மகிழ்ச்சியான தருணம்

18 மார்ச்

படக்கவிதை 4

படக்கவிதைப் போட்டி-4 க்கு நாம் அனுப்பிய கவிதை

அன்பான கணவருடன் 
இன்பமான வாழ்க்கை
அளவில்லா ஆனந்தம்

 ஆயிரம் பிறைகள்
காணப்போகும் எனக்கு
எழுபதாம் பிறந்த நாளாம்

 இனிப்பான கேக்கை ஊட்டியே
களிப்பான இளைய பேத்தி
பாட்டொன்று பாடு என்றாள்

மலையோரம் வீசும் காற்று
மனதோரம் பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா என்று

 எனக்குப் பிடித்த
சினிமாப் பாட்டை
இனிமையாய் நானும்பாட

இன்னுமிந்த பாட்டிக்கு
வேண்டுமாம் கேக்கு
என்றவளும் ஓடிவந்தாள்

 இதனைக் கண்ட
இன்னொரு பேத்தியும்
கேக்கோடு தான்வந்தாள்

குட்டிப் பெண்களின் 
குறும்பான விளையாட்டு
கேக்கோடு என்றால்

 இந்தக் கிழவருக்கும்
இப்போது வந்ததொரு 
ஆசையைப் பாரேன்

இன்றுதான் கல்யாணம் 
ஆனவர் போலவே
கொஞ்சுவதைப் கேளேன்

இருந்தாலும் இந்த
மகிழ்ச்சியான தருணம்
மறக்கமுடியாத ஒன்றுதான்

இத்தனை வருடம் 
இன்பமாய் வாழ்ந்ததே 
எங்களோட சாதனை

 எங்களது வாழ்க்கை
இன்றைய இளசுகளுக்கு
தந்திடுமே போதனை

நன்றி: வல்லமை மின்னிதழ்
Advertisements

2 பதில்கள் to “மகிழ்ச்சியான தருணம்”

  1. Pandian Gee மார்ச் 18, 2015 இல் 9:10 முப #

    படத்துக்கேற்ற பாடல்!
    வெல்லுவது நிச்சியம் !
    பழநிச்சாமிக்கு வாழ்த்துகள்
    – வில்லவன் கோதை

    • rasippu மார்ச் 18, 2015 இல் 10:25 முப #

      தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: