பொறுமை, விடா முயற்சி வெற்றிக்கு அடிப்படை!

30 ஆக
தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி – 2014 க்கான கவிதை – விரும்பிய தலைப்பிலான கவிதை

நினைத்தது எதுவும் நடக்கவில்லை என்றே

       நிலைகுலைந்து போகாதே நண்பா – இன்று

விதைத்தது ஒருநாள் முளைத்து வரும்-அது

       நிச்சயம் என்பதை உணர்ந்திடு நண்பா!

 

சோர்ந்து நீயும் சோம்பியே இருந்தால்

       சோதனை விலகாது நண்பா – உன்னைச்

சார்ந்த ஊக்கமதை கைவிட வேண்டாம்

       சாதனை ஒருநாள் தேடிவரும் நண்பா!

 

அம்பரா தூளியில் அமர்ந்திட்ட அம்பாக

       சும்மாநீ இருந்திடாதே நண்பா – குறிவைத்த

அம்புபோல் மின்னலாய் புறப்படும் காலம்வரும்

       அம்மட்டும் அமைதியாய் காத்திரு நண்பா!

 

முயலாமை இன்மை புகுத்தும் ஆனால்

       முயற்சி கைகொடுக்கும் நண்பா – என்றும்

முயல்வேகம் தேவைதான் ஆமையின் விடா

       முயற்சியும் தேவையென உணர்ந்திடு நண்பா

 

நம்மால் முடியும் என்றே நீயும்

       நம்பிக்கை கொண்டிடு நண்பா – என்றும்

சும்மா இருந்தால் பலமிக்க யானைக்கும்

      தும்பிக்கை இருந்தும் பயனில்லை நண்பா!!

 

 குறிப்பு: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி – 2014 இல் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Advertisements

2 பதில்கள் to “பொறுமை, விடா முயற்சி வெற்றிக்கு அடிப்படை!”

 1. வணக்கம்
  தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

 2. yarlpavanan செப்ரெம்பர் 14, 2014 இல் 7:04 முப #

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: