அதிகமாகப் பணம் சம்பாதிப்பது யார்?

13 டிசம்பர்

கடந்த இடுகையில் ரிஸ்க் இல்லாத வியாபாரம் என்று ஒன்று இருந்தால் அதை முயற்சி செய்ய பலரும் முன்வருவார்கள் என்று கவிஞர் கடிவேலு சொன்னபோது, ‘அப்படிப்பட்ட வியாபாரமும் இருக்கிறதா?’ என்று நாம் கேட்டோம். அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் நமக்கு ஆவல் ஏற்பட்டது. அந்த இடுகையை மீண்டும் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

“வியாபாரத்தில் பல வகைகள் இருக்கிறது என்று முன்பு சொன்னேனல்லவா? அதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன்பு ஒரு வியாபாரம் என்பது எப்படி பல கட்டங்களாக நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம். பொதுவாகச் சொன்னால் வியாபாரம் என்பது ஒரு பொருளைத் தயாரித்து அதைப் பயன்படுத்துவோர்களிடம் விற்று லாபம் சம்பாதிப்பதுதான். அதில் தயாரிப்பவருக்கும், உபயோகிப்பாளருக்கும் இடையில் பலர் இருக்கிறார்கள் என்று ஏற்கெனவே பார்த்தோம். இப்போது ஒரு கேள்வி, இதில் யார் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்கள்? இன்னும் விளக்கமாகச் சொன்னால், ரிஸ்க் எதுவும் இல்லாமல் யார் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்கள்?” என்று கேட்டார்.

“இதில் சந்தேகமென்ன, தயாரிப்பவர்தானே அதிகப் பணம் சம்பாதிக்க முடியும்” என்றோம்.

அதைக் கேட்டு கவிஞர் சிரித்தார். பிறகு, “சமீபத்தில் நீர்ப்பறவை என்ற பெயரில் ஒரு சினிமாப் படம் வெளியாகியிருக்கிறதல்லவா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

“அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை” என்றோம்.

“படம் பார்க்காவிட்டாலும், அது சம்பந்தமான முன்னோட்டமாக சில காட்சிகள் தொலைக்காட்சியில் வருவதைப் பார்த்திருப்பீரே? ஒரு காட்சியில் கதாநாயகன் பேசுவதாக ஒரு வசனம் வரும். அதாவது, ‘மீனைப் பிடிக்கிறவனை விட, அதை திங்கிறவனை விட, அதை வியாபாரம் செய்பவன்தான் பணக்காரன்’ என்பார்” என்று கூறினார் கவிஞர்.

“ஆமாம், நானும் பார்த்திருக்கிறேன். அது உண்மைதானே. சினிமாவில் மகத்தான சாதனையைப் படைத்த திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்து வெற்றிகரமாக ஓடிய படகோட்டி படத்திலும் எம்.ஜி.ஆர் மீனவராகவும், அதை வைத்து வியாபாரம் செய்யும் பணக்காரராக நம்பியாரும் நடித்திருப்பார்களே!” என்றோம்.

“அந்தக் கருத்தை நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் வியாபாரத்திற்கு பொருத்திப் பாரும். ஒரு பொருளைத் தயாரிப்பவரை மீன் பிடிப்பவராக உவமைப் படுத்தியும், மீன் சாப்பிடும் மக்களை அந்தப் பொருளை உபயோகிப்பவர்களாகவும் உவமைப் படுத்தினால், இப்போது யார் பணக்காரர் என்று சொல்லும்?” என்று கேட்டார்.

“அந்த இரண்டு பேருக்கும் இடையில் இருப்பவர்கள்தான் பணக்காரர்கள். அதாவது அந்தப் பொருளை உபயோகிப்பாளர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பவர்களும், அப்படி ஒரு பொருள் மார்க்கெட்டில் இருக்கிறது என்று விளம்பரம் செய்பவர்களும்தான் பணக்காரர்கள். நமக்கு இப்போது புரிகிறது” என்றோம்.

“அவர்களுக்கு ஏதாவது ரிஸ்க் இருக்கிறதா?” என்று கேட்டார்.

“அவர்களுக்கு என்ன ரிஸ்க் இருக்கிறது. வியாபாரம் செய்பவர்கள், பொருள் விற்றால் லாபம். சம்பாதிப்பார்கள். இல்லாவிட்டால் தயாரிப்பாளரிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அது போல் விளம்பரம் செய்பவர்களுக்கு வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் கவலை இல்லை. அவர்கள் முதலிலேயே அதற்குரிய பணத்தை வாங்கி விடுகிறார்கள் அல்லவா?” என்றோம்.

“ஆக, இதில் பொருள்களைத் தயாரிப்பவர்களுக்கு லாபமோ, நஷ்டமோ வர வாய்ப்பிருக்கிறது. உபயோகிப்பாளர்கள் நான் ஏற்கெனவே சொன்னது போல் 30% (சதவீத) விலை மதிப்புள்ள பொருட்களை 100% (சதவீத) விலை கொடுத்து வாங்குகிறார். அதனால் அவருக்கும் நஷ்டம்தான். இதில் நீர் எந்த இடத்தில் இருக்க விரும்புகிறீர்கள்? தயாரிப்பாளராகவா, வியாபாரமோ, விளம்பரமோ செய்பவராகவோ அல்லது உபயோகிப்பாளராகவா?” என்று கேட்டார்.

“இப்போது புரிகிறது. வியாபாரமோ, விளம்பரமோ செய்பவர்கள்தான் பணம் சம்பாதிக்கிறார்கள்” என்றோம்.

“அவர்களைப் போல நீரும் வியாபாரமோ, விளம்பரமோ செய்து பணம் சம்பாதிக்கலாமே? அதில் ரிஸ்க் எதுவுமில்லையே” என்றார்.

“மீண்டும் ஆரம்பத்திலிருந்தா? வியாபாரம் செய்வதற்கு பணம் வேண்டாமா?” என்றோம். என்ன, இப்படி ஒரேயடியாக குழப்புகிறாரே!

“இங்குதான் முக்கியமான விஷயமே இருக்கிறது. வியாபாரம் செய்வதற்கு பணம் தேவையில்லை. ஆனால் விளம்பரம் செய்வதே உமது வியாபாரம் என்றால் அதைச் செய்யலாமல்லவா?” என்றார்.

“விளம்பரம் செய்வதா? நாம் என்ன சினிமா நடிகர்களா அல்லது விளையாட்டு வீர்ர்களா? அப்படி இருந்தால்தானே கோடிகோடியாகக் கொட்டி விளம்பரத்தில் நடிக்கக் கூப்பிடுவார்கள்” என்றோம்.

“நாம் இப்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொருள்களுக்காக நம்மை விளம்பரத்துக்கு யாரும் கூப்பிட மாட்டார்கள். ஆனால் நீங்கள் வாங்கும் பழக்கத்தை மாற்றி, அப்படி வாங்கும் பொருள்களுக்கு விளம்பரம் செய்யலாமே?” என்றார்.

“நாம் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் நிறைய செலவு செய்ய வேண்டும். அதற்கும் நிறையப் பணம் வேண்டுமே. பணம் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாதே” என்றோம்.

“நீர் டிவியிலோ, பேப்பரிலோ விளம்பரம் செய்ய வேண்டாம். ஆனால் உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் அதைப் பற்றி சொன்னால், அதுவும் விளம்பரம்தானே. இப்போது நான்கூட நீர்ப்பறவை பற்றிச் சொன்னேனே. அதுகூட ஒருவகையில் விளம்பரம்தானே” என்றார்.

Advertisements

2 பதில்கள் to “அதிகமாகப் பணம் சம்பாதிப்பது யார்?”

  1. ravi திசெம்பர் 13, 2012 இல் 2:33 பிப #

    Really interesting. Please keep on, Thanks

    • rasippu திசெம்பர் 14, 2012 இல் 4:20 முப #

      திரு. ரவி அவர்களே, தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: