நெல்லிக்கனியைக் கொடுத்தது அதியமானா? அவ்வையாரா?

3 ஆக

எது விலை அதிகம்? எது விலை குறைவு? இடுகையில் கவிஞர் கடிவேலு வைட்டமின் `Cயைப் பற்றி நீண்ட விளக்கம் கொடுத்தார் அல்லவா? நிறைய விஷயங்கள் நமக்கு சரியாகப் புரியவில்லை. “கவிஞரே, நீர் எப்படி இவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்? ஒரு டாக்டர் மாதிரி பேசுகிறீரே!” என்று கேட்டேன்.

“நான் அடிக்கடி கருந்தரங்குகளில் கலந்து கொள்வது இது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காகத்தான். மறுபடி மறுபடி ஒரு விஷயத்தை கேட்கும் போது அது நமக்கு அத்துபடி ஆகிவிடும். அத்தோடு அதே போல் பேசவும் சுலபமாக பழகிவிடும்” என்றார்.

“அப்படியென்றால் நீரும் கருத்தரங்குகளில் பேசுவீரா?” என்றோம் ஆச்சரியமாக.

“இல்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் பெரிய ஆளாக ஆக வேண்டும்”. ஆனால் சிறிய கூட்டங்களில் நான் பேசுவதுண்டு. இதே வைட்டமின் `Cயைப் பற்றி ஓரிடத்தில் நான் பேசும் போது, அது ஒரு சுவாரசியமான விவாதமாகி விட்டது” என்றார். அது என்ன? என்று நாம் கேட்டதற்கு அவர் சொன்ன விஷயங்கள் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. அதைச் சுருக்கமாக இங்கே தருகிறேன்.

வைட்டமின் `Cயைப் பற்றி பேசிய கவிஞர் கடிவேலு, ‘நாம் நோயாளிகளை பார்க்கப்போகும் போது வைட்டமின் `Cஉள்ள ஆரஞ்சு பழங்கள் வாங்கிக்கொண்டு போவது வழக்கமல்லவா, அது அவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்பதற்காகத்தான். அதுபோல், பெரியவர்களைப் பார்க்கப் போகும் போது ஆப்பிள் அல்லது ஆரஞ்சு பழம் வாங்கிக்கொண்டு போவதும் நமது வழக்கம்தான்’ என்று சொல்லி விட்டு, ‘தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் எப்போதும் ஒரு எலுமிச்சை பழத்தை கையில் வைத்திருப்பார். யாராவது பெரியவர்களைப் பார்த்தால் உடனே அதைக் கொடுப்பார்‘ என்றாராம்.

அப்படி சொல்லிக் கொண்டு வரும்போது, கவிஞருக்கு அதியமான், அவ்வையார், நெல்லிக்கனி போன்றவை ஞாபகம் வந்திருக்கிறது. மேலும் சுவாரசியமாக இருக்கட்டுமே என்று, ‘இதுபோலத்தான் ஒருமுறை அவ்வை அதியமானைப் பார்க்க போன போது அதியமானுக்கு நெல்லிக்கனியை கொடுத்தார்‘ என்று சொல்லி விட்டாராம். உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர், நெல்லிக்கனியை அவ்வை கொடுக்கவில்லை; அதியமான்தான் அவ்வைக்கு நெல்லிக்கனியை கொடுத்தார் என்று மறுப்பு தெரிவித்தாராம். இன்னொருவர் இல்லை இல்லை அவ்வைதான் அதியமானுக்குக் கொடுத்தார் என்றாராம். சற்று நேரத்தில் இதுவே ஒரு பெரிய விவாதமாகி விட்டதாம்.

அந்தக் கூட்டத்தில் ஒரு தமிழாசிரியரும் இருந்திருக்கிறார். அவரிடம் விளக்கம் கேட்ட போது, ‘அவ்வையின் பணி தமிழுக்குத் தேவை என்று கருதி, அவர் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக தனக்கு கிடைத்த நீண்ட ஆயுளைக் கொடுக்கும் கருநெல்லி ஒன்றை அதியமான் அவ்வைக்கு கொடுத்து சாப்பிடச் சொன்னானாம்; அதுதான் தான் படித்து தெரிந்து கொண்டது’ என்றாராம் அந்த தமிழாசிரியர்.

உடனே கவிஞர் கடிவேலு ‘தமிழாசிரியர் சொன்னதையே முடிவாக எடுத்துக் கொண்டு, இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வோம். இல்லாவிடில் இந்த விவாதம் தொடர்ந்து நடந்து, யாருக்கு யார் நெல்லிக்கனியைக் கொடுத்தார்கள் என்பது நமக்கு தெளிவாகிவிடும். ஆனால் வைட்டமின் `Cஉள்ள BIO C யை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது நமக்கு தெரியாமல் போய் விடும்‘ என்று சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தாராம்.

கவிஞர் கடிவேலு பேசிய இந்த பேச்சு எல்லோருக்கும் பிடித்து விட்டதாம். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அந்த குழுவின் தலைவி, இதைப் பற்றி கேள்விப்பட்டு, கவிஞர் கடிவேலு அடுத்த கூட்டத்திலும் வைட்டமின் `Cயைப் பற்றியே பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அடுத்த கூட்டத்தில் பேச்சை ஆரம்பித்த உடனேயே கவிஞர் கடிவேலு சொன்ன நகைச்சுவையைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.

“அப்படி என்னதான் சொன்னீர்” என்று ஆவலை அடக்க முடியாமல் கேட்டேன்.

அடுத்த கூட்டத்தில் கவிஞர் கடிவேலுவை பேச அழைத்த போது, முதலில் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, ‘இந்தக் கூட்டத்திலும் தன்னை வைட்டமின் `Cயைப் பற்றி பேசச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தினாராம். நடத்தி முடித்தவுடன் புரிகிறதா என்று கேட்டாராம். மாணவர்கள் புரியவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்’ என்று ஆரம்பித்தாராம். கூட்டத்தில் இருந்தவர்கள் இவர் என்ன திடீரென்று வேறு என்னவோ பேசுகிறாரே என்று வித்தியாசமாகப் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் நம் கவிஞர் அதைப் பற்றிக் கவலைப் படாமல் தொடர்ந்து பேசியிருக்கிறார். ‘அந்த ஆசிரியர் மறுபடி அதே பாடத்தை நடத்தினாராம். பிறகு புரிகிறதா என்று கேட்டாராம். அப்போதும் புரியவில்லை என்று மாணவர்கள் சொன்னார்களாம். மூன்றாம் முறை நடத்திய பின்பும் புரியவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அந்த ஆசிரியர் சொன்னாராம். மூன்றாம் முறை நடத்திய போது எனக்கே புரிந்து விட்டதே, உங்களுக்கு இன்னுமா புரியவில்லை என்று கேட்டாராம்’ என்று கவிஞர் கடிவேலு சொல்லி முடித்த போது எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்.

இது தான் படித்த நகைச்சுவை என்று தொடர்ந்து பேசிய கவிஞர், ‘அதுபோல எனக்கு இந்த விஷயம் நன்றாக புரிய வேண்டும் என்பதற்காக, என்னை மறுபடியும் அதே விஷயத்தை பேச சொல்லி இருக்கிறார்கள்.. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்‘ என்றாராம். மறுபடியும் எல்லோருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். ‘நாம் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும் போது அது நமது மனதில் நன்றாகப் பதிகிறது என்று லெ கிப்ளின் தன்னுடைய Skill with People என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்’ என்றாராம். அதன் பிறகு BIO C யைப் பற்றி அவர் பேசியதையும் எல்லோரும் ரசித்திருக்கிறார்கள். அன்றிலிருந்து கவிஞரின் பேச்சு என்றால் எல்லோரும் கூட்டத்தில் தவறாமல் ஆஜராகி விடுவார்களாம்.

Advertisements

2 பதில்கள் to “நெல்லிக்கனியைக் கொடுத்தது அதியமானா? அவ்வையாரா?”

  1. Pandian Govindarajan ஓகஸ்ட் 3, 2012 இல் 4:08 பிப #

    நல்ல பதிவு . மேலும் நீண்டு வாழ முன்பே வயது முதிர்ந்த அவ்வைக்கு அதியமான்தான் கொடுத்திருக்கவேண்டும். நாம் சாத்துகுடி கொடுத்து முதுமைக்கு ஊக்கமூட்டுவதைப்போல….பாராட்டுக்கள்!
    வில்லவன்கோதை

    • rasippu ஓகஸ்ட் 4, 2012 இல் 11:59 முப #

      தங்களுடைய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: