அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

1 ஜன

100 rasippu copy

வருக வருக 2014 புத்தாண்டே வருக

வருக வருக புத்தம்புது வருடமே வருக

பருக பருக தித்திக்கும் தமிழமுதம் தருக

பெருக பெருக நித்தமும் செல்வம் பெருக

தருக தருக எத்திக்கும் நல்வாழ்வு தருக

 

பதினாலும் இரண்டும் சேர்ந்ததே வருக

பதினாறும் பெற்றிட தேர்ந்ததை தருக

கதிமோட்ச தேர்தலை தாங்கியே வருக

கதிகலங்கி நிற்பவர்க்கு ஆறுதலை தருக

 

புத்தம்புது வருடமே

உன்னிடம் ஒரு வேண்டுகோள்!

 

யாருக்கும் எட்டாத விலைவாசி தெரிகிறதா

பாருக்குள் நல்லநாடு படும்பாடு புரிகிறதா – மக்கள்

வாங்கவும் முடியாமல் வழியும் தெரியாமல்

தாங்கவும் முடியாமல் தவிப்பது புரிகிறதா

 

உன்னுருவம் ஒப்பான* சுதந்திர வருடம் – உன்

உடன்பிறந்த இரட்டையாம் – அதனால் நீயும்

அன்றுபோல் இன்னுமொரு பொருளாதார சுதந்திரம்

இன்றுபெற்று தந்திடுக! இதுவே வேண்டுகோள்!

 *1947 வருடக் காலண்டரும் 2014 வருடக் காலண்டரும் ஒன்று

இந்த புது வருடம் மகிழ்ச்சியுடன் ஆரம்பமாகட்டும்!

இது நமது 100வது பதிவு! நம்முடைய வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி!

சிரிக்க….. சிந்திக்க……

சமீபத்தில் நான் படித்ததில் என்னைக் கவர்ந்தவை (படித்து விட்டு சிரிக்க மட்டும்):

ஒன்று:

ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார்.. தினமும் அவருக்கு ஒரே ரூட் தான்.

ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது.

நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய் தான் இருந்தது.

கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்’ என்று கேட்டார். அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான். 

“ஏன் டிக்கெட் வேண்டாம்’ என்று கேட்க கண்டக்டருக்கு பயம், தள்ளி வந்து விட்டார்.

மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண்டாம்’ என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது..

கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது.. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

அவன் பலசாலியாக இருப்பதால் தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார்..

தற்காப்பு கலை வகுப்புகளுக்குப் போனார், ஆறு மாதங்கள் இப்படியே போனது.

கண்டக்டரின் உடல் வலுவானது.. பயம் கொஞ்சம் போனது. இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டு விட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார்.

இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம் போல், “நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை’ என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான்.

கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வர வழைத்துக் கொண்டு “ஏன் தேவையில்லை?’ என்று விறைப்பாய் கேட்டார். 

அதற்கு அவன் சொன்ன பதில், “நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்’.’

ஒரு பழமொழி:
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

இரண்டு:

ஒரு பிச்சைக்காரன் 100 ரூபாயைக் கண்டெடுத்தான். கொஞ்ச நாள் முன்பு பணக்காரர் ஒருவர் தன்னுடைய கோட்டை அவனுக்குத் தானமாகக் கொடுத்திருந்தார். அந்தக் கோட்டைப் போட்டுக் கொண்டு அவன் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றான்.

அங்கு வேலை செய்யும் சர்வர் வந்தான். (டிப்ஸ் மூலமே ஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதிப்பவன் அவன்). இவனிடம் “என்ன சாப்பிடுகிறீர்கள் சார்” என்றான்.

இருப்பதிலேயே விலை உயர்ந்த உணவு வகைகளைக் கொண்டு வரச்சொல்லி ஒரு கட்டு கட்டினான் பிச்சைக்காரன்.

கடைசியில் பில் வந்தது. 6000 ரூபாய்.

“என்னிடம் 100 ரூபாய்தான் இருக்கிறது” என்று சொன்னான். உடனே அவனைப் பிடித்து கொண்டு போய் மேனேஜரிடம் ஒப்படைத்தார்கள். அவர் அவனை போலீஸில் ஒப்படைத்தார்.

போகும் வழியில், “ஐயா நான் ஒரு பிச்சைக்காரன். என்னிடம் 100 ரூபாய்தான் இருக்கிறது. இந்தாருங்கள். என்னை விட்டு விடுங்கள்” என்று கெஞ்சினான் அவன்.

போலீஸ் பிடியிலிருந்து விடுபட்டு மறுபடி பிச்சை எடுக்கச் சென்று விட்டான்.

இதுதான் Financial Management without MBA என்பதற்கு உதாரணமாம்.

மூன்று:

ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தான்..

டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது..

எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு ‘ஹலோ’ சொன்னான்..

‘என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா…’

‘எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா…’

‘இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க…’

‘ஒண்ணு போதுமா டார்லிங்… இரண்டா எடுத்துக்கோ..’

‘சரிங்க ..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்.. எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா…’

‘ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்…

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்…

‘என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்றா நீ சரின்னு சொல்லிட்ட… நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க… கிரேட் மச்சி…’ என்றார்கள்…

ஆனால் அவனோ அருகே அமர்ந்து இருந்தவர்களிடம்
விசாரித்து கொண்டிருந்தான்,’

எக்ஸ்கிஸ் மி சார்..

இந்த மொபைல் போன் யாரோடது…? –

நன்றி: இந்த துணுக்குகளை வலையேற்றியவர்களுக்கு நன்றி!
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: