்று சுற்றிலும் பார்த்தாள். இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டு நடந்து நுழைவு வாசலை அடைந்து விட்டாள்.

 அவள் பக்கத்தில் வருவதைப் பார்த்த காவலாளி, அவளை நிறுத்தி, “ஏம்ப்பா, கப்பல் வேலைக்காக நேற்று என்னிடம் விசாரித்தவன் நீதானேஎன்றான்.

உடனே அவளுக்கு உத்தம் சிங் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. உடனே அவள், “ஆமாம், இன்று ஏதாவது கப்பல் கிளம்புகிறதா?” என்றாள்.

ஆமாம், தென்னாப்பிரிக்காவுக்கு இன்று ஒரு கப்பல் கிளம்புகிறது. அந்தக் கப்பலில் உனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் அவர் இங்கு வருவார். நீ இங்கு வந்து இப்படி உட்கார்என்றான். அவளும் அங்கே உட்கார்ந்தாள்.

 உன் பெயர் உத்தம் சிங் தானேஎன்றான் காவலாளி. சந்திரிகையும், “ஆமாம்என்றாள்.

 பிறகு காவலாளி ஒரு துண்டுச் சீட்டு எழுதி, அங்கிருந்த ஒருவரிடம் கொடுத்து ஏதோ சொல்லி அனுப்பினான். அதையெல்லாம் கவனித்த சந்திரிகைக்கு ஏதோ சந்தேகம் தோன்றியது. ஆபத்து வரப்போவதை உணர்ந்தாள். உடனே எழுந்து வாசலை நோக்கி நடந்தாள்.

ஏய், அங்கேயே உட்கார். எழுந்தாயோ தெரியும் சேதிஎன்று அதட்டினான் காவலாளி. இப்போது அவளுக்கு சந்தேகம் உறுதியாகி விட்டது. இந்தக் காவலாளி ஏதோ திட்டத்துடன்தான் இங்கு உட்கார வைத்திருக்கிறான். குறுக்கே கை நீட்டித் தடுத்த காவலாளியை ஒரே தள்ளாகத் தள்ளி விட்டு மின்னல் வேகத்தில் வெளியே ஓடினாள். அப்போது எதிரே வந்த இரண்டு போலீஸ்காரர்கள் இவள் ஓடுவதைப் பார்த்து பின்னால் துரத்தினார்கள்.

எப்படியோ தப்பி உத்தம் சிங் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள். அன்று தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு கப்பல் கிளம்புவதாகவும், அதில் அவன் ஏறிச்சென்று பிறகு அங்கிருந்து இங்கிலாந்துக்கு போய் விடலாம் என்றும் சொன்னாள். உடனே கிளம்புவதற்கு உத்தம் சிங்கும் ஆயத்தமானான்.

 சந்திரிகை தப்பி வந்த பிறகு, அவளைத் துரத்தி வந்த காவலாளி, அந்தப் போலீஸ்காரர்களிடம், “அவன்தான் நேற்று என்னிடன் வேலை கேட்டு வந்தவன். அவன் பெயர் உத்தம் சிங்என்றான்.

 இது பற்றி அந்த இரண்டு போலீஸ்காரர்களும் தங்களுடைய மேலதிகாரிக்கு தகவல் கொடுத்தார்கள். சிறிது நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி, இன்னும் சில போலீஸ் ஜவான்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். வெளியே போலீஸ் நடமாட்டம் இருப்பதை சந்திரிகை கவனித்தாள். அவர்களை மீறி துறைமுகத்துக்குள் நுழைவது அசாதரணமான காரியம் என்று புரிந்தது.

சிறிது யோசித்த சந்திரிகை ஒரு முடிவுக்கு வந்தவளாக, சிங் வேஷத்தைக் களைந்து பெண்ணாக மாறினாள். கூந்தலை அவிழ்த்து விட்டு சடை பின்னிக் கொண்டாள். போலீஸாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய திட்டத்தை உத்தம் சிங்கிடம் விளக்கி விட்டு, அவனுடன் தெருவில் இறங்கி நடந்தாள்.

14-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

19.சந்திரிகையின் தியாகம்

 கப்பலில் போவதற்காக நிறையப் பேர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். துறைமுக வாயில் வந்ததும், அந்த போலீஸ் அதிகாரி அவர்களை நிறுத்தினான். உத்தம் சிங்கைப் பார்த்து, “உன் பேர் என்ன. இவள் யார்என்றான். அதற்கு உத்தம் சிங், “ஐயா, என் பெயர் ஷேர் சிங். இவள் என் அத்தை பெண். கப்பலைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாள். அதான் போய்க்கொண்டிருக்கிறோம்என்றான்.

சரி, செல்லுங்கள்என்று வழி விட்டான் அவன். அவர்கள் உள்ளே நுழைந்து கப்பல் இருந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். அதை நெருங்கியதும், உத்தம் சிங் கப்பலில் ஏறினான். நீ செய்த உதவியை மறக்க மாட்டேன்என்றான் சந்திரிகையைப் பார்த்து.

 அந்த நேரம் அந்த போலீஸ் அதிகாரியும், காவலாளியும் அருகில் வரும் சத்தம் கேட்டது. அவர்கள் ஏதோ பேசிக்கொண்டே வருவது தெரிந்தது. ஒரு ஓரமாக மறைந்து நின்று அவர்கள் பேசுவதைக் கவனித்தாள்.

 அவன் உத்தம் சிங் இல்லையென்று நிச்சயமாக சொல்கிறாயாஎன்றான் அந்த அதிகாரி. ஆமாம் ஐயா, அவன் எப்போதும் தனியாகத்தான் வருவான். அவனுக்கென்று யாருமில்லை, அநாதை என்று சொன்னான். ஆனால் இவன் அத்தை பெண்ணுடன் அல்லவா வந்தான்என்றான் காவலாளி.

 கொஞ்ச நேரம் அங்குமிங்கும் பார்த்து விட்டு திரும்பி வாயிலுக்குச் சென்று விட்டார்கள். இப்போது சந்திரிகைக்கு தான் திரும்பி செல்வதில் உள்ள சிக்கல் புரிந்தது. திரும்பிச் செல்லும்போது உன் கூட வந்தவன் எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள்.

 அப்போது, “சந்திரிகைஎன்று யாரோ கூப்பிட்டார்கள். குரல் வந்த திசையை நோக்கினாள். யாரோ ஒரு சிங் இவளைப் பார்த்து கையசைத்தான். நம்மைத் தெரிந்தவர்கள் இங்கு யாருமில்லையே. அது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே அருகே சென்றாள்.

 நீங்கள் யார்என்றாள் அவனைப் பார்த்து.

 உஷ்.. மெதுவாகப் பேசுங்கள். நான்தான் சுபாஷ் சந்திரா. சரோஜினி அம்மையாருடன் நீங்கள் வந்தபோது லண்டனில் பார்த்தோமேஎன்றான். சந்திரிகைக்கு ஆச்சரியம்.

 சுபாஷ்!என்றாள் குரலில் உற்சாகத்துடன்.

 ஆமாம், நான்தான். இங்கு எப்படி வந்தீர்கள்

 சந்திரிகை உத்தம் சிங் பற்றியும், அவனது லட்சியம் பற்றியும், அவனை கப்பலில் ஏற்றிவிட தான் வந்ததாகவும் சொன்னாள். பிறகு போலீஸ் அதிகாரியின் சந்தேகத்தையும், தாங்கள் ஒன்றாக சேர்ந்து வெளியேறுவதுதான் நல்லது என்றும், தனியாக யாராவது சிங் வருவதைப் பார்த்தால் அவர்கள் சந்தேகப்பட்டு விசாரிப்பார்கள் என்றும் சொன்னாள்.

பிறகு இருவரும் ஒன்றாக வாயிலுக்கு வந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்த்த காவலாளி, புன்னகையுடன் போலீஸ் அதிகாரியைப் பார்த்தான். தான் சொன்னது உண்மை என்று நிருபணம் ஆகிவிட்ட பெருமை அவனுக்கு. வாயிலைக் கடந்து வெகுதூரம் அவர்கள் சென்ற பிறகு, அந்தப் போலீஸ் அதிகாரிக்கு ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது. உள்ளே போனவனுக்கும், வெளியே வந்தவனுக்கும் உருவத்தில் ஏதோ வித்தியாசம் இருப்பது போல் தோன்றியது. உடனே அவர்களைப் பின் தொடர்ந்தான்.

15-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

19.சந்திரிகையின் தியாகம்

 சுபாஷும், சந்திரிகையும் அறைக்கு வந்ததும், தன்னுடைய தலைப்பாகை, தாடியைக் களைந்தார் சுபாஷ்.

 யார் நீ, எதற்கு இந்த வேஷம்என்று அதிகாரத்துடன் ஒரு குரல் கேட்டது. நிமிர்ந்து பார்த்தார். வாசலில் அந்த போலீஸ் அதிகாரி நின்று கொண்டிருந்தான்.

 என் பெயர் சுபாஷ் சந்திரா

 ஓ! நீதானா அது, ஐ.சி.எஸ் பட்டத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டு விடுதலைக்காக போராட வந்திருக்கிறாயாமே. நீ மட்டும் அப்படி செய்திருக்கா விட்டால் இப்போது உன்னிடம் நான் கைகட்டி நிற்க வேண்டும். யாராவது ஐ.சி.எஸ் பட்டத்தை வேண்டாம் என்று சொல்வார்களாஎன்றான் ஏளனத்துடன்.

 அது என் சுதந்திரம், நீ அதுபற்றி பேச வேண்டியதில்லைஎன்றார் சுபாஷ்.

 சரி, இப்போது என்ன செய்ய வந்திருக்கிறாய். எதற்கு இந்த வேஷம்என்றான் அந்த அதிகாரி.

 என் நாட்டில் நான் என்ன வேஷம் வேண்டுமானாலும் போடுவேன். அதைக்கேட்க நீ யார்என்றார் சுபாஷ்.

 இப்போது நீ ஒன்றும் ஐ.சி.எஸ் இல்லை. நான் கேட்பதற்குப் பதில் சொல்

 மரியாதையாக இங்கிருந்து சென்று விடு. இல்லையென்றால்…

 என்ன செய்வாய்? என்னைக் கொன்று விடுவாயாஎன்று கேட்ட அந்த அதிகாரி சட்டென துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி நீட்டினான்.

 என்ன பயமுறுத்துகிறாயா, நீ செய்வது தண்டனைக்குரிய குற்றம்அதுவரை பேசாமல் இருந்த சந்திரிகை இப்போது அவனை எச்சரித்தாள்.

 உங்களது அராஜகத்தை ஒடுக்கத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். நான் லண்டனில் சட்டம் படித்தவள். கோர்ட்டு மூலமாக உனக்குப் பதில் சொல்கிறேன்என்றாள்.

ஓ! என்னிடமே சட்டம் பேசுகிறாயா, இதோ இப்போதே இவனைச் சுட்டுத் தள்ளுகிறேன். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்என்று சுட்டான். ஆனால் அதைத் தடுக்க, சட்டென குறுக்கே பாய்ந்த சந்திரிகையின் மார்பில் குண்டு பாய்ந்தது. அதைப் பார்த்த கணத்தில் ஒரு நிமிடம் தடுமாறினான் அந்த போலீஸ் அதிகாரி. அதைப் பயன்படுத்திக் கொண்டார் சுபாஷ்.

பாய்ந்து சென்று அவனது துப்பாக்கியைப் பறித்தார். உடனே அவனை நோக்கி இரண்டு முறை சுட்டார். மரம் போல கீழே சரிந்தான் அவன்.

 சந்திரிகை, உடனே உன்னை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்கிறேன்என்று அவளைத் தூக்கினார் சுபாஷ். ஆனால் அவரைத் தடுத்தாள் சந்திரிகை.

17-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

19.சந்திரிகையின் தியாகம்

 நீங்கள் இங்கே இருப்பது ஆபத்து. உடனே கிளம்புங்கள். இந்த வெறிபிடித்த மிருகங்களை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்என்றபடியே சரிந்து விழுந்தாள். சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் சுபாஷ்.

 உன் உயிரைக் கொடுத்து என்னைக் காப்பாற்றி இருக்கிறாய் சந்திரிகை. உன்னுடைய தியாகம் மகத்தானது. நிச்சயம் நீ சொன்னது போல் இந்த மிருகங்களை நாட்டை விட்டுத் துரத்துவேன். உன்னைக் கொன்ற இவர்களைப் பழிவாங்க நானும் ஆயுதம் எடுப்பேன் என்று சபதம் செய்தார்.

 போலீஸ் அதிகாரியைத் தேடி வந்த மற்றவர்கள், அவருடன் ஒரு பெண்ணும் சுடப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து காரணம் புரியாமல் விழித்தார்கள். சிறிது நேரத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்று விட்டு மர்ம மனிதன் தப்பி விட்டான் என்ற செய்தி பரவியது.

 நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த சந்திரிகையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இதுபோல் பல விலைமதிப்பில்லாத உயிர்களையும் கண்ணீரையும் விட்டுத்தான் இந்திய விடுதலைப் பயிர் வளர்ந்தது என்பதை உணர்வோம்

இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளை வணங்குவோம்.

முற்றும்…..

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 18

20 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

அத்தியாயம் 9 இலிருந்து 14 வரை அந்தக் கதையின் லிங்க் கொடுக்கப் பட்டது. ஆனால் லிங்க் மூலமாக திறப்பதை விட எளிதாக இருக்கும் என்பதால்  8-11-14  மற்றும் 10.11.14 அன்று வெளியான அத்தியாயம் 18 இங்கே நேரடியாகவே பதிவிடப் படுகிறது.

அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நமது நன்றி!

இதற்கு முந்தைய அத்தியாயம் 17 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

8-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

17. பந்துலுவின் கடைசி நாட்கள்

பந்துலுவின் இறுதிச் சடங்குக்கு வந்த விசாலாட்சி, சில நாட்கள் சென்னையில் தங்கி இருந்தாள். முத்தம்மாளும் மீனாட்சியும் தன்னிடம் பேசிய ஆறுதலான வார்த்தைகள் அவளுக்கு பந்துலு இறந்ததனால் ஏற்பட்ட துக்கத்தை சிறிது போக்கியது.

 சந்திரிகை வருவதற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அதுவரை தான் விசுவநாத சர்மாவுக்கு துணையாக இருப்பேன் என்று அவர்களிடம் விடைபெற்று ராஜமஹேந்திரபுரம் சென்றாள்.

 18.சந்திரிகையின் துணிவு

 சரோஜினி நாயுடு கொடுத்த கடிதத்துடன் லண்டனில் இருந்து புறப்பட்டு சந்திரிகை இந்தியா வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட மீனாட்சியும், கோபாலய்யங்காரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது 18 வயது நிரம்பிய பருவ மங்கையாக சந்திரிகை விளங்கினாள்.

 முத்தம்மாளும் சோமநாதய்யரும் அவளைக் கண்டு அளவிலா மகிழ்ச்சி கொண்டார்கள். பந்துலு இறந்தது பற்றியும், இறுதி வரை அவள் நினைவாகவே இருந்தது பற்றியும் மீனாட்சி விவரித்தாள். அவளுக்குத் திருமணம் செய்து வைக்க பந்துலு ஆசைப்பட்ட விஷயத்தையும் மீனாட்சி சொன்னாள். எனவே விரைவில் திருமண ஏற்பாடுகளைச் செய்ய இருப்பதாகச் சொன்னாள்.

 ஆனால் சந்திரிகையோ ஆங்கிலேயர் ஆட்சியை நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே தன்னுடைய முதல் லட்சியம் என்றாள். அப்போது நாடு இருந்த சூழ்நிலையைக் கண்டு அவள் மனம் கொதித்தது. எப்பாடு பட்டாவது உடனே நாடு விடுதலை பெறுவதற்குத் தேவையான காரியங்களில் ஈடுபட வேண்டும்;ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஆவேசப்பட்டாள். அவளது பேச்சு மீனாட்சிக்கு கவலையளித்தது.

 பிறகு அன்னி பெசன்ட் அவர்களைச் சென்று பார்த்தாள் சந்திரிகை. சரோஜினியின் கடிதத்தைப் படித்த அன்னி பெசன்ட், அவளை வெகுவாகப் பாராட்டி, தன்னுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் நடத்தி வந்த பத்திரிகையிலும் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினாள். அதில் தன்னுடைய கருத்துக்களை ஆவேசமாக எழுத ஆரம்பித்தாள் சந்திரிகை. அது ஆங்கிலேய அரசின் கொடூர முகத்தை தோலுரித்துக் காட்டியது. அதைப் படித்த மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியும் போராட்ட குணமும் பரவியது .

அதனால் சந்திரிகை மீது ஆங்கிலேய அரசின் கவனம் திரும்பியது. லண்டனில் படித்து சட்ட அறிவு மிகுந்த சந்திரிகையை எப்படியாவது தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சி செய்தார்கள். அவளுக்கு அரசின் சார்பில் பலப்பல சலுகைகளும் அளிக்க முன் வந்தார்கள். வசதியான வாழ்க்கையும் அரசாங்கத்தில் பதவியும் கிடைக்குமென ஆசை வார்த்தை கூறினார்கள்.

 ஆனால் எதையும் சந்திரிகை ஏற்றுக் கொள்ளவில்லை. தன் தாய் நாட்டுக்கு சேவை செய்வதே தலையாய கடமை என்று அவர்களது கோரிக்கையை புறக்கணித்தாள். புரட்சிகரமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தாள்.

 பாரதியின் கவிதைகளை மேற்கோள் காட்டி பத்திரிக்கைகளில் எழுதினாள்.

 தேடிச் சோறுநிதந் தின்று -பல

     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

வாடித் துன்பமிக உழன்று – பிறர்

   வாடப் பல செயல்கள் செய்து – நரை

 கூடிப் கிழப்பருவம் எய்தி –  கொடுங்

     கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல

வேடிக்கை மனிதரைப் போலே – நான்

     வீழ்வே னென்று நினைத்தாயோ?

 என்றும்

 தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்

     கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ?

என்றும் அவள் மேற்கோள் காட்டிய பாரதியின் வரிகள் மக்களின் சுதந்திர தாகத்தை தூண்டியது.. சந்திரிகையின் புகழ் பரவியது. மக்கள் அவளின் ஒவ்வொரு சொல்லையும் செயல்படுத்த துடிதுடித்துக் கிளம்பினார்கள். எனவே ஆட்சியாளர்களுக்கு அவள் சிம்ம சொப்பனமாகத் விளங்கினாள். ஆங்கிலேய அரசாங்கம் அவள் மீது வன்மம் கொண்டு அவளை அழித்து விட நேரம் பார்த்துக் காத்திருந்தது.

 அவளது சட்டநுணுக்கங்கள் பொதிந்த வாதங்களை எதிர் கொள்ள முடியாமல் வெள்ளையர் அரசு திணறியது. அதனால் அவளை எந்த வகையிலாவது அடக்குவதற்கு அரசாங்கத்தின் சார்பில் பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் 1921ம் ஆண்டு ஆரம்பத்தில் வேல்ஸ் இளவரசர் இந்தியா வர இருப்பதாக ஒரு பேச்சு கிளம்பியது. அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதினாள் சந்திரிகை. அதனால் இளவரசர் வருகைக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

 1921 வருடம். சந்திரிகை இந்தியா வந்து ஒன்றரை வருடங்கள் ஓடிவிட்டது.

இப்போது அவளுக்கு வயது இருபது. அவள் இன்னும் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. இன்னும் ஒரு வருடம் போகட்டும் என்று சொல்லியிருந்தாள். சுதந்திர இந்தியாவில் தன்னுடைய குடும்பமும்,குழந்தைகளும் வாழ வேண்டும் என்கிற உறுதியான எண்ணம் காரணம்.

 ஒரு நாள் மாலை வீடு திரும்பிய கோபாலய்யங்கார், சந்திரிகையை கைது செய்து யாரும் அறியாமல் தனியிடத்துக்கு கொண்டு சென்று, பிறகு அவளை சுட்டு கொல்ல அரசாங்கம் திட்டமிட்டு இருப்பதாகச் சொன்னார். அதைக் கேட்ட மீனாட்சி அரற்றினாள்; அழுது புலம்பினாள்.

10-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

18.சந்திரிகையின் துணிவு

ஆனால் சந்திரிகை எதற்கும் அஞ்சவில்லை. மீனாட்சிக்கும், மற்றவர்களுக்கும் ஆறுதல் சொன்னாள், அன்றே வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தாள். கூந்தலை அள்ளி முடித்து சிங்கின் தலைப்பாகை போல மாற்றி ஆண்வேடம் தரித்து, இரவு ரயிலில் கிளம்பி, ராஜமஹேந்திரபுரம் சென்றாள். சில நாட்கள் அங்கே தங்கி இருந்தாள். விஜயவாடாவில் காங்கிரஸ் மகாசபை கூட்டம் நடக்க இருப்பதை அறிந்து, அங்கே சென்றாள். அங்குதான் அவள் உத்தம் சிங்கை சந்தித்தாள்.

 முதலில் சந்திரிகையை ஒரு ஆண் என்று நினைத்த உத்தம் சிங், சிங் வேடத்தில் இருந்த சந்திரிகையைப் பற்றி விசாரித்தான். ஆங்கிலேயே அரசாங்கம் தன்னை ஒழித்துக் கட்டத் தீர்மானித்திருக்கும் விஷயத்தையும், அதனால் தான் மாறு வேடம் புனைய வேண்டிய அவசியத்தையும் சொன்னாள் சந்திரிகை. இருவரும் நண்பர்களாயினர்.

 பிறகு உத்தம் சிங் பற்றி விசாரித்தாள். தான் பஞ்சாபில் ஒரு ஆசிரமத்தில் இருந்ததாகவும், ஜாலியன் வாலாபாக் படுகொலையை தான் நேரில் பார்த்ததாகவும், அந்த நிகழ்ச்சி தன் மனதை மிகவும் பாதித்து விட்டதாகவும்,அந்தப் படுகொலையை நடத்திய ஜெனரல் டயரையும், அவனுடைய செயலை நியாயப் படுத்திய பஞ்சாப் கவர்னர் மைக்கேல் டயரையும் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்றான் உத்தம் சிங். பிறகு அந்த சம்பவத்தை விவரித்தான்.

1919ம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, பெருவாரியான மக்கள் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் உள்ள பெரிய மைதானத்தில் குழுமினார்கள். அன்று பைசாகி பண்டிகை வேறு. அந்த கொண்டாட்டத்தில் பங்கு பெறுவதற்காக அங்கு ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும் பெருமளவில் திரண்டிருந்தனர். மொத்தம் இருபதாயிரம் பேருக்கு மேல் இருப்பார்கள்.

 மாலை 4.30 மணிக்கு கூட்டம் ஆரம்பித்தது. நானும் என்னுடைய ஆசிர நண்பர்களும், அவர்களுக்குத் தண்ணீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மேடையில் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். மக்கள் அமைதியான முறையில் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்.

 திடீரென கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்ப்பட்டது. ஜெனரல் டயர் என்பவன் இரண்டு பீரங்கி மற்றும் துப்பாக்கி ஏந்திய 90 ஜவான்களுடன் அங்கு வந்திருப்பதாக பேச்சு பரவியது. அந்த இடத்திற்கு வரும் வழி மிகவும் குறுகியது என்பதால் பீரங்கியை வெளியே நிறுத்தி விட்டு 50 ஜவான்களுடன் உள்ளே நுழைந்தான் ஜெனரல் டயர்.

 மக்களிடம் ஒரு பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும் மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் பேச்சை நிறுத்தவில்லை. சிறிது நேரத்தில் ஜவான்கள் பாதி பாதியாக டயருக்கு இருபுறமும் பிரிந்து நின்றார்கள். எந்தவித எச்சரிக்கையும் இன்றி சுடுவதற்கு கட்டளையிட்டான் அந்த மனிதாபிமானமற்ற மிருகம். துப்பாக்கியினால் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலம். அப்பாவி பெண்கள், குழந்தைகள் எல்லாம் அந்த இடத்திலேயே மடிந்தனர்.

 சுமார் பத்து நிமிடம் வரை துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அங்கு இருப்பவர் எவரும் தப்பிக்க முடியாது என்று தோன்றியது. அதனால் மக்கள் தப்பிக்க வழி தேடி எங்கெங்கோ ஓடினார்கள். அங்கே இருந்த ஒரு பாழுங்கிணற்றில் பலர் குதித்தார்கள். அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. எங்கெங்கும் அவல ஓலம் கேட்டது. குண்டுகள் முழுவதும் தீர்ந்த பிறகே நிறுத்தினார்கள். அதற்குள் சுமார் 1000 பேர் வரை உயிரிழந்து விட்டிருந்தார்கள். இன்னும் பலர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தார்கள். சுமார் 3000 பேர்களுக்கும் மேலாக காயமடைந்திருந்தார்கள்.

 உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்திருந்தால் அவர்களில் பலர் பிழைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் எந்தவிதமான உதவியும் கிடைத்து விடக்கூடாது என்று வாசலில் வழிமறித்து நின்றான் அந்தக் கொடியவன். நான் அப்போது ஒரு மூலையில் தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்தில் இருந்ததால் குண்டடியிலிருந்து தப்பினேன். வெளியேற முடியாததால் இரவு முழுவதும் அங்கேயே கழித்தேன்.

 அது ஒரு கொடுமையான இரவு. இரவு முழுவதும் தூங்காமலும் பசியுடனும் பொழுதைக் கழித்தேன். என் நண்பர்கள் பலரும் இறந்து கிடந்தார்கள். என் மனம் மிகவும் சோர்வுற்றது. எழுந்து நடமாடக்கூட சக்தி இல்லை. அப்படியும் அங்கே தண்ணீர் கேட்டு தவித்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்தேன். நடுநிசி என்பதை எங்கோ தூரத்தில் கேட்ட மணிச் சத்தம் உணர்த்தியது. நாய்கள் குரைக்கும் சத்தம் இரவு முழுதும் கேட்டுக் கொண்டே இருந்தது. கோடைகாலம் வேறு. கடைசி வாய்த் தண்ணீருக்காக ஏங்கிய குரல்கள் நாலாபக்கமும் ஒலித்தன.

 அந்த இரவில் தங்களது குழந்தைகளைத் தேடி சில பெண்கள் பரிதவித்து இங்குமங்கும் தேடியது என் மனதைப் பிசைந்தது. அவ்வப்போது சில சிறுவர் சிறுமிகளின் லேசான விசும்பல் சத்தமும் கேட்டது. எனக்கு மட்டும் ஒரு துப்பாக்கி கிடைத்திருந்தால், நடக்கச் சக்தியற்ற அந்த நிலையிலும் ஊர்ந்து சென்றாவது அந்தக் கொடியவனைக் கொன்று பழி வாங்கி இருப்பேன். அன்று எத்தனை குழந்தைகள் தாய் தந்தையரை இழந்திருக்கும். என்னுடைய சிறுவயதில் தாய் தந்தையை இழந்தவன் நான். அதனால் சிறுவயதில் எனக்கு ஏற்பட்ட துன்பங்களையும், அவமானங்களையும் உணர்ந்தவன். அதே துன்பங்களையும் அவமானங்களையும் அன்று பெற்றோரை இழந்த எல்லா குழந்தைகளும் அடைவார்களல்லவா? அன்றுதான் நான் ஒரு சபதத்தை மேற்கொண்டேன். எப்பாடு பட்டாவது அந்த ஜெனரல் டயரையும், கவர்னர் மைக்கேல் டயரையும் கொன்று தீர்ப்பேன் என்று கொதிப்போடு பேசினான் உத்தம் சிங்.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 17

19 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

அத்தியாயம் 9 இலிருந்து 14 வரை அந்தக் கதையின் லிங்க் கொடுக்கப் பட்டது. ஆனால் லிங்க் மூலமாக திறப்பதை விட எளிதாக இருக்கும் என்பதால்  7-11-14 அன்று வெளியான அத்தியாயம் 17 இங்கே நேரடியாகவே பதிவிடப் படுகிறது.

அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நமது நன்றி!

இதற்கு முந்தைய அத்தியாயம் 16 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

7-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

17. பந்துலுவின் கடைசி நாட்கள்

சந்திரிகை லண்டனுக்கு படிக்கச் சென்ற கால கட்டத்தில் வீரேசலிங்கம் பந்துலுவின் நிலையையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 மனைவியின் மறைவுக்குப் பின் சென்னைக்கு வந்த பந்துலு, சந்திரிகை லண்டனுக்குப் போன பிறகு, மறுபடி ராஜமஹேந்திரபுரத்துக்குச் சென்று வசித்து வந்தார். விசாலாட்சி மற்றும் விசுவநாத சர்மாவின் மேற்பார்வையில் ஹிதாகாரிணி சமாஜத்தின் பணிகள் செம்மையாக நடந்து வந்தது. ஆனால் பழைமைவாதிகளின் எதிர்ப்பும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

ஆங்கிலேயர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத பழமைவாதிகள், தங்களுக்கு ஆங்கிலேய அரசின் ஆதரவு இருப்பதாகப் புரிந்து கொண்டு பல்வேறு வகைகளிலும் பந்துலுவுக்கும் அவரது சீர்திருத்தப் பணிகளுக்கும் தொந்திரவு ஏற்படுத்தி வந்தார்கள்.

 ரௌலட் சட்டம் வந்த பிறகு நிலமை இன்னும் மோசமாயிற்று. விசுவநாத சர்மா நடத்தும் பத்திரிக்கையின் எழுத்துக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிரானதாக இருந்ததால், அந்தப் பத்திரிக்கையை நிறுத்துமாறு அச்சுறுத்தலும் விடுக்கப் பட்டது. ஆனாலும் பந்துலு துணிச்சலாக பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அதனால் அவருக்கு அரசின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள நேரிட்டது.

 பந்துலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. ராஜமஹேந்திரபுரத்தில் அவருடைய எதிர்ப்பாளர்கள் ஒரு இயக்கமாக உருவெடுத்தார்கள். விதவைத் திருமணம் என்பது சமுதாயத்திற்கு எதிரானது என்றும் அதனால் அவருடைய ஹிதாகாரணி சமாஜத்தை தடை செய்ய வேண்டும் என்றும் ஒரு போராட்டமே நடைபெற்றது.

ஒரு நாள் அவர் தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நடுநிசியில் அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள். அதிலிருந்து தப்பிப் பிழைத்த அவர் அன்று முதல் விசாலாட்சியின் வேண்டுகோளின் பேரில் அவர்களுடன் தங்கலானார்.

 அவருடைய எதிரிகள் அவர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தார்கள். விசாரணையே இல்லாமல் அவரைச் சிறையில் அடைத்து கொடுமைக்கு ஆளாக்கினார்கள். ஆனால் மக்களின் விடுதலைப் போராட்டமும் தீவிரமான நிலையில் அவர் ஒரு வருட சிறைவாசத்துக்குப்பின் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் நலிவடைந்தது.

 விடுதலையான பிறகு, அவருக்கு நாளாக ஆக, சந்திரிகையைக் காண வேண்டும் என்ற ஆசை வலுப்பெற்றது. அவள் படிப்பு முடிந்து வரும்போது பதினெட்டு வயது முடிந்து இருக்கும். அதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவளுக்கு விவாகம் செய்து விட வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான வேலைகளில் இறங்கினார். அதனால் 1919 வருட ஆரம்பத்தில் சென்னை வந்து தங்கினார்.

அந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்றது. ஆனால் அதுபற்றி இந்தியாவின் மற்ற இடங்களுக்கு உடனடியாக தகவல் பரவவில்லை. சென்னையில் இருந்தவர்களுக்கு ஒரு மாத காலத்துக்குப் பிறகுதான் அந்த விஷயம் தெரிந்தது. அதைக் கேள்விப்பட்ட மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆங்காங்கே ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

 அந்த கிளர்ச்சியை அடக்க அரசாங்கம் தடியடிப் பிரயோகமும், கண்ணீர் புகையும் பிரயோகப் படுத்தியது. பலரும் கைது செய்யப் பட்டார்கள். வெகு நாட்களாக காத்திருந்த பந்துலுவின் எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவரை வெறியோடு தாக்கி நிலைகுலைய வைத்தார்கள். முதுமையின் காரணமாகவும் தாக்குதலின் காரணமாகவும் பந்துலுவின் உடல் நிலை வெகுவாக பாதிக்கப் பட்டது.

 கோபாலய்யங்காரும், மீனாட்சியும் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க ஏற்பாடு செய்து பார்த்துக் கொண்டார்கள். உடல் நிலை பாதிக்கப் பட்ட நிலையிலும் பந்துலுவின் எண்ணமெல்லாம் சந்திரிகையைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. அவள் இந்தியா திரும்பும்வரை எப்படியாவாது தன்னை பிழைத்திருக்கச் செய்யுமாறு இறைவனைப் பிரார்த்தித்தார்.

 ஆனால் நாளுக்கு நாள் அவரின் உடல் நிலை மோசமானது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 1919 ம் ஆண்டு மே 27 அன்று வீரேசலிங்கம் பந்துலு சென்னையில் காலமானார். தென்னாட்டின் ராஜாராம் மோகன்ராய் என்று பலராலும் பாராட்டப்பட்ட பந்துலு அவர்களது புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.