சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 14

16 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

இதற்கு முந்தைய அத்தியாயம் 13 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

30-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

13.சந்திரிகையின் விருப்பம்

பிறகு கோபாலய்யங்காரையும், மீனாட்சி மற்றும் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார் பந்துலு. பந்துலுவின் அணுகு முறையும் ஒரு விஷயத்தை அவர் கையாளும் விதமும் கோபாலய்யங்காரை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. அவர் இல்லாவிட்டால் இந்த விஷயம் இந்தளவில் முடிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. பந்துலுடைய ஆற்றலும், தீர்க்க தரிசனமும் அவரைப் பிரமிக்க வைத்தது.

 மறுநாள் பந்துலுவுக்கு நன்றி சொல்லி விட்டு கோபாலய்யங்காரும், மீனாட்சியும் ஊருக்குக் கிளம்பினார்கள். சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் தகவல் சொல்வதாக பந்துலுவிடம் சொல்லி விட்டு விடை பெற்றார் கோபாலய்யங்கார்.

14.மீனாட்சியின் தியாக எண்ணம்

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்று சொல்வார்கள். ஆனால் அது எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று நினைத்தால் ஆச்சரியம்தான் ஏற்படுகிறது. கோபாலய்யங்காரும், மீனாட்சியும் ராஜமஹேந்திரபுரத்தில் பந்துலுவையும், விசாலாட்சியும் சந்தித்து விட்டு ஊருக்குத் திரும்பி அதற்குள் மூன்று வருடம் ஓடி விட்டது. சந்திரிகைக்கு இப்போது ஒன்பது வயதாகி விட்டிருந்தது.

 இது 1910 வருடம் ஆகஸ்ட் மாதம். சென்னையில் மீனாட்சியின் வாழ்க்கை அற்புதமாய் இருந்தது. முத்தம்மாளின் வீட்டுக்கு எதிரே ஒரு பெரிய வீடு அவர்களுக்கு வாடகைக்கு கிடைத்தது. அங்கு குடிவந்த அவர்கள் சந்திரிகையை ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்து வளர்த்து வந்தனர்.

 பள்ளியில் எப்போதும் முதல் மாணவியாக வருவாள் சந்திரிகை. அவள் ஒவ்வொரு முறையும் முதலாவதாக வரும் போதும் அதை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள் மீனாட்சியும் கோபாலய்யாங்காரும். வார இறுதி நாட்களில் கடற்கரைக்கோ அல்லது வேறு எங்காவது கோயிலுக்கோ சென்று வருவார்கள். சில சமயம் முத்தம்மா குடும்பத்தாரும் சேர்ந்து கொள்வார்கள்.

 மற்ற நாட்களில் சாயந்திர வேளைகளில் முத்தம்மாவின் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவாள் சந்திரிகை. சோமநாதய்யரும் அவளுக்கு சட்டப் படிப்பு சம்பந்தமான கனவை மேலும் மேலும் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தார். அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் விசாலாட்சியும் விசுவநாத சர்மாவும் சென்னைக்கு வந்து சந்திரிகையை பார்த்து விட்டுச் செல்வார்கள்.

எப்போதாவது ஒரு முறை தன்னுடைய பிறந்த வீட்டுக்கு சென்று வருவாள் மீனாட்சி. ஆனால் அவளுடைய இப்போதைய வாழ்க்கை முறைக்கும், பழக்க வழக்கத்துக்கும் பொருத்தமானதாக அவளது பிறந்த வீட்டின் சூழ்நிலை இல்லை. எனவே தன் பிறந்த வீட்டாருடன் அவளுக்கு அவ்வளவாக ஒட்டுதல் ஏற்படவில்லை. சந்திரிகைக்கு அந்த சூழ்நிலை பழகிவிடக் கூடாது என்று ஒருபோதும் அவளை அங்கு கூட்டிச் சென்றதில்லை.

 இப்படி சந்தோஷமாக சென்று கொண்டிருந்த மீனாட்சியின் வாழ்க்கையில்தான் திடீரென்று ஒரு பிரச்சினை முளைத்தது. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கணவனிடம் சொல்ல்லாமென்றால் அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்ற பயம். ஏதாவது ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. ஆனால் யாரிடம் கேட்பது என்று புரியவில்லை. இப்படியே விட்டு விட்டால் நாளாக ஆக பிரச்சினை பெரிதாக வளர்ந்து விடும்.

31-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

இப்போதைய அவளது பிரச்சினைக்கு காரணம் அவளுக்கு இந்த முறை நாள் தள்ளிப் போய் இருக்கிறது. அதனால் பிள்ளையாண்டு இருக்கலாமோ என்று ஒரு சந்தேகம். இன்றோடு நாற்பத்தைந்து நாளாகி விட்டது. நமக்கு ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்கிய காலம் போய் இப்போது குழந்தை எதற்காக உருவாகிறது என்கிற வெறுப்புதான் ஏற்படுகிறது. இன்னும் அது உறுதியாகவில்லை என்றாலும் அது குழந்தையாக இருந்தால் என்ன செய்வது. சந்திரிகையின் மேல் நமக்குள்ள அன்புக்கு பங்கம் வந்து விடுமோ என்று கலங்கினாள்.

 கணவரிடம் எப்படிச் சொல்வது. இதைக் கேட்டு அவர் சந்தோஷப்படுவாரா அல்லது வேண்டாம் என்று சொல்வாரா. அவருக்கும் சந்திரிகை மீது அளவு கடந்த பிரியம்தான். இருந்தாலும் தனக்கென்று ஒரு குழந்தை பிறப்பது என்பது அவரது ஆண்மைக்கு சமுதாயத்தில் ஒரு அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதால் இந்தக் குழந்தை வேண்டுமென்று விரும்புவாரா?

 அல்லது அவரிடம் சொல்லாமலே இருந்து விடலாமா? அது கணவருக்கு உண்மையாக நடப்பது ஆகாதே! என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை. சரி, அவர் வந்ததும் அவரது மனவோட்டத்தை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சொல்வதா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

 அன்றைய பொழுது மீனாட்சிக்கு குழப்பமான மனநிலையுடனேயே கழிந்தது. பலவாறு சிந்தித்தபடி பொழுதைக் கழித்தாள். மாலையில் கோபாலய்யங்கார் வீடு திரும்பியபோது சந்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். மீனாட்சி அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

 மீனாட்சி, சந்திரிகை சாப்பிட்டாளா?” என்றார்.

 ம். சாப்பிட்டு விட்டாள். முகம் கழுவிக் கொண்டு வாருங்கள். உங்களுக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்என்றாள் மீனாட்சி.

 சாப்பிட்டு முடித்து சந்திரிகையை தூங்கப் பண்ணி விட்டு, கணவரிடம் வந்தாள். மீனாட்சி, நான் வரும் போதே கவனித்தேன். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய். உடம்பு ஏதும் சரியில்லையாஎன்றார்.

 அதெல்லாம் ஒன்றுமில்லைஎன்ற மீனாட்சி அவர் பார்வையைத் தவிர்த்தாள்.

 “இங்கே வா மீனாட்சி, ஏதோ ஒரு மனக்குறை உனக்கிருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். எதுவானாலும் என்னிடம் சொல்என்றார்.

 கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள். சொல் மீனாட்சி, என்ன விஷயம்

 என்னங்க, நமக்கு இப்போது இன்னொரு குழந்தை பிறந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள். சந்திரிகையை வெறுத்து விடுவீர்களா?” என்றாள் அவர் கண்ணை நேராகப் பார்த்து.

 சீச்சீ, என்ன பேசுகிறாய். சந்திரிகையை நான் வெறுப்பதாவது. இப்படியெல்லாம் இனிமேல் பேசாதேஎன்றார்.

 இல்லை, ஒருவேளை நமக்கும் ஒரு குழந்தை பிறந்து விட்டால்என்றாள்.

 அதனால் என்ன, இரண்டு குழந்தைகளை நம்மால் வளர்க்க முடியாதா? முத்தம்மாளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனவே. அவரகள் எந்தக் குழந்தையிடமும் வேறுபாடு பார்ப்பதில்லையே. மூன்று குழந்தைகளையும் ஒரே மாதிரிதானே நடத்துகிறார்கள்என்றார்.

 அப்படியென்றால் நான் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். இப்போது நான் பிள்ளை உண்டாகி இருக்கிறேன் என்று தோன்றுகிறதுஎன்றாள் மீனாட்சி. இதைச் சொல்லும் போது அவள் முகத்தில் ஒரு சோகம்.

 மீனாட்சி, இது ரொம்பவும் சந்தோஷமான விஷயமல்லவா. ஆனால் உன் முகத்தைப் பார்த்தால் ஏதோ வருத்தம் இருப்பதாகத் தோன்றுகிறதேஎன்றார்.

 ஆமாம். இந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. சந்திரிகை மட்டும்தான் நமக்குக் குழந்தை. நமது அன்பை இன்னொரு குழந்தைக்கு பங்கு போட்டுக் கொடுக்க முடியாதுஎன்றாள். அவள் குரலில் உறுதி இருந்தது.

 இல்லை மீனாட்சி, நீ நினைப்பது தவறு. நமக்கு குழந்தை பிறந்தாலும் சந்திரிகையின் மீதுள்ள அன்பு எள்ள்ளவும் குறையாது. அதைப் பற்றிக் கவலைப் படாதேஎன்றார்.

என்னங்க, வேறு எதுவும் செய்ய முடியாதா. இந்தக் குழந்தையைக் கலைச்சுடலாமேஎன்றாள் மீண்டும்.

 மீனாட்சி, கொஞ்சம் யோசித்துப் பார். இந்தக் குழந்தை பிறந்தால் இத்தனை நாள் உனக்கிருந்த மலடி என்ற வசைச் சொல் மறையும். எனக்கும் ஆண்மகன் என்ற அங்கீகாரம் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் சந்திரிகைக்கும் இதில் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியுமாஎன்று கேட்டார்.

சந்திரிகைக்கு சந்தோஷமா. என்ன சொல்கிறீர்கள்என்றாள் ஆச்சரியமாக.

அவளுக்கு விளையாட ஒரு குட்டிப்பாப்பா கிடைக்குமல்லவா. உனக்கு சந்தேகமிருந்தால் அவளிடமே கேட்டுப் பாரேன்என்றார்.

மறுநாள் காலை சந்திரிகையை பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்த மீனாட்சி, “சந்திரிகை உனக்கு குட்டிப்பாப்பா பிடிக்குமாஎன்றாள்.

, பிடிக்குமே! ஏன் மீனாட்சி, உனக்கு பாப்பா பிறக்கப் போகுதாஎன்றாள்.

நிசமாத்தான் சொல்றியா, உனக்குப் பொறாமை கிடையாதாஎன்றாள் மீனாட்சி.

ம்ஹூம், எனக்கு ஒரு குட்டிப் பாப்பா பெத்துக் கொடு மீனாட்சிஎன்றாள் சந்திரிகை. மீனாட்சி அவளை அள்ளி அணைத்து நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தாள்.

அன்று முழுவதும் மீனாட்சி இனம் புரியாத ஒரு சந்தோஷத்தில் திளைத்தாள்.

ஆனால் அவள் சந்தோஷம் நிலைக்கவில்லை. சாயந்தரம் வீடு திரும்பிய கோபாலய்யங்கார், பந்துலு மனைவியின் மரணச்செய்தியை தெரிவித்தார்.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: