ஏற்படுமா ஒரு பொற்காலம்…

17 பிப்

காலை நேரம்

கையில் தேநீர் கோப்பை

டிவியில் செய்திகள்

நள்ளிரவு முதல் அமலாகிறது

பெட்ரோல் விலை குறைப்பு

லிட்டர் வெறும் பத்து ரூபாய்

டிவியில் அடுத்த காட்சி

வாகனங்கள் பெருகும்

சாலைகள் நெரிசலாகும் – அதனால்

விலையைக் குறைக்காதே

எதிர்க்கட்சிகள் போராட்டம்

இலவச மின்சாரம்

இனிமேல் வேண்டாம்

விவசாயிகள் வேண்டுகோள்

இந்திய வல்லரசில்

வேலையில்லா திண்டாட்டம்

என்று ஒரு நிலையில்லை

எல்லோருக்கும் வேலையுண்டு

குறைவில்லா வருமானம்

செலவழிக்க வழியில்லை

பணத்துக்கு வேலையில்லை

பொதுமக்கள் புலம்பல்

இன்றைய தங்க விலை

ஒரு கிராம் பத்து ரூபாய்

ரூபாய்க்கு பத்து டாலர்

இந்திய ரூபாயின்

இன்றைய மதிப்பு

டிவியை அணைத்துவிட்டு

காய்கறி வாங்க

கடைக்குச் சென்றேன்

இருபதே ரூபாய்க்கு

இரண்டுவார தேவைக்கு

எல்லாமும் வாங்கினேன்

என்னங்க என்னங்க

என்னை யார் அழைப்பது

மீதிச் சில்லறை வாங்கியாச்சே

உடம்பு எதும் சரியில்லையா

ஏழுமணி ஆகிப்போச்சே

இன்னுமா தூக்கம்

மனைவியின் விசாரிப்பு

சட்டென கண்விழித்தேன்

அடடா எல்லாம் கனவுதானா

எப்போது கனவு நனவாகும்

ஏற்படுமா அந்த பொற்காலம்

Advertisements

6 பதில்கள் to “ஏற்படுமா ஒரு பொற்காலம்…”

 1. bagawanjee பிப்ரவரி 17, 2014 இல் 3:53 பிப #

  அதிகாலை கனவு என்றைக்கு பலித்தது ,சொல்லுங்கப்பு ?

  • rasippu பிப்ரவரி 18, 2014 இல் 4:09 முப #

   அதிகாலை கனவு பலிக்குமா என்பது சந்தேகம்தான். இருந்தாலும் நமது ஆசையை சொல்லி வைப்போமே. நல்ல உள்ளங்களும் பகவானின் அருளும் இருந்தால் என்றாவது நடக்கலாமே.
   தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, திரு பகவான்ஜி அவர்களே!

 2. கொச்சின் தேவதாஸ் பிப்ரவரி 17, 2014 இல் 7:54 பிப #

  அட போங்க நண்பரே வயற்றெரிச்சலைக் கொடுக்காதீர்கள்.
  1980 வருடங்களில் தாங்கள் சொன்னதெல்லாம் இருந்தது.
  வாழ்க வளமுடன்

  • rasippu பிப்ரவரி 18, 2014 இல் 4:10 முப #

   தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே.

   • Pandian Gee பிப்ரவரி 18, 2014 இல் 5:20 முப #

    தேவதாஸ் சொன்னது உண்மை. பழநி கனவு கண்டவருடம் அதுதானோ…

   • rasippu பிப்ரவரி 18, 2014 இல் 7:20 முப #

    தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி திரு. பாண்டியன்ஜி அவர்களே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: