திண்ணையில் நமது சிறுகதை

17 செப்

தமிழின் முதல் இணைய வார இதழான திண்ணையில் இந்த வாரம் நமது சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்பிக்கைகள் பலவிதம்! என்ற அந்த சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நமது வலைப்பூவின் பெயரான ரசிப்பு என்ற பெயரிலேயே இந்த கதையை எழுதியிருக்கிறோம். இந்த கதையை முதன்முதலாக படித்து விட்டு நமக்கு சொன்ன நண்பர் பாண்டியன்ஜி அவர்களுக்கு நன்றி. மேலும் ரசிப்பு என்ற புனைபெயரில் நாம் எழுதி இருப்பது பற்றிக் கேட்டார். “ரசிப்பு என்பது வினைச்சொல் அல்லவா? அதை பெயர்ச் சொல்லாக பயன்படுத்தி இருக்கிறீர்களே?” என்றார்.

நமது பெயர் கொண்டவர்கள் நிறைய பேர் ஏற்கெனவே உள்ளதால், தனித்தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்ததாக சொன்னோம். ரசிப்பு என்பது இயற்கையின் கசியங்கள் சிலவற்றைப் புரிந்துகொண்டவன்  (அதாவது 0.00000000000000000000001 சதவீதம்) என்பதன் சுருக்கமாகத்தான் நினைக்கிறோம். அதனால் அதை பெயர்ச்சொல்லாகவும் நினைக்கலாம். சரிதானே! (அப்பாடி!….. எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது!).

இந்த சிறுகதை விஷயம் கவிஞர் கடிவேலுவுக்குத் தெரிந்து அவரும் வாழ்த்துச் சொன்னார். “என்ன சிறுகதை எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டீர்?” என்று கேட்டார்.

“அதற்கு நீர்தான் காரணம்” என்றேன்.

“நானா! எப்படி?” என்று கேட்டார் கவிஞர்.

ஆமாம்! நம்பிக்கைதான் வாழ்க்கை! இடுகைகளில் நீர் சொன்ன விஷயங்களிலிருந்து நமக்குத் தோன்றிய ஒரு கரு தான் இது. ஒவ்வொருக்கும் நம்பிக்கை மாறுபடும் அல்லவா?” என்றோம்.

“அப்படியானால் நான் சொன்ன விஷயத்தில் உமக்கு நம்பிக்கையில்லையா?” என்று கேட்டார்.

“அப்படி அர்த்தமல்ல. ஒருவருக்கு கிடைத்த முந்தைய அனுபவங்களின் மூலம் வருவது ஒருவகையான நம்பிக்கை. தெரிந்தவர்களுடைய அனுபவங்களின் மூலமாக நமக்கு கிடைப்பதும் ஒரு வகையான நம்பிக்கைதான். நம்பிக்கையான ஒருவர் சொல்லும் வார்த்தைகளின் மூலம் கிடைப்பது இன்னொரு வகையான நம்பிக்கை. ஆனால் எதையும் தானே முயற்சி செய்து, தன்னுடைய கற்றுக்கொள்ளும் மனப்பான்மையின் மூலம் ஒரு விஷயத்தை அலசி ஆராய்ந்து முடிவாக அதன் மூலம் ஒருவருக்குக் கிடைப்பதே அசைக்க முடியாத தன்னம்பிக்கை” என்றோம்.

“உண்மைதான்” என்று ஒத்துக்கொண்டார் கவிஞர்.

அதைத் தொடர்ந்து நேரம்தான் பணம் என்பது பற்றி பேச்சு திரும்பியது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: