மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி!

1 நவ்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

 

மிக நீண்……………………..ட நாட்களுக்குப் பிறகு இந்த இடுகை வருகிறது. வேலைப் பளு காரணமாக கொஞ்ச நாள் எழுத முடியவில்லை. அதன் பிறகு ஒரு கார் வாங்கியது, ஓட்டப் பழகியது என்று கொஞ்ச நாள் ஓடி விட்டது. பிறகு திடீரென்று காலில் ஏற்பட்ட வலி…அவஸ்தை… அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எக்ஸ்பர்ட்டான டாக்டர்களிடம் எல்லாம் காண்பித்து, மாத்திரை சாப்பிட்டும் குணமாகவில்லை.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாலும் பிரச்சினை எதுவுமில்லை என்று சொல்லி விட்டார்கள். என்ன செய்தாலும் வலி மட்டும் குறையவில்லை. கொஞ்ச நாட்களில் முழங்காலுக்குக் கீழே மரத்துப் போனது போல் ஆகிவிட்டது. கொஞ்சம் பயமும் வந்து விட்டது.

அதன் பிறகு மாத்திரை, மருந்து எதுவுமில்லாமல் நியூரோதெரபி சிகிச்சை ஓரிடத்தில் கொடுப்பதாக அறிந்து அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. முற்றிலும் சரி ஆவதற்கு கொஞ்ச நாள் ஆகும் என்று சொல்கிறார்கள்.

இது போல் தொடர்ந்து ஏற்பட்ட தடங்கல்களால் தொடர்ந்து எழுத முடியாமல் போய் விட்டது. இடையில் ஒரு சிறிய விபத்து வேறு ஏற்பட்டது. அதற்கு வேறு தனியாக சிகிச்சை. எல்லாமாகச் சேர்ந்து மனிதனைப் படாதபாடு படுத்தி விட்டது.

எதனால் இந்தளவுக்கு சோதனைகள் வருகிறது என்று எனக்கு புரியவில்லை. ‘எதற்கும் ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்து நேரம் எப்படி இருக்கிறதென்று கேட்டுப் பார்’ என்று நண்பன் சொன்னதால் என்னுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் காண்பித்தேன். ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்து அவர் சொன்னது இதுதான்.

இப்போது ஏழரைச் சனி நடக்கிறதாம். அதனால் இப்படிப் பட்ட சோதனைகள் எல்லாம் வரத்தான் செய்யுமாம். ‘ஆனால் கவலைப் பட வேண்டாம். ஏனென்றால் சனி பகவான் உங்களுக்கு யோககாரகர், அதனால் உங்களுக்கு நன்மையையே செய்வார்’ என்றும் சொன்னார்.

“நல்லா நன்மையைச் செஞ்சாரு” (இதை வடிவேலு பாணியில் படிக்கவும்) என்று சொல்லத் தோன்றியது.

ஆங்… சொல்ல மறந்து விட்டேனே! இத்தனை நாட்களாக நம்ம கவிஞர் கடிவேலுவையும் காணவில்லை. மனிதர் எங்குதான் போனார். அவர் ஏதோ உடல் ஆரோக்கியத்துக்கு என்று சிலவற்றை விற்பனை செய்வதாகச் சொன்னாரே, வந்தால் அவரிடம் ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தால், மனிதர் அகப்படவே இல்லை.

எப்போது போன் செய்தாலும் வருகிறேன், வருகிறேன் என்றே சொல்லுவார், ஆனால் வரமாட்டார். இப்படி இருக்கும் போது ஒருநாள் தீபாவளிக்கு துணிமணிகள் எடுக்கப் போகும் போது தற்செயலாக அங்கே கவிஞர், கண்ணில் பட்டுவிட்டார். போய் ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டேன்.

“என்ன கவிஞரே, ஆளையே பிடிக்க முடியவில்லை. ரொம்பவும் பிஸியாகி விட்டீரா” என்று கேட்டேன்.

“ஆமாம், இப்போது இன்னொரு தொழிலும் செய்கிறேன். அதனால் நேரமே கிடைப்பதில்லை” என்றவர் ஒரு விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார்.

‘ஜோதிட மாமணி கடிவேலு’ என்று இருந்ததைப் பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“என்ன கவிஞரே, இது என்ன புது அவதாரம்?” என்றேன். எனக்கு சிரிப்பு வேறு வந்தது.

“இன்னொரு நாள் சாவகாசமாகச் சொல்கிறேன். இப்போது அவசரமாகப் போக வேண்டியிருக்கிறது” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டி விட்டார்.

இந்த கவிஞர் கடிவேலுவைப் புரிந்து கொள்ள முடியவில்லையே! என்னென்னவோ விஷயங்களை எல்லாம் செய்கிறார். எப்போது ஜோதிட மாமணியானார். ஜோதிடம் எப்போது கற்று கொண்டார்? ஒன்றுமே புரியவில்லை.

அடுத்து அவரைப் பார்த்து பேசும் போதுதான் விபரம் தெரியும். அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும். காத்திருப்போம்!

நானும் அவ்வப்போது தொடர்ந்து எழுதலாமென்று இருக்கிறேன்.

கடவுள் அருள் புரிய வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: