காதலன் வருவானா?

30 ஆக
தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டி – 2014 க்கான கவிதை – படமும் பாட்டும்
கவிதைப் போட்டி-2014

கவிதைப் போட்டி-2014

எப்போது வருவான் என்று

எதிர்வீட்டை பார்த்து பார்த்து

கண்கள் பூத்துப் போனதே

கால்கள் மரத்துப் போனதே!

 

எதிர்வீட்டு கோமதி அவள்தம்பி

எழிலரசின் வருகையை அறிவித்த

கணம்முதலாய் மலர்களின் இனிய

மணம் எங்கெங்கும் வீசுகிறது!

 

இதற்கு முன்பு விடுமுறையில்

எழிலரசு வந்தபோது மென்மையான

வெண்மனதைப் பரிமாறி இந்தப்

பெண்மனதை கவர்ந்து சென்றான்!

 

கொத்துமலர் சரமெடுத்து இடுப்பில்

கூடையிலே வைத்துக் கொண்டு

கண்களில் மின்னுகின்ற காதலுடன்

கன்னியிவள் காத்து கிடக்கின்றாள்!

 

கம்பியிலே கைவைத்து – கோமதி

தம்பிக்கு காத்திருக்கும் கோதையே

இனியவன் நிச்சயம் வருவான் – என்றும்

இனிக்கின்ற நினைவுகளை தருவான்!

 

குறிப்பு: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்கள் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி – 2014 இல் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Advertisements

4 பதில்கள் to “காதலன் வருவானா?”

 1. வணக்கம்
  தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
  கவிதையின் வரிகள் சிறப்பாக உள்ளது

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • rasippu செப்ரெம்பர் 1, 2014 இல் 6:57 முப #

   தங்களின் பதிலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, திரு. ரூபன் அவர்களே!

 2. yarlpavanan செப்ரெம்பர் 14, 2014 இல் 7:04 முப #

  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

  • rasippu செப்ரெம்பர் 15, 2014 இல் 7:14 முப #

   தங்களது வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: