ஆமாம்! நம்பிக்கைதான் வாழ்க்கை!

30 ஆக

மறுநாள் எப்போது வரும் காத்திருந்து, அன்று காலை சீக்கிரமே ஆபீஸுக்குப் போய் விட்டேன். காலையில் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாரே, சீக்கிரம் வந்தால் நன்றாக இருக்குமே என்று காத்திருந்ததால் கொஞ்சம் டென்சனாகவே இருந்தது. நாம் எதிர்பார்த்தபடியே கவிஞர் கடிவேலு 9.00 மணிக்கே வந்து விட்டார். உற்சாகமாக அவரை வரவேற்று, “சீக்கிரமே வந்து விட்டீரே, காலையில் சாப்பிட்டீரா?” என்று அக்கறையாக விசாரித்தோம். “டிபன் சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன்” என்றார்.

“சொல்லுங்கள், நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தீர். அப்போது போன் வந்தது; திடீரென்று கிளம்பிப் போய் விட்டீர். அப்புறம் வரவேயில்லையே, என்ன விஷயம்?” என்று பேச்சை ஆரம்பித்தேன்.

“எனது நண்பர் ஒருவர் கார்த்திக் என்று பெயர். அவர்தான் என்னை அழைத்தார். அவருடைய உறவினர் ஒருவருக்கு புற்றுநோயாம். டாக்டரிடம் ட்ரீட்மென்ட் எல்லாம் எடுத்திருக்கிறார்கள். ஆனால் நோய் ரொம்பவும் முற்றி விட்டதால் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கை விரித்து விட்டார்களாம். அவருடைய வாழ்நாள் இன்னும் அதிகபட்சம் நாற்பது நாள்தான் என்று சொல்லி விட்டார்களாம்” என்றார். கேட்டவுடன் நமக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அய்யய்யோ! அப்புறம்” என்றோம், பதற்றமாக.

“அவருக்கு இரண்டு குழந்தைகள். இனிமேல் எப்படி வாழப்போகிறோம் என்று அழுது புலம்பி, அவரும், அவருடைய மனைவியும் குடும்பத்தோடு வாழ்க்கையை முடித்துக் கொள்ள துணிந்து விட்டனர். அது எப்படியோ நண்பருக்குத் தெரிந்து விட்டது. மிகவும் வேதனைப்பட்டிருக்கிறார். ஏதாவது செய்ய வேண்டுமென்று அந்த நண்பர்தான் என்னை அழைத்தார்” என்றார்.

“நீர் போய் என்ன செய்ய முடியும்? டாக்டர்களே கைவிட்ட பிறகு” என்று கேட்டேன்.

“அவர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுக்கத்தான் நான் சென்றிருந்தேன்” என்றார்.

“நம்பிக்கை கொடுக்கவா? எப்படி நம்பிக்கை கொடுப்பீர்? நீர் என்ன அவர்களுக்கு உறவா?” என்றோம் ஆச்சரியமாக.

“நம்பிக்கை கொடுக்க நல்ல மனது இருந்தால் போதும். உறவினராகவோ, வேறு எவராகவோ இருக்க வேண்டியதில்லை” என்றவர் தொடர்ந்து, “உதாரணமாக, ஒருவருக்கு மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கு போன ஒருவர் ‘மாமா இந்த ஆஸ்பத்திரியில் ஏன் சேர்ந்தீர்கள்? இங்கு வந்தவர்கள் யாரும் உயிரோடு திரும்பியதில்லையே’ என்று நோயாளிடம் கூறினால் அவருக்கு எப்படியிருக்கும்? அப்படிப்பட்ட உறவினர்கள் போய் பார்க்க வேண்டிய அவசியமே இல்லையே. ஆனால் நல்ல வார்த்தை பேசுபவர்கள் யார் வேண்டுமானாலும் சென்று பார்த்து, நோயாளிக்கு ஆறுதலாகப் பேசலாம். ஒரு நம்பிக்கையை கொடுக்கலாம் அல்லவா?” என்று கேட்டார்.

நமக்கு ஒத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. சரிதான் என்று ஆமோதித்தோம். கவிஞர் கடிவேலுவே தொடர்ந்தார்.

“அது மட்டுமில்லாமல், இதே போல் டாக்டர்கள் கைவிட்ட ரவிக்குமார் என்ற ஒரு நண்பரை எனக்குத் தெரியும். அவருக்கும் இதுபோல் வாழ்நாள் இவ்வளவுதான் என்று தேதி குறித்து விட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து, பிறகு நம்பிக்கையுடன் ஒரு சில துணை உணவுகளை எடுத்துக் கொண்டபின் நோயின் வீரியம் குறைந்து, இப்போது நன்றாக இருக்கிறார். அவரைத்தான் வரவழைத்து, என்னுடன் கூட்டிக்கொண்டு போய் பேச வைத்தேன்” என்றார்.

அவர் சொன்ன விஷயங்கள் நமக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டாக்டர்களே கைவிட்ட ஒரு நோயாளி இப்போது நன்றாக இருக்கிறார் என்று சொல்கிறாரே! “இப்படியெல்லாம் கூட நடக்குமா? நம்பமுடியவில்லையே!” என்று கேட்டேன்.

“ஆனால் அதுதான் உண்மை. இது போல் நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.” என்றார். மேலும் விபரங்களைத் தெரிந்து கொள்வதற்காக, “அப்புறம் என்ன நடந்தது?” என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

“நோயிலிருந்து மீண்டு வந்த நண்பர் ரவிக்குமார் அவரிடம் சொன்னார். ‘நம்பிக்கை இழக்காதீர்கள். நீங்கள் நிச்சயமாக குணமடைய முடியும். அதற்கு நானே உதாரணமாக இருக்கிறேன். எனக்கு 30 நாட்கள் தான் வாழ்க்கை என்று டைம் குறித்துக் கொடுத்தார்கள் மருத்துவர்கள். நானும் உங்களை மாதிரியேதான் முடிவெடுத்தேன். அன்று இரவு எல்லோரும் வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாம் என்று இருந்தோம். எல்லா நம்பிக்கையையும் இழந்து விட்டோம்.

அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக (சொல்லவே கூசுகிறது, விஷம் வாங்கத்தான்) நான் மருந்து கடைக்கு போனேன். அப்போது கடவுள் அனுப்பிய தூதுவர் போல என்னுடைய பால்ய சிநேகிதர் ஒருவரை அங்கு சந்தித்தேன். அவர் என்னுடைய நிலைமையை எப்படியோ புரிந்துகொண்டு விட்டார். பின்பு என்னோடு வீட்டுக்கு வந்து, எல்லோரையும் சமாதானப் படுத்தினார். பிறகு, கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு கடைசி முயற்சியாக இதைச் சாப்பிட்டுப் பாருங்கள் என்று சில துணை உணவுகளைக் கொடுத்தார். முதலில் எங்களுக்கு அதில் நம்பிக்கை வரவில்லை. டாக்டர்களே நாள் குறித்து விட்டார்கள். இனி என்ன இருக்கிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் எங்கள் தற்கொலை முடிவு விஷயம் அவருக்குத் தெரிந்து விட்டதால் அவர் சொன்னதைத் தட்ட முடியவில்லை. சரியென்று என்னுடைய தற்கொலை முயற்சியைக் கைவிட்டேன்.

ஒரு பத்து நாள் கழித்து உடம்பில் ஒரு தெம்பு வந்தது. கொஞ்சம் நம்பிக்கையும் வந்தது. தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தேன். டாக்டர் சொன்ன கெடு முடிந்த போது நான் எழுந்து நடக்குமளவுக்குத் தேறிவிட்டேன். அப்படியே அந்த டாக்டரையும் பார்க்கப் போனேன். என்னைப் பார்த்ததும் டாக்டருக்கு ஆச்சரியம். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று. எப்படிய்யா வந்தே? என்று கேட்டார். நடந்தே வந்தேன் என்றேன். நம்ப முடியாமல் என்னைப் பார்த்தார். பிறகு என்னைக் கூட்டிப் போய் டெஸ்ட் எல்லாம் எடுத்தார். என்ன ஆச்சரியம் என்றால் நோயின் கடுமை 75 சதவீதம் குறைந்து விட்டது. அது அவருக்கே அதிசயமாக இருந்தது. இது எப்படி நடந்தது என்று கேட்டார். சொன்னேன். இதே அளவில் போனால் உனது நோய் முற்றிலும் சரியாகி விட வாய்ப்பிருக்கிறது என்றார். இப்போது நான் எப்படி தெம்பாக இருக்கிறேன் என்று நீங்களே பாருங்கள்’ என்று தன்னுடைய கதையை முடித்தார் ரவிக்குமார்” என்றார் கவிஞர். நமக்கோ மிகவும் பிரமிப்பாக இருந்தது.

இன்னும் நிறைய கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. ஆனால் இந்த இடுகை மிகவும் நீளமாக ஆகிவிடும் என்பதால், உங்கள் நேரத்தின் அருமையையும், அத்தோடு உங்கள் பொறுமையையும் கவனத்தில் கொண்டு, மீதியை அடுத்த இடுகையில் தொடர்கிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: