சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 16

18 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

அத்தியாயம் 9 இலிருந்து 14 வரை அந்தக் கதையின் லிங்க் கொடுக்கப் பட்டது. ஆனால் லிங்க் மூலமாக திறப்பதை விட எளிதாக இருக்கும் என்பதால்  4-11-14 முதல் 6-11-14 வரை வெளியான அத்தியாயம் 16 இங்கே நேரடியாகவே பதிவிடப் படுகிறது.

அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நமது நன்றி!

இதற்கு முந்தைய அத்தியாயம் 15 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

4-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

16. லண்டனில் சந்திரிகையின் சட்டப்படிப்பு

1916 ஆம் வருடத்துக்கு நம் கதை நகர்கிறது. சந்திரிகைக்கு இப்போது பதினைந்து வயது.

 பள்ளியில் மெட்ரிக் தேர்வில், அனைவரும் எதிர்பார்த்தது போலவே சந்திரிகை சென்னைப்பல்கலை கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றாள். அதற்கு ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த விழாவுக்கு சரோஜினி நாயுடுவும், சில காங்கிரஸ் தலைவர்களும் வந்திருந்தனர்.

 சரோஜினி நாயுடு தலைமையில் நடந்த அந்த விழாவில், அவர் சந்திரிகைக்கு பரிசு வழங்கி பாராட்டிப் பேசினார். பிறகு சந்திரிகையிடம், “நானும் இதே சென்னைப்பல்கலை கழகத்தில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றேன் என்பது உனக்குத் தெரியுமாஎன்று கேட்டார்.

 , தெரியுமே, அதனால்தான் நானும் உங்களைப் போலவே முதலாவதாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்தேன். என்னுடைய இந்த வெற்றிக்கு காரணம் நீங்கள்தான்என்றாள். சரோஜினி அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

 அடுத்து என்ன படிக்க விரும்புகிறாய்என்று கேட்டதுதான் தாமதம். உடனே லண்டன் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் சட்டம் படிக்க வேண்டும்என்றாள் சந்திரிகை. அதைக் கேட்டு மிகவும் வியப்படைந்த சரோஜினி நாயுடு, “உன்னுடன் யார் வந்திருப்பது, நான் அவர்களைப் பார்க்க வேண்டும்என்று சொல்லி கோபாலய்யங்காரையும் மீனாட்சியையும் சந்தித்தார்.

 அவர்கள் மூலம் சந்திரிகையைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்ட சரோஜினி அம்மையார், “இவளுடைய மேற்படிப்புக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்என்று சொல்லி தன்னுடைய முகவரியைத் தந்து ஹைதராபாத்தில் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுக் கொண்டார்.

 அவர் கேட்டுக்கொண்டபடி கோபாலய்யங்காரும் மீனாட்சியும் சந்திரிகையுடன் ஹைதராபாத் சென்று சரோஜினி நாயுடுவை சந்தித்தார்கள். அவர் உறுதி அளித்தபடி, ஹைதராபாத் நிஜாமிடம் அவர்களை அழைத்துச் சென்று, அவர் மூலமாக அவள் லண்டன் சென்று படிப்பதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். அதன்பிறகு சந்திரிகை லண்டனுக்கு பயணம் மேற்கொண்டாள்.

 லண்டனுக்கு சந்திரிகை படிக்கச் சென்ற சமயத்தில் இந்தியாவில் நடந்தவை மிக முக்கியமான நிகழ்ச்சிகளாகும். முதலாம் உலகப் போரும், சில நாடுகளில் அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டிருந்த காலகட்டம் அது. அப்போது இந்தியாவில் நடைபெற்ற சம்பவங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

 கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி என்பது மாறி, இங்கிலாந்து மகாராணியின் நேரடி ஆட்சி என்று மாறி விட்ட நிலையிலும், ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடிப்பதை நிறுத்தவில்லை. இந்திய கைத்தறி ஆடைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அந்நிய ஆடைகள் முன்னிறுத்தப் பட்டன. கைவினைப் பொருட்கள் புறக்கணிக்கப் பட்டன..

 தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையின் பிடிக்குத் தள்ளப் பட்டனர். ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் போராடத் தொடங்கினார்கள். அதன் பிறகு மக்கள் சுதேசிப் பொருள்களை மட்டுமே வாங்குவோம்; விதேசிப் பொருள்களை பகிஷ்கரிப்போம் என முழங்கினர்

 1914ம் ஆண்டு உலக மகா யுத்தம் ஆரம்பமானது. உலகம் இரண்டாகப் பிரிந்து மோதிக் கொண்டதில் பலரும் மாண்டனர். 1919 ஆண்டு வரை நடைபெற்ற அந்த கோரமான யுத்தத்தில் ஏராளமான இந்தியர்கள் மடிந்தனர். வெள்ளையர் அரசு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து இந்திய மக்களை யுத்தத்தில் பங்கு பெறச் செய்தது. அந்தக் காலகட்டத்தில் மக்கள் அனைவருக்கும் நரக வேதனையை அனுபவித்தனர்.

 இடைப்பட்ட காலத்தில் 1917ல் ரஷ்யாவில் புரட்சியின் மூலம் ஜார் மன்னரின் ஆட்சி அகற்றப்பட்டு லெனின் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சி ஏற்பட்டது. அது ஒரு யுகப்புரட்சி என்றே மக்கள் அனைவராலும் வர்ணிக்கப்பட்டது. பத்திரிக்கைகளின் மூலமும், பொதுக்கூட்டங்கள் மூலமும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது.

5-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

மக்களின் இந்த விழிப்புணர்ச்சி ஆங்கிலேய அரசுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது. எனவே மக்களிடையே அது ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய்ந்து, மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியைப் புரிந்து கொண்ட ஆங்கிலேய அரசு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட ஆரம்பித்தது.

1918ம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை, 1919ல் பஞ்சாப் மாநிலத்தில் நடத்துவது என முடிவு செய்தது. பஞ்சாபிலிருந்து ஏராளமான வீர்ர்கள் முதல் உலகப்போரில் பங்கு பெற்று தங்களது இன்னுயிரை தியாகம் செய்திருந்தார்கள். தென் ஆப்பிரிக்காவிலிருந்து அப்பொழுதுதான் இந்தியாவிற்கு திரும்பி இருந்தார் காந்திஜி. காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார்.

 டில்லி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கான அறைகூவல் விடுக்கப் பட்டிருந்தது. அதனால் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் பொருட்டு ரௌலட் சட்டத்தை உருவாக்கி இருந்தது ஆங்கிலேய அரசு. அது ஒரு அதிபயங்கரமான கொடூரமான சட்டமாகும். அதன் மூலம் ராஜ துரோக வழக்கில் யாரை வேண்டுமானாலும் கைது செய்து விசாரணை இன்றி சிறையில் தள்ளலாம்.

 பத்திரிக்கைகளின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. புரட்சிகரமான கருத்துக்கள் கொண்ட எழுத்துக்களை பிரசுரித்தாலோ, விநியோகித்தாலோ அல்லது கையில் வைத்திருந்தாலோ அவர்கள் இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு விசாரணையில்லாமல் சிறையில் தள்ளப் பட்டனர். இது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்ட உணர்வை மக்களிடையே தோற்றுவித்தது.

 காந்தியடிகள் இந்த சட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். இந்தியாவெங்கும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. ஆங்கிலேய அரசாங்கம் செய்வதறியாது திகைத்தது. காந்தி உட்பட முக்கியமான தலைவர்கள் கைது செய்யப் பட்டனர். மக்களை ஒடுக்க கொடூர குணம் கொண்டவர்களை அதிகாரிகளாக அரசாங்கம் நியமித்தது.

 இந்த விவரங்களையெல்லாம் இங்கு சொல்வதற்கு காரணம் இருக்கிறது. இது போன்ற காலகட்டத்தில்தான் சந்திரிகை லண்டனில் சட்டப்படிப்பை படித்து முடித்தாள். படித்து விட்டு ஒரு வருடம் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள். அதே சமயத்தில் அங்குள்ள பத்திரிக்கைகளில் சட்ட நுணுக்கங்களுடன் கூடிய பல கட்டுரைகள் எழுதினாள். அவளுடைய சட்டத்திறமையைக் கண்ட வெள்ளையர்கள் அவளை இங்கிலாந்திலேயே பணியில் அமர்த்திக் கொள்ள விரும்பினார்கள். அதற்காக அவளுக்கு பெரும் பணத்தை ஊதியமாக கொடுக்கவும் முன் வந்தார்கள்.

 அந்த நேரத்தில்தான் இந்தியாவில் 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ல் ஜெனரல் டயர் என்னும் கொடியவனால் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடத்தப்பட்டது. ஆயிரத்துக்கும் பேற்பட்ட அப்பாவி பொதுமக்களை துப்பாக்கி குண்டுகளால் துளைத்த கொடூர சம்பவம் அது. யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத,காலாகாலத்துக்கும் மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திய படுகொலை அது. ஆனால் இங்கிலாந்தில் அந்த விஷயம் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகே அந்த செய்தி அங்குள்ளவர்களுக்குத் தெரிய வந்தது

6-11-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

அப்போது இந்தியாவில் அன்னி பெசன்ட் அம்மையார் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தீவிரமாகப் பணியாற்றி வந்தார். அவர் ஹோம் ரூல் லீக் என்னும் பெயரில் ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அதன் இங்கிலாந்து தூதராக நியமிக்கப்பட்டு 1919 ஜூலை மாதம் சரோஜினி நாயுடு லண்டன் சென்றார்.

 சரோஜினி நாயுடு லண்டனுக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அவரைச் சந்தித்தாள் சந்திரிகை. சந்திரிகையின் படிப்பு பற்றியும் பயிற்சி பற்றியும் கேட்டு அறிந்த சரோஜினி நாயுடு இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியையும் போராட்டத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினார்கள். இந்தியா திரும்பிய பிறகு என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி விவாதித்தார்கள்.

 சந்திரிகை லண்டனிலேயே அதிக நாள் இருக்க விரும்பவில்லை. தன்னுடைய சட்ட அறிவு தன்னுடைய தாய் நாட்டுக்கே பயன்பட வேண்டும் என்று விரும்பினாள். அது பற்றி ஒருநாள் சரோஜினி அவர்களிடம் எடுத்துரைத்தாள்.

அன்று மாலை தான் ஒரு இளைஞரை சந்திக்க இருப்பதாகவும், அவளும் உடன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சரோஜினி.

 அன்று மாலை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அந்த இளைஞரைப் பார்த்ததும் சந்திரிகையின் மனத்தில் இனம் புரியாத ஒரு சந்தோஷம் உண்டானது. சுபாஷ் சந்திரா என்ற திரு நாமம் கொண்டு, பின்னாளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற பெயரில் அறியப்பட்டவர்தான் அந்த இளைஞர். தந்தையின் விருப்பப்படி ஐ.சி.எஸ் படிப்பதற்காக கேம்பிட்ஜில் சேர்ந்திருந்தார்.

 சுபாஷ் சந்திராவின் எண்ணங்களும், சந்திரிகை எண்ணங்களும் ஒரே மாதிரி இருந்ததை உணர்ந்த சரோஜினிக்கு, இருவரும் வெவ்வேறு உருவம் கொண்ட ஒரே ஆத்மா போலத் தோன்றினார்கள். பெயரிலும்கூட ஒரு பொருத்தம் இருந்ததை உணர்ந்த அவர், அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் நம் நாட்டு விடுதலைக்கு எப்படிப்பட்ட ஒரு வலிமையான சக்தி கிடைக்கும் என்று சிந்தித்துப் பார்த்தார். சந்திரிகைக்கும் தன்னுடைய ஆண் வடிவம்தான் சுபாஷ் என்ற எண்ணம் உண்டானது.

அன்று ரௌலட் சட்டம் பற்றியும், ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றியும் சரோஜினி அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார். இது போன்ற ஒரு கொடுமை இனிமேல் இந்திய மண்ணில் நடைபெறக்கூடாது. இனியும் ஆங்கிலேயர்கள் நம்மை ஆதிக்கம் செலுத்தக்கூடாது. விரைவில் சுதந்திரம் பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 சரோஜினி அம்மையாரின் பேச்சு சுபாஷ் சந்திர போஸின் மனத்தில் சுதந்திர வேட்கையைத் தூண்டி விட்டது. தான் உடனே இந்தியா திரும்ப போவதாகச் சொன்னார். ஆனால் அவர் அப்போதுதான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஐ.சி.எஸ் படிப்பதற்காக சேர்ந்திருந்தார். தேர்வுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருந்தது. தந்தையின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியது முதல் கடமை என்பதை அவருக்கு அறிவுறுத்தி, ஐ.சி.எஸ் படிப்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார் சரோஜினி அம்மையார்.

 ஆனால் சந்திரிகையின் படிப்பு முடிந்து விட்ட நிலையில், இப்போது பயிற்சியும் நிறைவடையும் நிலையில் இருப்பதால், அவள் உடனே இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்றும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப் பட்டது. தான் இன்னும் ஆறு மாதங்கள் கழித்து இந்தியா திரும்ப இருப்பதாகவும் சொன்னார்,

 பிறகு சென்னையில் உள்ள அன்னி பெசன்ட் பெயருக்கு ஒரு கடிதம் எழுதி சந்திரிகையிடம் கொடுத்தார். இந்தியா திரும்பியதும் அன்னி பெசன்ட் அவர்களை சந்தித்து கடிதத்தைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்தக் கடிதத்தைப் படித்தால், சந்திரிகைக்குத் தேவையான உதவிகளை அவர் செய்வார் என்றும் சரோஜினி சொன்னார். அதன்படி 1920ம் வருட ஆரம்பத்தில் இந்தியா திரும்பினாள் சந்திரிகை

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: