சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 13

15 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

இதற்கு முந்தைய அத்தியாயம் 12 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

28-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

13.சந்திரிகையின் விருப்பம்

சிறிது நேரம் கழித்து விசாலாட்சியே பேசத் தொடங்கினாள். அவள் பந்துலுவைப் பார்த்து, “ஐயா, இந்த ஏற்பாட்டுக்கு நான் ஒருகாலும் ஒத்துக் கொள்ள மாட்டேன். இதை நீங்களே அவர்களிடம் சொல்லி விடுங்கள்என்றாள்.

 பந்துலு மிகவும் ஜாக்கிரதையாக பேச முற்பட்டார். அவர் விசாலாட்சியைப் பார்த்து, “அம்மா, நீ சொல்வது சரிதான். நீ இந்த யோசனைக்கு ஒத்துக் கொள்ள மாட்டாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் கோபாலய்யங்காரிடம் எந்த உறுதி மொழியும் கொடுக்காமல், உன் வாயாலேயே உன் எண்ணத்தை தெரிந்து கொள்ளட்டும் என்று அவர்களை இங்கு அழைத்து வந்தேன்என்றார். அவர் சொன்னதைக் கேட்டு மீனாட்சிக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அவளது ஆசைக் கனவுகளெல்லாம் நொறுங்கி விட்டதாகத் தோன்றியது. பரிதாபமாக தன் கணவனைப் பார்த்தாள்.

 சரி, நாம் கிளம்பலாமாஎன்று சொல்லிய பந்துலு மற்றவர்களைப் பார்த்தார். அவர்களும் கிளம்ப ஆயத்தமானார்கள்.

 சந்திரிகை, தாத்தா போய் வரட்டுமாஎன்று அவளிடம் கொஞ்சினார்.

 சரி தாத்தாஎன்றபடி அருகில் வந்தாள் சந்திரிகை.

 ஏனம்மா, நுவ்வு ஏமி சதுவுத்துன்னாவுஎன்று அவளை அருகே அழைத்து அணைத்துக் கொண்டார். பிறகு ஞாபகம் வந்தவராக, “அய்யோ, ஏதோ ஞாபகத்தில் தெலுங்கில் கேட்டு விட்டேன். நீ என்ன படிக்கிறாய்என்றார்.

 தாத்தய்யா, நாக்கு தெலுகு சாலா பாகா தெலுசு. தெலுகுலோ மாட்லாடடம் நாக்கு சாலா இஷ்டம். காபட்டி மீரு தெலுகுனிதோ மாட்லாடன்டிஎன்றாள்.

 என் கண்ணே, நீ பேசுவதைக் கேட்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. சரே, நுவ்வு சதவாலனி அப்புடு ஏமி அவுதாமனுகுன்டுன்னாவு?” என்றார் பந்துலு.

 நாக்கு சரோஜினி நாயுடுகாரு சதிவினட்லுகா மெட்ரிக் பரீக்ஷலோ முதடீ ரேங்க் தீஸ்கோவாலி. அப்புடு லண்டன் கேம்பிர்ட்ஜ் விஸ்வ வித்யாலயம்லோ ந்யாயசாஸ்த்ரான்னி சதுவதானிகி அனுகுண்டானுஎன்றாள்.

 எந்துகு நீக்கு ந்யாயசாஸ்த்ரா சதுவதானிகி இஷ்டம்?”.

 நெஜம் செப்பாலனண்டே, மன தேசம்கோசம் சேவா சேஸ்தானிகி சாலா இஷ்டம்.. அதி கொறகு,ந்யாயசாஸ்த்ரான்னி சதுவானி அனுகுண்டானுஎன்றாள்.

 சால சந்தோஷம் அம்மா. அலாகே சேய்என்ற பந்துலு விசாலாட்சியைப் பார்த்தார்.

அவர்கள் இருவரும் பேசியது மீனாட்சிக்கு சுத்தமாக புரியவில்லை.

 குழந்தை என்ன சொல்கிறாள்என்று பந்துலுவைப் பார்த்து கேட்டாள்.

 சென்னையில் சரோஜினி நாயுடு படித்த பள்ளியில்தானே அவள் படிக்கிறாள். அவர்களைப் போலவே மெட்ரிக் தேர்வில் முதலாவதாக தேர்ச்சி அடைய வேண்டுமாம். பிறகு கேம்பிரிட்ஜ் யுனிவர்ஸிட்டியில் சட்டம் படித்து வக்கீலாக வேண்டும் என்பது அவளது ஆசையாம்என்றார் பந்துலு.

 இப்பொழுதே இந்தக் குழந்தைக்கு எவ்வளவு பெரிய லட்சியம் பார்த்தீர்களா? ஆனால் அவள் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் அவள் சென்னையில் அல்லவா படிக்க வேண்டும். ராஜமஹேந்திரபுரத்தில் இருந்து அவள் லட்சியத்தை எப்படி நிறைவேற்ற முடியும்என்று கேட்டாள்.

 இதைக் கேட்டு திடுக்கிட்ட விசாலாட்சி, மீனாட்சியைப் பார்த்தாள். பிறகு, “அவள் சிறு குழந்தை. ஏதோ விளையாட்டுத்தனமாக பேசுகிறாள்என்றாள்.

இல்லை, நான் சொல்வது விளையாட்டில்லை. நான் சட்டம்தான் படிப்பேன்என்றாள் சந்திரிகை. இப்போது எல்லோரும் யோசனையில் ஆழ்ந்தார்கள்.

 நீ சட்டம் படிக்க வேண்டும் என்று எப்படி முடிவெடுத்தாய்என்று பந்துலு கேட்டார். அதற்கு சந்திரிகை சொன்ன பதில் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவள் சொன்னதன் சாரம் இதுதான்.

29-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

இங்கு வருவதற்கு முன் ஒரு மாத காலமாக சென்னையில் முத்தம்மா வீட்டில் இருந்தாளல்லவா, அப்போது சோமநாதய்யர் கேஸ் சம்பந்தமாக உரையாடுவதையும் கோர்ட்டுக்கு போய் வருவதையும் பார்த்து அவரிடம் வக்கீல் தொழிலைப் பற்றி கேட்டிருக்கிறாள். அவரும் வக்கீல் தொழிலின் மேன்மை பற்றியும், காந்திஜி, நேருஜி,ராஜாஜி முதலான பல தலைவர்களும் சட்டம் படித்தவர்கள்தான் என்றும், சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்பவர்களுக்கு வாதாடுவதற்காக நிறைய வக்கீல்கள் தேவைப்படுவதாகவும், அது ஒரு வகையில் நம் நாட்டுக்கு செய்யும் சேவை என்றும் பலவாறு எடுத்துக் கூறியுள்ளார். அது சந்திரிகையின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.

 சந்திரிகை சிறுகுழந்தை என்றாலும் அவளது உறுதியும், குறிக்கோளும், நாட்டுப் பற்றும் அங்கிருந்த எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 அப்போது வேலை முடிந்து விசுவநாத சர்மாவும் வீட்டிற்குள் நுழைந்தார். வீட்டில் உள்ள எல்லோரையும் பார்த்து ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தவராய் அவர்களுக்கு உபசார வார்த்தைகளைக் கூறினார். பிறகு, “இங்கு ஏதோ விவாதம் நடந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. என்ன விஷயம்?” என்று வினவினார்.

 நான் என்ன படிக்க விரும்புகிறேன் என்று தாத்தா கேட்டார். நான் லண்டனில் சட்டம் படிக்கப் போவதாகச் சொன்னேன்என்று சந்திரிகையே நடந்ததைச் சொன்னாள்.

 ஆமாம், எங்களுக்கும் அதில் சம்மதம்தான். அவள் விரும்புவது போல் படிக்க வைக்க ஆசைப் படுகிறோம்என்றார் விசுவநாத சர்மா..

 அதற்கு முன் சென்னையில் மெட்ரிக்குலேஷன் படித்து முடிக்க வேண்டும். சரோஜினி நாயுடு அம்மையார் போல முதலாவதாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அவள் சென்னையில் படித்து முடிக்கும் வரை அவளை கோபாலய்யங்காரும், மீனாட்சியும் கவனித்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்என்று விளக்கினார் பந்துலு.

 அப்படியா, ஆனால் இவர்கள் இருப்பது தஞ்சாவூரில் அல்லவாஎன்றார் விசுவநாத சர்மா.

 நான் சென்னைக்கு மாற்றல் கேட்டிருக்கிறேன். சென்னையில் முத்தம்மா சோமநாதய்யர் இருக்கும் தெருவிலேயே ஒரு வீடு பார்த்துக் கொண்டு தங்கலாம் என்று இருக்கிறோம். அது சந்திரிகைக்கும் பிடித்தமானதாக இருக்கும்என்றார் கோபாலய்யங்கார்.

 நல்ல விஷயம்தான். இதற்கு விசாலாட்சி என்ன சொல்கிறாள்என்று கேட்டு விட்டு விசாலாட்சியைப் பார்த்தார் விசுவநாத சர்மா.

 அவளைப் பிரிந்து நான் எப்படி இருப்பேன். என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லையேஎன்று அழ ஆரம்பித்தாள் விசாலாட்சி.

 விசாலாட்சி, சந்திரிகை முன்னேற்றத்தை நாம் தடுக்கலாகுமா? அவள் சென்னையில்தானே படிக்க ஆசைப்படுகிறாள். நாமும் அவ்வப்போது சென்று பார்த்துக் கொள்ளலாமே. அதுவுமல்லாமல் லண்டனுக்கு அவள் படிக்கப் போனால் படித்து முடிக்கும் வரை நாம் அவளைப் பிரிந்து தானே இருக்க வேண்டும். அதனால் மனதைத் தேற்றிக் கொள். நமக்கு அவளது எதிர்காலம்தான் முக்கியம்என்று அவளைத் தேற்றினார்.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: