மனமும் நாயும் சிலேடை

29 ஏப்
படக்கவிதைப் போட்டி 10

படக்கவிதைப் போட்டி 10

வல்லமை மின்னிதழ் அறிவித்திருக்கும் படக்கவிதைப் போட்டி-10 க்கு நாம் அனுப்பிய கவிதை. இந்தக் க்விதை கலிவெண்பா வகையைச் சேர்ந்தது.

அன்பால் வசமாகும் வீட்டில் ரகசியமாய்

கன்னம் இடுவோரைக் கண்டதும் – மென்னி

பிடிக்கத் துடிக்கும் விளையாடி பல்லால்

கடிக்கும் குலைக்கும் அதட்டி– கடிந்தால்

மனமது சோரும் நினைவை உரைக்கும்

மனதில் நினைத்த விதமாய் – தினமும்

உலவும் பயிற்சி அளித்தால் உதவும்

பலவும் சரியாய் நடத்தும் – விலகும்

மெதுவாய்ப் பயந்து பணித்தால் துணிந்து

எதுவாய் இருந்தாலும் செய்யும் – அதுவாய்

திரும்பும் நிலையொன்றில் நில்லாது ஓடும்

விரும்பும் இடத்தே கிடக்கும் – கருத்தைச்

சிதைக்கும் மிரட்டினால் ஓய்ந்து நடுங்கும்

பதைத்தால் விரட்டும் நிறுத்தி – அதையே

கவனித்தால் (அ)டங்கும் ஒழுங்கில் மிளிரும்

தவத்தால் சிறக்கும் அடக்க – தவிக்கும்

பயத்தைக் கொடுக்கும் பழகிய பின்தை

ரியத்தை அளிக்கும் ஒருவர் – வயமானால்

அன்பைப் பொழியும் அவரின் அடிமையாய்

தன்னையே தந்து முடிந்திடும் – ஒன்றியே

நன்றியைக் காட்டிடும் சித்தர்தம் கூற்றினால்

என்றும் மனமது நாய்

 

நன்றி: வல்லமை மின்னிதழ்

Advertisements

2 பதில்கள் to “மனமும் நாயும் சிலேடை”

 1. yarlpavanan ஏப்ரல் 29, 2015 இல் 10:13 பிப #

  சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  • rasippu ஏப்ரல் 30, 2015 இல் 4:21 முப #

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. யாழ்பாவாணன் அவர்களே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: