கன்னி மனம் மகிழ்வாளா?

6 மே
படக்கவிதைப் போட்டி-11

படக்கவிதைப் போட்டி-11

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-11 க்கு நாம் அனுப்பிய கவிதை.

அலைகடலின் ஓரத்தில்

அந்திசாயும் நேரத்தில்

சந்திக்க வந்தவனோ

சற்றேதான் தூரத்தில்

 

மற்றொரு நாளென்றால்

மன்னிப்புத் தந்திடுவாள்

இன்றைக்குப் பிறந்தநாள்

இயற்கையின் பேரழகில்

 

மயங்கியே ரசித்திடஓர்

மந்திரம் சொன்னவளை

சந்தித்த வேளையிலா

சச்சரவு எழவேண்டும்

 

உச்சமான கோபத்தில்

உட்கார்ந்த காதலனும்

கட்டழகி அருகிருந்தும்

கவனிக்கும் நிலையிலில்லை

 

தவம்அது செய்வதுபோல்

தனிமையிலே தவிக்கின்றாள்

கனியே முத்தே என்றேதான்

கவிதைமழை பொழிந்தவன்

 

தவிக்கின்ற பெண்ணைவிட்டு

தனியேதான் இருக்கின்றான்

இனிமையான பொழுதுதான்

இம்சையைத் தருகிறது

 

அம்சமுள்ள மணல்கோட்டை

அவனுக்காய் கட்டுகின்றாள்

கவனித்தால் மகிழ்ந்திடுவான்

கலையதனை ரசித்திடுவான்

 

அலைவந்தால் அழிந்துவிடும்

அத்தனையும் மறைந்துவிடும்

சித்திரப் பாவையிவள்

சிற்பமாய் வடித்திருக்கும்

 

அற்புதக் காதல் மட்டும்

அழியாது எப்பொழுதும்

கழிந்தே காலமும் போகிறதே

கன்னி மனம் மகிழ்வாளா?

 

நன்றி: வல்லமை மின்னிதழ்

Advertisements

2 பதில்கள் to “கன்னி மனம் மகிழ்வாளா?”

  1. yarlpavanan மே 6, 2015 இல் 6:16 முப #

    சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    • rasippu மே 6, 2015 இல் 7:04 முப #

      தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி திரு. யாழ்பாவாணன் அவ்ர்களே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: