சந்திரிகையின் கதை தொடர்ச்சி – அத்தியாயம் 10

11 டிசம்பர்

ATS Noidaஅவ்வை தமிழ்ச் சங்கம் அறிவித்த மகாகவி பாரதியின், ‘சந்திரிகையின் கதை’ க்கு முடிவுரை எழுதும் போட்டியில் தேர்வு செய்யப் பட்ட என்னுடைய கதை, இதுவரை படிக்காதவர்களுக்காக இங்கு மீண்டும் வெளியிடப் படுகிறது.

இதற்கு முந்தைய அத்தியாயம் 9 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

17-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

10. விசாலாட்சியும் முத்தம்மாவும்

மிகவும் புத்திசாலியான குழந்தை. இவள் நிச்சயம் பெரிய ஆளாக வருவாள். அவளுக்கு என்ன விருப்பமோ அதை நிறைவேற்றி வைக்க வேண்டும். நானும் என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன்என்றாள் முத்தம்மா. இருவரும் சேர்ந்து சமையல் வேலையில் ஈடுபட்டார்கள்.

 விசுவநாத சர்மா மாடியில் இருப்பதாகக் கேள்விப் பட்டு சோமநாதய்யர் அவரை சந்திக்கச் சென்றார். சோமநாதய்யர் விசுவநாத சர்மாவிடம் உடல்நலம் விசாரித்தார். என் பிரியமான விசாலாட்சிக்கு மனவருத்தத்தைக் கொடுக்கிறோமே என்றுதான் கவலைப் படுகிறேன். அவளது அறிவுக்கும் குணத்துக்கும் மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டியவள். என்னைக் கட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகிறாள்என்று வருத்தப் பட்டார் விசுவநாத சர்மா.

 நீங்கள் அப்படியெல்லாம் கவலைப் படக்கூடாது. உங்களுக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை. வீணான கவலையினால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் இது. மனத்தினால் ஏற்பட்ட அவஸ்தைதான். மனதில் சமநிலை குறையும் போது இது போன்ற தடுமாற்றம் ஏற்படுகிறதுஎன்ற சோமநாதய்யரை ஆச்சரியமாகப் பார்த்தார் விசுவநாத சர்மா. சோமநாதய்யர் ஆறுதலாகப் பேசுவதைக்கேட்டு அவரிடம் மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

 உங்களைப் போன்ற ஒரு ஞானவானை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று எனக்கு மனம் மிகவும் லேசாக ஆகிவிட்டதுஎன்று சோமநாதய்யரின் கையைப் பிடித்துக் கொண்டார். உண்மையிலேயே அவருக்கு மனத்தெளிவு ஏற்பட்டு சில நாட்களாகி இருந்தது.அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் மிகவும் சாதாரணமான மனிதன். அதிலும் உடன் இருக்கும் மனிதர்களின் மகிமையை உணராமல் இருந்து விட்ட மஹாபாவிஎன்றார் சோமநாதய்யர்.

 இதுபோல் நீங்கள் பேசுவதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு அறிவு பூர்வமாக பேசும் நீங்களா அப்படி இருந்தீர்கள்? என்னால் நம்ப முடியவில்லைஎன்றார் விசுவநாத சர்மா.

படித்திருக்கிறோம் என்ற கர்வம், சம்பாதிக்கிறோம் என்ற திமிர், யாரையும் மதிக்காத அலட்சியம் என்று அகந்தை மனோபாவம் கொண்டவனாகத்தான் இருந்தேன். ஒன்று தெரியுமா? ஒருவனது அகந்தை அவனுக்கு ஒரு சாதாரண மனிதரிடம்கூட தலைகுனிவை ஏற்படுத்தி விடும். என் மனைவிதான் எனக்கு ஞானத்தை கற்றுக் கொடுத்தவள்என்று மனைவியின் பெருமையை சிலாகித்தார் சோமநாதய்யர்.

 பின்பு எழுத்துப் பணியெல்லாம் எந்த அளவில் இருக்கிறது?” என்று கேட்டார்.

 கொஞ்ச நாளாக நான் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதில்லை. அதனால் இப்போது எந்த வருமானமும் இல்லை. ஒரு குஜராத்தி நண்பரிடம் கொடுத்து வைத்திருக்கும் பணத்துக்கு கிடைக்கும் வட்டி மூலமாகத்தான் ஜீவனம் நடைபெறுகிறதுஎன்றார் விசுவநாத சர்மா.

 தயவு செய்து நீங்கள் மீண்டும் எழுத்துப் பணியைத் தொடங்குங்கள். உங்கள் எழுத்துக்கு எப்போதும் மகிமை இருக்கிறதுஎண்றார் சோமநாதய்யர்.

 சற்று நேரத்தில் சாப்பாடு தயாராகி விட்டதாகவும், சாப்பிட வருமாறும் முத்தம்மாவும், விசாலாட்சியும் வந்து அழைத்தார்கள். சாப்பிட்டு விட்டு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கொஞ்ச நேரம் உரையாடினார்கள். அப்போது சோமநாதய்யர் ஒரு யோசனை சொன்னார்.

 நீங்கள் இருவரும் கொஞ்ச நாள் எங்கேயாவது சுற்றுலா சென்று வரலாமே. இடமாற்றம் காரணமாக விசுவநாத சர்மாவின் மனமும் மலர்ச்சியடையும். உற்சாகம் அடைய அதுவே ஒரு நல்ல காரணமாக இருக்கும்என்றார்.

 அதைத்தான் நானும் அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ராஜமஹேந்திரபுரத்துக்குச் சென்று பந்துலு அவர்களைப் பார்த்து வரலாம் என்று சொல்கிறேன். இவர்தான் இன்னும் முடிவெடுக்கவில்லைஎன்றாள் விசாலாட்சி.

 விசாலாட்சி சொன்னதிலிருந்து எனக்கும் அந்த யோசனை இருக்கிறது. பந்துலு இப்போது ஒரு பத்திரிக்கை வேறு ஆரம்பித்து இருப்பதாகக் கேள்விப் பட்டேன். நான் எழுதுவதற்கும் வாய்ப்புக் கிடைக்கலாம்என்றார் விசுவநாத சர்மா.

18-10-2014 அன்று வெளியான சந்திரிகையின் கதை தொடர்ச்சி…

ஆஹா, அருமையான விஷயம். அப்படியானால் உடனே அங்கு கிளம்ப ஏற்பாடு செய்யுங்கள்என்றார் சோமநாதய்யர்.

 எல்லாம் சரிதான். ஆனால் சந்திரிகை இங்கு படித்துக் கொண்டிருக்கிறாள். அதுதான் யோசிக்க வேண்டியிருக்கிறதுஎன்றார் விசுவநாத சர்மா.

 அது பற்றி நீங்கள் கவலைப் பட வேண்டாம். இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. அதன் பிறகு விடுமுறை வந்து விடும். அப்போது அவளை அழைத்துக் கொண்டால் போகிறது. அதுவரை அவள் என் வீட்டில் இருக்கட்டும்என்றாள் முத்தம்மா.

 ஒருவழியாக அந்த யோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி செய்து விட்டாள் முத்தம்மா. ஆனால் விசாலாட்சியை சமாதானப் படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது.

 சந்திரிகைப் போன்ற அறிவுள்ள ஒரு குழந்தையை இதுவரை நான் என்னுடைய அனுபவத்தில் பார்த்ததுமில்லை. கனவிலும் கற்பனையிலும் கூட கண்டதில்லை. நினைக்க நினைக்க சந்தோஷம் கொடுக்கும் சந்திரிகையின் பேச்சையும், சிரிப்பையும் பிரிய வேன்டுமே என்று நினைத்தால் மனம் மிகவும் வேதனைப் படுகிறதுஎன்றாள் விசாலாட்சி.

 கவலைப் படாதே விசாலாட்சி, ஒரு மாதம்தானே; கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி விடும். சந்திரிகையை உடனிருந்து கவனித்துக் கொள்ள எனக்கு மிகவும் ஆவல் உண்டாகிறது. ஒரு மாதத்திற்காக வேணும் நான் அவளைக் கவனித்துக் கொள்ளும் பாக்கியத்தை எனக்குக் கொடுக்கக் கூடாதாஎன்று கெஞ்சுவது போல் முத்தம்மா கேட்டாள்.

 அதற்கு அடுத்த மூன்றாவது நாள் விசாலாட்சியும், விசுவநாதய்யரும் ராஜமஹேந்திரபுத்துக்கு கிளம்புவது என்று ஏற்பாடாகியது. அன்று முழுதும் அங்கு இருந்து விட்டு பொழுது சாயும் நேரத்தில் முத்தம்மாளும்,சோமநாதய்யரும் விடை பெற்று மயிலாப்பூருக்கு கிளம்பினார்கள்.

11. மீனாட்சியின் தத்து எண்ணம்

மீனாட்சியை விவாகம் முடித்துக் கொண்டு தஞ்சாவூர் சென்ற டிப்டி கலெக்டர் கோபாலய்யங்காரை நாம் கிட்டத்தட்ட மறந்து விட்டோம் என்றுதான் தோன்றுகிறது. அதனால் அவர்களைத் தேடி தஞ்சாவூர் சென்று பார்ப்போம்

 தன் காதல் மனைவி மீனாட்சியின் மீது மிகுந்த அன்பு காட்டி வந்தார் கோபாலய்யங்கார். மீனாட்சியின் அமைதியான குணமும், பணிவும், பொறுமையும் அவருக்கு அவள் மீது ஒரு மயக்கத்தையே உருவாக்கி இருந்தது. அவளுக்கு சமையல் கலையில் அவ்வளவாக அனுபவம் இல்லாதிருந்த போதும், அவள் செய்த சமையல் எதுவானாலும் அது அவருக்குப் பிடித்தே இருந்தது. அவரும் மாமிச போஜனம் செய்யப் பழகி விட்டிருந்ததால் மீனாட்சி தனக்குத் தெரிந்த வரையில் செய்யும் அசைவ உணவு வகைகளையும் ருசித்து உண்ணுவார்.

தொடரும்…

மீதி அடுத்த இடுகையில்…

கதையைப் பற்றி தங்களது மேலான பின்னூட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: