வாழ்க்கைத்தரம் உயர என்ன செய்ய வேண்டும்?

6 டிசம்பர்

வழக்கமாக திண்ணையில் வெளிவரும் நம்முடைய கதையை நமக்கு முன்பே படித்து நம்மை வாழ்த்தும் கவிஞர் கடிவேலு இந்த முறை ஏனோ நமக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை. ஒருவேளை இந்த விருப்பும் வெறுப்பும் சிறுகதை, ஒரு காதல் கதை என்பதால் இதற்கு என்ன கருத்து சொல்வது என்று நினைத்து ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டாரோ? என்று நமக்குத் தோன்றியது.

ஆனால் மாலை நேரத்தில் கவிஞரிடமிருந்து போன் வந்தது. முதல் நாள் இரவிலிருந்து அவர் வீடு இருக்கும் பகுதியில் கரண்ட் இல்லாததால் கம்ப்யூட்டரை மாலை வரை பயன்படுத்த முடியவில்லையாம். மாலையில்தான் நமது கதையைப் படித்தாராம். அந்தக்கதையை அலசி ஆராய்ந்து அவர் தன்னுடைய கருத்தைச் சொன்ன போது நமக்கு மிகவும் வியப்பாக இருந்த்து. எப்படி இவருக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று ஆச்சரியம் மேலிட்டது.

“விருப்பும் வெறுப்பும் கதையின் கதாநாயகி வனிதாவுக்கு சில நாட்கள் பழகிய பின்னும் கூட யார் நல்லவன் யார் கெட்டவன் என்று தீர்மானிக்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது புதிதாக ஒரு வியாபார வாய்ப்பை ஒருவர் காண்பிக்கும் போது முதல் முறையாக அதைப் பார்ப்பவருக்கு எப்படி அவர் மீது நம்பிக்கை வரும். அந்த வியாபார வாய்ப்பு நல்லதா கெட்டதா என்று எப்படி தீர்மானிக்க முடியும்?” என்றார்.

பின்பு அவரே, “அவள் சிவசங்கரனைப் பார்க்கச் சென்றபோது, அவர் கூறிய கருத்துக்கள் சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். விருப்பும் வெறுப்பும் எப்போதும் மாறலாம். அதனால் ஒருவருக்கு இந்த வியாபாரத்தின் மீது ஏற்கெனவே ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாகவோ, மற்றவர்கள் எதிர்மறையான கருத்துக்களைக் கூறும் போதோ வெறுப்பு வருவது இயற்கை. ஆனால் அவருக்கே இது, தனது இரண்டாவது வருமானத்துக்கான நிச்சயமான வழி என்பது புரியும் போது அதே வியாபாரத்தின் மீது விருப்பம் வருவதும் இயற்கைதான்” என்றார். அத்தோடு, “கடந்த கால அனுபவங்களின் மூலமாக நமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நம் மனதில் நிறைந்து இருந்தால் அந்த மாதிரி விஷயங்களையே மேலும் மேலும் நம்மை நோக்கி ஈர்க்கிறோம். இது Law of attraction என்னும் இயற்கை விதி. அதற்குப் பதிலாக வேறு நல்ல விஷயங்களை நிரப்பி விட்டால் தேவையில்லாத விஷயங்கள் நம்மை விட்டு அகன்று விடும் என்பது இந்தக் கதையின் மூலம் தெரிய வரும் செய்தியாகும்” என்றார். தொடர்ந்து அவரே,

“அதுபோல் ஒருவருக்கு ஒன்றில் மீது தீவிரமான காதல் ஏற்பட்டு அதில் வெற்றி அடைவதற்காக அவர் விடாப்பிடியாக முயற்சி செய்யும்போது, அதற்காக தன்னை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கும்போது அவருக்கு அதை அடைவது எளிதாகும் வகையில், இயற்கையாகவே எல்லா சூழ்நிலையும் மாறும் என்பதும் இந்தக் கதையின் மூலம் புலனாகிறது” என்றார் கவிஞர். இவ்வளவு நுணுக்கமாக அந்தக் கதையை அவர் அலசி ஆராய்ந்திருப்பது நமக்கு ஆச்சரியமாக இருந்தது.

சரி! தொடர்ந்து முந்தைய இடுகையில் சொன்ன விஷயங்களைப் பற்றி அவருடன் நம்முடைய உரையாடல் சம்பந்தமான விஷயத்தை கவனிக்கலாம். சென்ற இடுகையில் வந்த கவிஞரின் கவிதையைப் படித்து விட்டு ‘வாழ்க்கைத்தரம் மாற வேண்டுமானால் ஏதாவது வியாபாரம் செய்தால்தான் சாத்தியமாகும் என்று நமக்குப் புரிந்தது’ என்று சொல்லியிருந்தோம் அல்லவா? ஆனாலும் அதில் நமக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது நடைமுறையில் எல்லோராலும் வியாபாரத்தில் இறங்குவது சாத்தியமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அதை அவரிடமே கேட்டோம்.

“கவிஞரே, வியாபாரம் என்பது அவ்வளவு எளிதான விஷயமா? முதலில் அதற்கு முதலீடு தேவைப்படும். அதில் அனுபவம் இருக்க வேண்டும். ஒரு இடம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்து, ஆட்களை வேலைக்கு வைத்து, அதை மேற்பார்வை செய்ய நாள் முழுதும் அங்கேயே இருந்து வியாபாரத்தைக் கவனிக்க வேண்டும். இதெல்லாம் எல்லோருக்கும் முடிகிற விஷயமா? நடக்கிற காரியமா இது?

அத்தோடு அப்படி ஆரம்பித்த வியாபாரத்தில் நஷ்டம் வராது என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? போட்டியை சமாளிக்க வேண்டும். லைசன்ஸ் பெற வேண்டும். எத்தனை விஷயங்கள் இருக்கிறது? வியாபாரம் செய்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என்ற உமது கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் வியாபாரத்தில் இத்தனை பிரச்சினைகள் இருக்கிறதே! இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க ஆசைப்பட்ட கதையாக அல்லவா ஆகிவிடும்” என்றோம்.

நாம் பேசி முடிக்கும் வரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். பிறகு நம்மிடம் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். “நீர் சொல்வது போல வியாபாரம் என்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் வியாபாரத்தில் பல வகைகள் இருக்கின்றன” என்றார்.

“வியாபாரத்தில் பல வகைகளா?” என்றோம் ஆச்சரியமாக. அதற்குப் பதிலாக கவிஞர் இன்னொரு கேள்வியைக் கேட்டார்.

“வியாபாரம் என்றால் என்ன?”

“ஒரு பொருளை ஒரு இடத்தில் வாங்கி இன்னொரு இடத்தில் விற்பது. அதில் ஒரு லாபம் சம்பாதிப்பது. இதுதான் வியாபாரம்” என்றோம்.

“பொதுவாக இப்படித்தான் பெரும்பாலானோர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் வியாபாரம் என்பது யாருக்கு எந்தப் பொருள் தேவை இருக்கிறதோ, அந்தப் பொருளை அவர்களுக்கு கொடுத்து அதற்குரிய பணத்தையோ அல்லது அதே மதிப்பிலான இன்னொரு பொருளையோ பெறுவதுதான் வியாபாரம். பழங்காலத்தில் நமது முன்னோர்களும் திரைகடலோடி திரவியம் தேடினார்கள்” என்றார்.

“ஆமாம், நீர் சொல்வது உண்மைதான். நம் முன்னோர்கள் வியாபாரத்திற்காக பல நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்கள். அதுபோல் யவனர்களும், அரேபியர்களும், ஃபிரெஞ்சுக்காரர்களும், போர்த்துக்கீசியர்களும், ஏன் சீனர்களும்கூட நம் நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்” என்றோம்.

“நமது நாட்டிற்கு வெள்ளைக்காரனும் வியாபாரத்திற்காகத் தானே வந்தான். நம்மிடம் கிடைக்காத பொருட்களை நம்மிடம் கொடுத்து அதற்கு பதிலாக விலை மதிப்புள்ள பொருட்களைப் பெற்றான். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாட்டையே கைப்பற்றி விட்டான்” என்றார்.

அவர் சொல்வதெல்லாம் உண்மையென்றாலும் அந்த விஷயங்களை தன்னுடைய கருத்துக்கு ஆதரவாக அவர் சொன்னபோது நமக்கு ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை. அதனால் அவர் சொல்வதை அமைதியாக கேட்டுகொண்டிருந்தோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: