இயக்குனர் சிகரத்துக்கு அஞ்சலி

24 டிசம்பர்

BALACHANDER‘தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாக்குக்கு இணங்க தான் பணியாற்றிய திரைத் துறையிலே கோலோச்சியவர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்கள். மகாகவி பாரதியின் உணர்ச்சி மிக்க பாடல்களை தன்னுடைய படங்களில் பாட வைத்து படங்களுக்கு உயிரோட்டம் தந்தவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல் ஆகியவர்களை மட்டுமல்லாது, இன்னும் பல திறமையான நடிகர்களையும் இயக்குனர்களையும் அறிமுகப் படுத்தியவர். புகழின் உச்சியைத் தொட்டவர். பலருக்கும் வழிகாட்டியாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்கியவர்.

சமூகத்தின் பலரது எதிர்ப்புகளையும் மீறி துணிச்சலான கருத்துக்களையும், பெண்ணின் பெருமையையும் பறைசாற்றும் விதமாக தன்னுடைய திரைப்படங்களை காட்சிப் படுத்தியவர். நடிகர்களுக்காக ஓடிய திரைப் படங்களுக்கு மத்தியில், கதைக்காகவும் இயக்கத்துக்காகவும் படங்களை ஓட வைத்தவர்.

அவர் இன்று மறைந்து விட்டார். அன்னாரது மறைவு திரைத்துறைக்கு மாபெரும் இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: