நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி?

23 ஆக

கவிஞர் கடிவேலுவிடமிருந்து நீண்ட நாட்களாக தகவல் எதுவும் வரவில்லை. ஆபீஸ் போனவுடன் நாமாவது போன் செய்து பேசலாம் என்று நினைத்திருந்தேன். நம்முடைய இடுகைகளைப் படித்து விட்டு உடனுக்குடன் ஏதாவது செய்தி அனுப்புவாரே! இதற்கு முந்தைய இடுகைக்கு கூட அவர் எதுவும் அனுப்பவில்லையே. காரணம் என்னவாக இருக்கும் என்று நினைத்தபடி ஈமெயிலைப் திறந்தேன்.

கவிஞரிடமிருந்து ஒரு மெயில் வந்திருந்தது. அதைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.

நிற்கவும் நேரமில்லை நெடுஞ்சாண் கிடையாய்

      சயனிக்கவும் நேரமில்லை வளமான வாழ்வுக்காய்

கற்கவும் நேரமில்லை முன்னேற வழியுமில்லை – தினமும்

      பயணித்தே பாதிவாழ்க்கை தொலைந்து போனதே!

நமது உங்கள் நேரத்தை எப்படி செலவழிக்கிறீர்கள்? இடுகையை படித்துவிட்டு இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார் என்பது புரிந்தது. அப்போது நமது செல்போன் சிணுங்கியது. எடுத்தால் கவிஞர் கடிவேலுதான். இன்னும் சற்று நேரத்தில் நம்மை சந்திக்க வரலாமா என்று கேட்டார். “என்ன அனுமதியெல்லாம் கேட்கிறீர்! நீர் எப்போது வேண்டுமானாலும் வரலாமே!” என்றேன்.

“உமது இடுகையைப் படித்து விட்டு நேரத்தை செலவழிப்பதைப் பற்றி உணராமல் இருக்கலாமா? உமது நேரத்தை நான் வீணடிக்கக் கூடாதல்லவா?” என்றார் ஜாக்கிரதையாக.

“உம்மோடு செலவழிக்கும் நேரம் வீணானதல்ல. நல்ல விஷயங்களைப் பற்றித்தானே எப்போதும் பேசுகிறீர். அது ஒரு முதலீடு மாதிரிதானே. அதனால் உடனே வாரும்” என்றேன் உரிமையாக. மிகவும் உற்சாகமாகி அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் நமது இடத்துக்கு வந்து சேர்ந்தார்.

“கொஞ்ச நாட்களாக இடுகைகள் வரவில்லையே, என்ன விஷயம்?” வந்து அமர்ந்தவுடன் விசாரித்தார். “வேலைப்பளு அதிகமாக உள்ளது. வெளியூர் வேறு செல்ல வேண்டியிருந்தது. அதனால் எழுதுவதற்கு நேரம் கிடைக்கவில்லை” என்றேன்.

“சிலருக்கு நேரமே போதவில்லை

சிலருக்கு பொழுதே போகவில்லை

என்றார். நமது இடுகையின் அடிப்படையில் இதைச் சொல்கிறார் என்பது புரிந்தது. “இதுவும் ஒரு கவிதையா” என்றேன். சிரித்தார்.

“உமது முந்தைய இடுகை நல்ல விஷயத்தை வலியுறுத்துவதாக இருந்தது” என்று பாராட்டினார். தொடர்ந்து “ஆனால், நேரத்தை எப்படி முதலீடு செய்யலாம் என்பதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என்றார்.

“எப்படி முதலீடு செய்யலாம் என்று நீர் நினைக்கிறீர். உமது கருத்து என்ன?” என்று கேட்டேன். அவர் சொல்வது நல்ல விஷயமாக இருந்தால் நமது இடுகையில் பதிவு செய்யலாமே!

“எப்படி பணத்தை முதலீடு செய்து மேலும் மேலும் அதைப் பெருக்க முடியுமோ, அது போல நேரத்தையும் முதலீடு செய்து பல மடங்காக பெருக்க முடியும்” என்றார்.

“அதைத்தான் நானே எழுதியிருந்தேனே!” என்றேன்.

“இல்லை. நீர் எழுதியது வேறு. நான் சொல்வது வேறு. நேரத்தையும் முதலீடு செய்து பலப்பல மடங்காக வருமானத்தை பெருக்க முடியும் என்று நீர் எழுதியிருந்தீர். அது உண்மைதான். நான் சொல்வது அதுவல்ல. நேரத்தை முதலீடு செய்து நேரத்தையே பல மடங்காக பெருக்க முடியும். நிறைய நேரம் கிடைத்தால் நிறைய பணமும் கிடைக்கும். அதாவது நீங்கள் விரும்பியதைச் செய்ய உங்களுக்குத் தேவையான பணத்துடன் நேரத்தையும் பெற முடியும். வாரம் முழுதும் ஞாயிற்றுக்கிழமையாக வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்” என்றார்.

“கொஞ்சம் புரியும்படி சொல்லும்” என்றேன்.

அப்போது அவருடைய போனில் அழைப்பு வந்தது. எடுத்துப்பேசி விட்டு, நம்மிடம் “மன்னிக்கவும். அவசரமாக செல்ல வேண்டியிருக்கிறது. போய் விட்டு கொஞ்ச நேரத்தில் வந்து விடுகிறேன்” என்றார். சரியென்றவுடன் அவசரமாக கிளம்பி விட்டார்.

நல்லதொரு விஷயத்தை சொல்ல வரும்போது இப்படி அவசரமாக கிளம்பி விட்டாரே என்று கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சரி வரட்டும். காத்திருப்போம்.

Advertisements

ஒரு பதில் to “நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி?”

Trackbacks/Pingbacks

  1. கனவில் வந்தது யார்? – நகைச்சுவை! « இலவசம் - செப்ரெம்பர் 25, 2012

    […] கடிவேலு வந்தார். “நேரத்தை பல மடங்காக பெருக்குவது எப்பட… என்பதை இன்றாவது சொல்வீரா?” என்று […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: