நகைச்சுவைக் கவிதை!

19 செப்

கணிணி பழுது நீக்கும் தொழில் செய்து கொண்டிருக்கும் நமது நண்பர் ஒருவர், தன்னுடைய வீட்டில் எலித்தொல்லை அதிகமாகி விட்டதாக ஒருநாள் புலம்பினார். எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது என்ற சாத்வீகமான எண்ணம் கொண்ட மனிதர் அவர்.

அதனால் முதலில் ஒரு எலி மட்டும் வீட்டுக்குள் வந்த போது பரவாயில்லை என்று விட்டு விட்டாராம். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ஏகப்பட்ட குட்டிகளை ஈன்ற அந்த எலி,  இன்று வீட்டையே அதகளப் படுத்துகிறதாம். உணவுப் பொருட்களை சேதம் செய்வதோடு, கம்ப்யூட்டர் கருவிகளின் வயர்களையும் பதம் பார்த்து விடுகிறதாம்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று புலம்பினார். ஒரு பக்கம் அவர் சொன்னது சிரிப்பை வரவழைத்தாலும், அவர் படும் பாட்டை நினைத்தால் பரிதாபமாகவும் இருந்தது.

அந்த விஷயத்தையே ஒரு கவிதையாக வடித்து அவரிடம் கொடுத்தேன். அதை அவர் பிரிண்ட் எடுத்து வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடங்களில் வைத்தாராம். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சில நாட்களிலேயே எலித் தொல்லை குறைந்து விட்டதாம். அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை.

இதோ அந்தக் கவிதை!

எலியாரே! இடத்தைக்காலி செய்வீர்!

எலியாரே எலியாரே எமதுவீட்டில் குடிபுகுந்து

       எழுபத்தாறு நாட்களாச்சு வாடகையே வரவில்லை

வலியாராய் இருந்தால் விடமாட்டோம் உம்போன்ற

       எளியாரை நாங்கள் என்னதான் செய்வது?

 

ஒற்றைஆளாய் உள்ளேவந்தீர் சேட்டையேதுஞ் செய்யவில்லை

       ஒண்டிக்கொள்ள இடமளித்தோம்; அதுதவறாய் தான்போச்சே

கற்றைகற்றையாய் பெருங்கூட்ட மாகிவிட்டீர் – அதனால்தான்

       கண்டிக்கின்ற நேரமாச்சு கட்டாயம் புரிந்துகொள்வீர்

 

கம்ப்யூட்டர் எலிகளுடன் பழகுகின்ற காரணத்தால்

       உம்மைஎளி தாய்நினச்சது தப்பான கணக்காச்சே

இன்குபேட்டர் இல்லாமல் இத்தனை குட்டிகளை

       ஈன்றெடுத்த உம்மீது ஏனோகருணை வரவில்லை

 

கடைசியாக எம்முடைய எச்சரிக்கை – உமக்குநாம்

       இடமளித்த மடத்தனத்தை புரிந்துகொண்டோம் – மெது

வடைசில வற்றைபகடியாக தருகின்றோம் உடனே

       இடம்காலி செய்திடுவீர், இதுஎமது உத்தரவு!

 

பின் குறிப்பு:

இதை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, நண்பர் செய்தது போல் யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம். அப்படி முயற்சி செய்து பார்த்து எதுவும் நடக்கவில்லை என்றால், அதற்கு நான் பொறுப்பல்ல.

Advertisements

2 பதில்கள் to “நகைச்சுவைக் கவிதை!”

  1. yarlpavanan செப்ரெம்பர் 21, 2014 இல் 1:04 முப #

    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது

    • rasippu செப்ரெம்பர் 22, 2014 இல் 4:31 முப #

      தங்களது கருத்துக்கு மிக்க நன்றி, திரு யாழ்பாவாணன் அவர்களே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: