கவிஞரின் கோபமும் நமது சமாதானமும்!

21 நவ்

காலையில் ஆபீசுக்குப் போய் மெயில்களை பார்த்துக் கோன்டிருந்த போது, செல்போன் ஒலித்தது. எடுத்தால் நமது கவிஞர் கடிவேலுதான்.

“ஹலோ, கவிஞரே, சௌக்கியமா?” என்றோம் உற்சாகமாக.

“சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல். சௌக்கியம், சௌக்கியம்” என்றார் உணர்ச்சியின்றி.

என்ன ஆயிற்று, இந்த கடிவேலுவுக்கு! ஏதோ வேண்டா வேறுப்பாகப் பேசுகிறாரே!

“என்ன ஆச்சு, உடம்பு எதுவும் சரியில்லையா?” என்றோம் அக்கறையாக.

“உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு. நீர்தான் சரியில்லை” என்றார் சுரத்தில்லாமல்.

“என்ன சொல்கிறீர், என் மீது ஏதோ கோபம் போல் தெரிகிறதே!” என்றோம். அவர் இது போல் கோபப்பட்டு நாம் இதுவரை பார்த்த்தில்லையே.

“நீர் என்னுடைய நல்ல நண்பர் என்று நினைத்திருந்தேன். உண்மையாகவே என்னுடைய கவிதையை ரசிக்கிறீர் என்றுதான் இதுவரை நினைத்துக் கோண்டிருந்தேன்” என்றவரை இடைமறித்து,

“கவிஞரே, இன்னும் பதினைந்து நிமிடத்தில் உம்முடைய இடத்துக்கு வந்து நேரில் பேசுகிறேன்” என்று சொல்லி விட்டு உடனே கிளம்பினேன்.

அங்கு போனபோது கவிஞர் நம்மை வரவேற்று ஒரு சோபாவில் அமர வைத்தார். உடனே, “நீர் என்னுடைய நல்ல நண்பர்தானே, அதிலென்ன உமக்கு சந்தேகம்” என்று பேச்சை ஆரம்பித்தேன்.

“நானும் இதுவரை அப்படித்தான் நினைத்தேன். உண்மையாகவே என்னுடைய கவிதையை ரசிக்கிறீர் என்றுதான் நினைத்துக் கோண்டிருந்தேன்” என்றார் மீண்டும்.

“அது உண்மைதானே, என்னுடைய நண்பரின் கவிதையை ரசிப்பதில் எனக்கு எப்பவுமே மகிழ்ச்சிதான். அதற்கு என்ன வந்தது?”

“ஆனால் உம்மிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு வார்த்தையை நான் எதிர் பார்க்கவில்லை” என்றார். அவர் என்ன சொல்கிறார் என்று இன்னும் நமக்குப் புரியவில்லை. ஆனால் நம் மீது ஏதோ மன வருத்தம் இருக்கிறது என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது.

“கவிஞரே, உமது மன்ம் புண்படும்படியாக அப்படி என்ன வார்த்தையை நான் சொல்லி விட்டேன். கொஞ்சம் விபரமாகச் சொல்லும்”

“நேற்று அந்த மனிதரிடம் பேசியபோது என்னைப் பற்றி என்ன சொன்னீர், ஞாபகப்படுத்திப் பாரும்” என்றார் கொஞ்சம் காட்டமாக.

“எந்த மனிதர், யாரிடம் என்ன பேசிக்கொண்டிருந்தேன்?” என்றேன் இன்னும் புரியாமல்.

“கம்பனைப் பற்றி பேசினீர் அல்லவா?” என்று அவர் சொன்னவுடன்தான் ஞாபகம் வந்தது.

“அட, ஆமாம், கவிஞரே, உம்மைப் போலவே கம்பனும் ஸ்ரீராமனின் ஜாதகத்தை ஒரு பாட்டில் வடித்திருக்கிறான்” என்றேன்.

“ம்..ம்.. நானும் படித்தேன். அதைத்தான் சொல்கிறேன். அப்போது என்னை சாதாரண கவிஞர் கடிவேலு என்று சொன்னீர் அல்லவா?”

நமக்கு அப்போதுதான் கவிஞருடைய கோபத்திற்கு காரணம் புரிந்தது.

“அய்யோ, நான் வேண்டுமென்று சொல்லவில்லை. கம்பனைப் பற்றிப் பேச்சு வந்தபோது, கம்பனை பெருமைப் படுத்தி சொல்வதற்காக அப்படிப் பேசும்படி ஆகிவிட்டது”

“அதற்காக நான் குறைந்து விட்டேனா, எனக்கு கவி பாடத் தகுதியில்லையா” என்று எகிற ஆரம்பித்தார்.

கவிஞர்கள் வாழ்நாளில் அவர்களுடைய பெருமை உலகிற்கு தெரிவதில்லை. அவருடைய காலத்திற்குப் பிறகுதான் ஒரு கவிஞரின் பெருமை மக்களுக்குப் புரிகிறது. பாரதியார் அதற்கு சரியான் உதாரணம் என்று பலவாறாக அவரைத் தேற்றி சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

கவிஞருடைய கோபம் குறைந்தது போல் தோன்றினாலும் இன்னும் இயல்பான நிலைக்கு வரவில்லை என்பது புரிந்தது. இது போன்ற சமயங்களில் அந்த சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைப்பதற்கு நாம் படித்த நகைச்சுவைத் துணுக்குகள் எதையாவது சொல்லி மற்றவரின் மன வருத்தத்தைப் போக்குவதுண்டு. அது போல் ஒரு முயற்சியைத் தொடங்கினோம்.

“கவிஞரே, இப்போது இணையத்தில் வரும் நிறைய விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. இதோ இதைப் படித்துப் பாரும்” என்று ஒரு பேப்பரை நீட்டினேன்.

அதை வாங்கி கவிஞர் படிக்க ஆரம்பித்தார்.

நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்…

ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா?
ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.
பெண்: நீ என்னை விரும்புகிறாயா?
ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !
பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?
ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!
பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?
ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.
பெண்: நீ என்னை அடிப்பாயா?
ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்
பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

படித்து முடித்து விட்டு, நம்மை நிமிர்ந்து பார்த்தார்.

“சரி, இரண்டு பேரும் பேசிக்கொள்கிறார்கள். இதிலென்ன இருக்கிறது?” என்றார்.

“அந்தப் பேப்பரின் மடித்த பகுதியைப் பிரித்து படியும்” என்றோம். அதை பிரித்து படித்தார்.

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்.

என்று இருந்தது. அதன்படி கீழிருந்து மேலே படித்து விட்டு சிரித்து விட்டார் கவிஞர். நமக்கும் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது.

இனிமேல் தாராளமாக அவர் ஜோதிடரான காரணத்தைப் பற்றிக் கேட்கலாம் என்று கொஞ்சம் நேரம் பொறுமையாகக் காத்திருந்தோம்.

நன்றி: இந்த நகைச்சுவைத் துணுக்கை இணையத்தில் வலையேற்றியவருக்கு நமது நன்றி!
Advertisements

4 பதில்கள் to “கவிஞரின் கோபமும் நமது சமாதானமும்!”

 1. Pandian Govindarajan நவம்பர் 21, 2013 இல் 9:46 முப #

  கவிஞர் கண்ணதாசன் தான் வாழ்ந்த காலத்திலேயே உச்சத்தில் போற்றப்பட்டவர்.எந்த கவஞனும் பெறாத பாக்கியம் அவருக்கு கிடைத்த்து.
  இணைய நகைச்சுவை ரசிக்கத்தக்கது.
  பாண்டியன் ஜி

  • rasippu நவம்பர் 21, 2013 இல் 10:37 முப #

   உண்மைதான், கவியரசு கண்ணதாசன் தான் வாழும்போதே புகழின் உச்சியைத் தொட்டவர். அவர் ஒரு விதிவிலக்கு. தங்களது பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! திரு. பாண்டியன் ஜி அவர்களே!

 2. klikravi திசெம்பர் 3, 2013 இல் 1:44 முப #

  பொதுவாக பள்ளிக்கூடத்தில் புதிய பாடம் எடுத்தால் வாத்தியார் ‘தலைகீழ்ப் பாடமா படிக்கணும், சொல்லணும்’ என்பார். ஆனால் நீங்கள் கொடுத்திருப்பதை அப்படிப் படிக்காமல் இருப்பது நல்லது. ஆனால் இது காலம் செய்த கோலமடி! மனிதன் செய்யும் குற்றமடி!

  அன்புடன் க்ளிக் ரவி

  • rasippu திசெம்பர் 3, 2013 இல் 4:43 முப #

   காலத்தின் கோலம் சில சமயம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி விடுகிறது என்பது உண்மைதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: