சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 17

19 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

அத்தியாயம் 9 இலிருந்து 14 வரை அந்தக் கதையின் லிங்க் கொடுக்கப் பட்டது. ஆனால் லிங்க் மூலமாக திறப்பதை விட எளிதாக இருக்கும் என்பதால்  7-11-14 அன்று வெளியான அத்தியாயம் 17 இங்கே நேரடியாகவே பதிவிடப் படுகிறது.

அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நமது நன்றி!

இதற்கு முந்தைய அத்தியாயம் 16 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

7-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

17. பந்துலுவின் கடைசி நாட்கள்

சந்திரிகை லண்டனுக்கு படிக்கச் சென்ற கால கட்டத்தில் வீரேசலிங்கம் பந்துலுவின் நிலையையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

 மனைவியின் மறைவுக்குப் பின் சென்னைக்கு வந்த பந்துலு, சந்திரிகை லண்டனுக்குப் போன பிறகு, மறுபடி ராஜமஹேந்திரபுரத்துக்குச் சென்று வசித்து வந்தார். விசாலாட்சி மற்றும் விசுவநாத சர்மாவின் மேற்பார்வையில் ஹிதாகாரிணி சமாஜத்தின் பணிகள் செம்மையாக நடந்து வந்தது. ஆனால் பழைமைவாதிகளின் எதிர்ப்பும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

ஆங்கிலேயர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத பழமைவாதிகள், தங்களுக்கு ஆங்கிலேய அரசின் ஆதரவு இருப்பதாகப் புரிந்து கொண்டு பல்வேறு வகைகளிலும் பந்துலுவுக்கும் அவரது சீர்திருத்தப் பணிகளுக்கும் தொந்திரவு ஏற்படுத்தி வந்தார்கள்.

 ரௌலட் சட்டம் வந்த பிறகு நிலமை இன்னும் மோசமாயிற்று. விசுவநாத சர்மா நடத்தும் பத்திரிக்கையின் எழுத்துக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிரானதாக இருந்ததால், அந்தப் பத்திரிக்கையை நிறுத்துமாறு அச்சுறுத்தலும் விடுக்கப் பட்டது. ஆனாலும் பந்துலு துணிச்சலாக பத்திரிக்கையைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அதனால் அவருக்கு அரசின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள நேரிட்டது.

 பந்துலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. ராஜமஹேந்திரபுரத்தில் அவருடைய எதிர்ப்பாளர்கள் ஒரு இயக்கமாக உருவெடுத்தார்கள். விதவைத் திருமணம் என்பது சமுதாயத்திற்கு எதிரானது என்றும் அதனால் அவருடைய ஹிதாகாரணி சமாஜத்தை தடை செய்ய வேண்டும் என்றும் ஒரு போராட்டமே நடைபெற்றது.

ஒரு நாள் அவர் தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது நடுநிசியில் அவரது வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள். அதிலிருந்து தப்பிப் பிழைத்த அவர் அன்று முதல் விசாலாட்சியின் வேண்டுகோளின் பேரில் அவர்களுடன் தங்கலானார்.

 அவருடைய எதிரிகள் அவர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தார்கள். விசாரணையே இல்லாமல் அவரைச் சிறையில் அடைத்து கொடுமைக்கு ஆளாக்கினார்கள். ஆனால் மக்களின் விடுதலைப் போராட்டமும் தீவிரமான நிலையில் அவர் ஒரு வருட சிறைவாசத்துக்குப்பின் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில் அவருடைய உடல்நிலை மிகவும் நலிவடைந்தது.

 விடுதலையான பிறகு, அவருக்கு நாளாக ஆக, சந்திரிகையைக் காண வேண்டும் என்ற ஆசை வலுப்பெற்றது. அவள் படிப்பு முடிந்து வரும்போது பதினெட்டு வயது முடிந்து இருக்கும். அதற்கு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவளுக்கு விவாகம் செய்து விட வேண்டும் என்று தீர்மானித்து அதற்கான வேலைகளில் இறங்கினார். அதனால் 1919 வருட ஆரம்பத்தில் சென்னை வந்து தங்கினார்.

அந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்றது. ஆனால் அதுபற்றி இந்தியாவின் மற்ற இடங்களுக்கு உடனடியாக தகவல் பரவவில்லை. சென்னையில் இருந்தவர்களுக்கு ஒரு மாத காலத்துக்குப் பிறகுதான் அந்த விஷயம் தெரிந்தது. அதைக் கேள்விப்பட்ட மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆங்காங்கே ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

 அந்த கிளர்ச்சியை அடக்க அரசாங்கம் தடியடிப் பிரயோகமும், கண்ணீர் புகையும் பிரயோகப் படுத்தியது. பலரும் கைது செய்யப் பட்டார்கள். வெகு நாட்களாக காத்திருந்த பந்துலுவின் எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அவரை வெறியோடு தாக்கி நிலைகுலைய வைத்தார்கள். முதுமையின் காரணமாகவும் தாக்குதலின் காரணமாகவும் பந்துலுவின் உடல் நிலை வெகுவாக பாதிக்கப் பட்டது.

 கோபாலய்யங்காரும், மீனாட்சியும் அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க ஏற்பாடு செய்து பார்த்துக் கொண்டார்கள். உடல் நிலை பாதிக்கப் பட்ட நிலையிலும் பந்துலுவின் எண்ணமெல்லாம் சந்திரிகையைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. அவள் இந்தியா திரும்பும்வரை எப்படியாவாது தன்னை பிழைத்திருக்கச் செய்யுமாறு இறைவனைப் பிரார்த்தித்தார்.

 ஆனால் நாளுக்கு நாள் அவரின் உடல் நிலை மோசமானது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 1919 ம் ஆண்டு மே 27 அன்று வீரேசலிங்கம் பந்துலு சென்னையில் காலமானார். தென்னாட்டின் ராஜாராம் மோகன்ராய் என்று பலராலும் பாராட்டப்பட்ட பந்துலு அவர்களது புகழ் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: