வியாபாரத்தின் முக்கியத்துவம்!

11 டிசம்பர்

சென்ற இடுகையில் நமது முன்னோர்கள் வியாபாரத்திற்காக பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள் என்றும் அதுபோல் பல நாடுகளிலிருந்தும் நம் நாட்டிற்கு பலரும் வியாபாரத்திற்காக வந்திருக்கிறார்கள் என்றும் கவிஞர் கடிவேலு சொன்னார். ஏன் வெள்ளைக்காரர்கள்கூட வியாபாரத்திற்காகத்தான் நம் நாட்டிற்கு வந்தார்கள் என்றும் சொன்னார். அதை மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள இங்கே சொடுக்கவும் வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்ய வேண்டும்?

“வெள்ளைக்காரன் வியாபாரத்திற்காக வந்து நாட்டையே கைப்பற்றி விட்டான் என்று சொன்னீரே, அதனால் வெளிநாட்டுக்காரன் வியாபாரத்திற்காக நம் நாட்டுக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று சொல்ல வருகிறீரா? இப்போது அன்னிய முதலீடு பற்றி வரவேற்பும் எதிர்ப்புமாக நம் நாட்டில் பலமான விவாதம் நடக்கிறதே. பாராளுமன்றத்தில் கூட அதற்கு வாக்கெடுப்பு நடந்து மத்திய அரசுக்கு வெற்றி கிடைத்ததே அது பற்றி பேசுகிறீரா?” என்றோம்.

“வியாபாரம் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்த ஒன்று என்பதை விளக்குவதற்காகவே நாம் அந்த விஷயத்தை சொன்னோம். அன்னிய முதலீடு என்பது வரவேற்க வேண்டிய விஷயமாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. முன்பு நடந்தது போல் வெளிநாட்டுக்காரன் நம்மை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வாய்ப்பெல்லாம் இப்போது இல்லை. நாம் பெற்றிருக்கும் கல்வியறிவும், விழிப்புணர்வும், விஞ்ஞான வளர்ச்சியும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும். ஆனால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம்மை பெரிய அளவில் முன்னேற்றிக் கொள்ளவும் இது வழி செய்யலாம்” என்றார். தொடர்ந்து அவரே,

“வியாபாரத்தைப் பற்றி பேசும்போது, நான் கேள்விப்பட்ட நகைச்சுவை ஒன்று நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது அனுபவம் மிகுந்த ஒருவரும், அனுபவம் இல்லாத பணக்காரர் ஒருவரும் சேர்ந்து வியாபாரம் ஆரம்பித்தார்களாம். சில வருடங்கள் கழித்து, அனுபவம் மிகுந்தவருக்கு பணம் வந்து விட்டதாம். அனுபவம் இல்லாமல் பணம் வைத்திருந்தவருக்கு, பணத்திற்குப் பதிலாக அனுபவம் கிடைத்ததாம். அதுபோல நாம் ஏற்கெனவே நமது செல்வத்தை பறி கொடுத்தவர்கள். இன்று நம்மிடம் அனுபவமும், அறிவும் இருக்கிறது. அதனால் பணம் வைத்திருக்கும் வெளிநாட்டுக்காரன் முதலீடு செய்தால், அதை வைத்து நமது வளத்தைப் பெருக்கிக் கொள்ள வழிகாண வேண்டும்” என்றார்.

அவர் சொன்ன விஷயங்கள் நமது சிந்தனையைத் தூண்டியது.

முந்தைய காலத்தில் நமது நாடு எல்லா வளத்திலும், செல்வத்திலும் சிறந்து விளங்கியது. பொன்னும், வைரமும் நிறைந்த நாடாக விளங்கியது. வற்றாத ஜீவநதிகள் பாய்ந்து விவசாயம் செழித்திருந்தது. நமது மக்கள் நாகரீகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினார்கள். அதனால் இதைக் கேள்விப்பட்டு மற்ற எல்லா நாடுகளிலிருந்தும் மக்கள் நமது நாட்டுக்கு வரத் துடித்தார்கள். அமெரிக்கோ வெஸ்புகியும், கொலம்பஸும் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவா கப்பலில் புறப்பட்டனர்? கொலம்பஸ் கடலில் வழிதவறி பல வகைகளிலும் பிரச்சினைகளால் அலைக்கழிக்கப்பட்டு கடைசியாக தரைப்பகுதியை அடைந்து, கரையிறங்கி அமெரிக்காவைக் கண்டுபிடித்தது தற்செயலாக நடந்ததுதானே! மற்றபடி அவர்கள் கப்பலில் புறப்பட்டது நமது நாட்டிற்கு வழி கண்டுபிடிப்பதற்காக அல்லவா?

அப்படிப்பட்ட செல்வச் செழிப்பு மிகுந்த நம் நாடு பல காலமாக பல வகைகளிலும் மற்றவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனாலும் இப்போது நம் நாடு மீண்டும் தலை நிமிர்கிறது. இப்போது நமது நாட்டில் மனிதவளம் மிகுந்துள்ளது. நாம் கல்வியறிவு பெற்றவர்களாக, பலவித ஆற்றல்கள் உள்ளவர்களாக மாறி இருக்கிறோம். அதனால்தான், நமது நாட்டிலிருந்து பலர் வெளிநாட்டினரால் ஈர்க்கப்பட்டு பல நிறுவனங்களிலும் முக்கியமான பதவிகளில் பணியில் அமர்த்தப்பட்டு அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். இது நாடறிந்த உண்மை.

இன்னும் ஏராளமானவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் ஆற்றலும் உழைப்பும் நம் நாட்டுக்குப் பயன்படுவதாக இருந்தால் நம் நாடு இன்னும் விரைவில் பெரிய வல்லரசாக மாறுவதற்கான வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. அதற்கு இப்போதைய மாற்றங்கள் உதவிகரமாக இருக்க வாய்ய்புள்ளது. அந்த மாற்றங்கள் நமது நாட்டில் வியாபார வளர்ச்சிக்கு உதவியாக இருந்தால் நமது தனிமனித வருமானம் உயர வாய்ப்புள்ளது. அந்த வகையில் நாட்டின் முன்னேற்றமும் விரைவில் சாத்தியமாகும்.

தொடர்ந்து கவிஞர் சொன்ன விஷயத்தின் அடிப்படையில் நமது கேள்வியைக் கேட்டோம்.

“கவிஞரே, “நமக்கு வியாபாரத்தின் முக்கியத்துவம் புரிகிறது. ஆனால் எல்லோராலும் வியாபாரத்தை ஆரம்பிக்க முடிவதில்லையே. அப்படியே சிலர் ஆரம்பித்தாலும், அப்படி ஆரம்பித்த எல்லோராலும் அதில் வெற்றி பெற முடிவதில்லையே. அதனால்தானே வியாபரம் செய்ய பலரும் தயங்குகிறார்கள்?” என்றோம்.

“உண்மைதான்! வியாபாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பது புரிந்தாலும் நிறையப் பேர் அதை செய்ய விரும்பாததற்குக் காரணம், அதில் உள்ள ரிஸ்க்தான். அதனால் ரிஸ்க் இல்லாத வகையில் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பதையே எல்லோரும் விரும்புகிறார்கள். அதிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். ஆனால் ரிஸ்க் இல்லாத வியாபாரம் என்று ஒன்று இருந்தால், அதுவும் தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் இருந்தால் அது போன்ற வியாபாரத்தை முயற்சி செய்ய பலரும் முன்வருவார்கள் அல்லவா?” என்று கேட்டார்.

“அப்படிப்பட்ட வியாபாரமும் இருக்கிறதா? ஆச்சரியமாக இருக்கிறதே! அதுபோல் ரிஸ்க் இல்லாத வியாபாரமாக இருந்து, அதில் நல்ல வருமானமும் கிடைக்கும் என்றால் நிச்சயமாக பலரும் முயற்சி செய்வார்கள்” என்றோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: