கவிஞர் கடிவேலுவின் கவிதையில் சொல்நயம்!

24 ஆக

இதோ போய்விட்டு வந்து விடுகிறேன் என்று போனவர் ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை. இப்போதெல்லாம் ரொம்பவே பிஸியாகி விட்டார். ஆரம்பத்தில் சொல்வது போல் அப்பு… வணக்கம்ப்பு… என்றெல்லாம் சொல்வதில்லை. கம்பீரமான பர்சனாலிட்டியாக வேறு ஆகிவிட்டார். அவர் சொல்லும் கவிதையும் இப்போது பொருள் பொதிந்ததாய் இருக்கிறது.

இப்போது மெயிலில் அனுப்பியிருந்த கவிதையை மறுபடி படித்தால்கூட அதில் சொல்நயம் இருப்பது தெரிகிறது.

நிற்கவும் நேரமில்லை நெடுஞ்சாண் கிடையாய்

       சயனிக்கவும் நேரமில்லை வளமான வாழ்வுக்காய்

கற்கவும் நேரமில்லை முன்னேற வழியுமில்லை – தினமும்

       பயணித்தே பாதிவாழ்க்கை தொலைந்து போனதே!

வளமான வாழ்வுக்காய் கற்கவும் நேரமில்லை என்று படித்தால், வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளத் தேவையான விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் நேரமில்லை என்று அர்த்தம் வரும். வளமான வாழ்வு காய் என்று பிரித்தோம் என்றால், வளமான வாழ்க்கை இன்னும் கனியவில்லை, காயாகவே இருக்கிறது என்று அர்த்தம் வரும். கவிஞர் கடிவேலு எப்படியெல்லாம் தமிழில் விளையாடுகிறார் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது.

நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி? என்பது பற்றி சொல்கிறேன் என்றாரே, அது எப்படி முடியும்? ஒரு நாளைக்கு இருப்பது 24 மணி நேரம்தானே. ஒரு வேளை கால இயந்திரம் என்று சொல்வார்களே, அதைப் பற்றி எதுவும் சொல்லப் போகிறாரா? கால இயந்திரத்தில் ஏறினால் கடந்த காலத்துக்கோ, எதிர் காலத்துக்கோ உடனே சென்று விடலாம் என்று சொல்வார்களே, அதெல்லாம் உண்மைதானா? அல்லது வெறும் கற்பனையா? யோசிக்க யோசிக்க நமக்கு தெளிவு எதுவும் பிறக்கவில்லை.

மற்றொரு கேள்வியும் நம்மை உறுத்தியது. இவ்வளவு அறிவு மிக்க மனிதரை, கவிஞரை, மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் நல்லவரை கடிவேலு என்று இனியும் அழைப்பது முறைதானா? கடி ஜோக் என்று சொல்வார்களே, அது போல வேடிக்கையாக ஏதாவது சொல்வதால் அவரை கடிவேலு என்று அழைக்கிறார்களா? இனியும் அவ்வாறு செய்தால் அது அவரை அவமதிப்பது போல அல்லவா இருக்கும். வரட்டும், அவரிடம் சொல்லி விட்டு இனி அவரை வேலு என்றே அழைப்போம். வேலு என்பதுதான் அவருடைய பெயராக இருக்கும்.

பலவித யோசனையில் நேரம்தான் ஓடிக்கொண்டு இருந்ததே தவிர, அன்று முழுக்க காத்திருந்தும் கவிஞர் வரவேயில்லை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: