நேரமும் ஐஸ்கிரீமும் சிலேடை கவிதை

27 ஆக

இதோ வருகிறேன் என்று போன கவிஞர் கடிவேலு அன்று முழுவதும் வரவேயில்லை என்று கடந்த இடுகையில் சொல்லியிருந்தேன். ஆனால் அன்று இரவு 9.30 மணிக்கு அவரிடமிருந்து போன் வந்தது. அவருடைய வருகைக்காக ஆவலுடன் காத்திருந்து ஏமாந்ததைச் சொல்லி செல்லமாக கடிந்து கொண்டேன்.

“மன்னிக்க வேண்டும். போய் விட்டு உடனே வர முடியாத நிலமை. அதுபற்றி விபரமாக காலையில் நேரில் சொல்கிறேன்” என்றார்.

“பரவாயில்லை. காலையில் சீக்கிரமே வாரும். உமக்காகவே காத்துக் கொண்டிருப்பேன்” என்றேன்.

“நேரத்தைப் பற்றி ஒரு கவிதை சொல்கிறேன். எழுதிக் கொள்ளும் என்றார். உடனே பேப்பரையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொண்டு “சொல்லும், எழுதிக் கொள்கிறேன்” என்றேன்.

சும்மாவே கிடைக்கும் சுவைத்தாலோ ருசிக்கும்

சும்மாஇ ருந்தாலும் சுவைத்தாலும் கரையும்

உற்சாக அனுபவம் இனிக்கும் – அதனால்

அற்புத மானநேரமும் ஐஸ்கிரீம் ஆகும்

என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். எழுதியதைப் படித்துப் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. நேரத்தை நினைத்துக் கொண்டு படித்தாலும், ஐஸ்கிரீமை நினைத்துக் கொண்டு படித்தாலும் ஒரே அர்த்தத்தை கொடுக்கிறது.

நேரம் எல்லோருக்கும் இலவசமாகவே கிடைக்கிறது. அதை சரியானபடி பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அது போல ஐஸ்கிரீமும் பெரும்பாலும் இலவசமாகவே கிடைக்கும். குடும்பத்துடன் வெளியே செல்லும்போதோ, நண்பர்களுடன் இருக்கும்போதோ (விருந்து போன்ற நிகழ்ச்சிகளிலோ, அப்பாவோ, நண்பனோ) யாராவது வாங்கிக் கொடுப்பார்கள். நேரம், ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும், அல்லது பயன்படுத்தினாலும் கரைந்து போய்க்கொண்டே இருக்கும். ஐஸ்கிரீமும் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் கரையும். உற்சாகமாக நேரத்தைப் பயன்படுத்தினால் அந்த அனுபவம் இனிக்கும். ஐஸ்கிரீமும் இனிக்கும். சாப்பிடுவதும் உற்சாக அனுபவம். அதனால் நேரமும் ஐஸ்கிரீமை போன்றதே. என்ன ஒரு அற்புதமான கவிதை. இதெல்லாம் எப்படி தோன்றுகிறது இவருக்கு?

கவி காளமேக புலவரைப் போல சிலேடையில் விளையாடுகிறாரே கவிஞர்! மறுபடி மறுபடி படித்து ரசித்து மகிழ்ந்தேன்.

ஆனால் ஒன்று இன்னும் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது? இவ்வளவு நேரம் நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்றால் ஏதோ ஒரு நல்ல விஷயத்தைத்தான் கவிஞர் சொல்லப் போகிறார் என்று ஒரு நம்பிக்கையும் வந்தது. நம்பிக்கைதானே வாழ்க்கை!

Advertisements

ஒரு பதில் to “நேரமும் ஐஸ்கிரீமும் சிலேடை கவிதை”

  1. Ram நவம்பர் 29, 2012 இல் 3:32 பிப #

    good for everyone

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: