ஜலதோஷமா? கவலை வேண்டாம்! ஒரு அதிசய அனுபவம்!

30 ஜூலை

சமீபத்தில் வெளிவந்த ஒரு சினிமாவில் காமெடிக் காட்சி வருமே, “விடுப்பா, விடுப்பா, பஞ்சாயத்துன்னா லைட்ட வைக்கிறதும், படத்தோட முடிவுல ஃபைட்ட வைக்கிறதும் சகஜந்தானப்பா” என்று ஒருவர் சம்பத்தமேயில்லாமல் பேசுவார். ரசிக்கும்படி இருக்கும்.

அதுபோல, தினம் தினம் ஒரு மணி நேரம் கரண்ட் போறதும், மாதம் ஒரு நாள் ஷட் டவுன் (Power Shut down) ஆகுறதும் சகஜந்தானப்பா என்று சொல்லும்படி ஆகி விட்டது சென்னை வாழ்க்கை. ஒரே ஒரு ஆறுதல், முதல் நாள் தினசரி பத்திரிக்கையில் அடுத்த நாள் எந்த ஏரியாவில் முழுநேரமும் கரண்ட் இருக்காது என்று தெரிவித்து விடுவார்கள்.

ஆனால் சென்ற புதன்கிழமை ஷட் டவுன் என்பதை நான் கவனிக்கத் தவறி விட்டதால் அன்று ஆபீஸ் போன பின்புதான் மின்சாரம் இல்லையென்பது தெரிந்தது. சரியென்று வீட்டுக்குத் திரும்பினேன். ‘வீட்டிலேயே இருக்க மாட்டேங்கிறீர்களே’, என்ற மனைவியின் அன்பான அங்கலாய்ப்பை இன்றாவது நிவர்த்தி பண்ணலாம் என்று ஒரு எண்ணம்.

வீட்டில் ரொம்ப நாள் கவனிக்காமல், செய்வதற்கு நேரமில்லாமல் தவிர்த்த ரிப்பேர் வேலைகள் (ஃபிரிட்ஜில் லைட் எரியவில்லை, CFL விளக்கை மாட்ட அதன் ஹோல்டர் சரியில்லை) எல்லாவற்றையும் ஆட்களை வைத்து சரி செய்ய மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. பிறகு சாப்பிட்டு விட்டு, வெளியே ஷாப்பிங் போகலாம் என்று கிளம்பினோம்.

ரங்கனாதன் தெருவில் ஏதாவது ஒரு கடையில் நுழைந்தால், உங்களுக்கு அப்போதைக்கு தேவையில்லை என்றால் கூட, வாங்கி வைத்துக் கொள்ளலாமே என்று ஆசை வரும் வகையில் நிறையப் பொருட்கள் இறைந்து கிடக்கும். பெண்களின் மனநிலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எதைப் பார்த்தாலும் இதை வாங்கலாம், அதை வாங்கலாம் என்று எடுத்து எடுத்து பில் போட வைத்து விடுவார்கள்.

அது போல் நிறையப் பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது, ஐஸ்கிரீம், சென்னா மசாலா, பாதாம் பால் என்ற வித விதமான ஐட்டங்களையும் சுவைக்காமல் நகர முடியாது. நமக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது. ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று சொன்ன மனைவியின் சொல்லைத் தட்ட முடியாமல் சாப்பிட்டு விட்டேன். அதில் வந்தது வினை. அப்பாடா! ஒரு வழியாக விஷயத்துக்கு வந்து விட்டேன்.

இருப்பதிலேயே மோசமான வியாதி எது என்று என்னைக் கேட்டால் ஜலதோஷம் என்றுதான் சொல்வேன். அது ஏன் வருகிறது, எப்போது வருகிறது என்று தெரியாது. ஆனால் வந்தால் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு படாத பாடு படுத்தி விடும். சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வாரே, மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகும், இல்லேன்னா ஏழு நாள்ல சரியாகும்னு; அதற்கு அர்த்தம் என்னன்னா, ஜலதோஷம் வந்துவிட்டால் மருந்து சாப்பிட்டாலும், இல்லாவிட்டாலும் ஒரு வாரம் அதோடு அவஸ்தைப் பட வேண்டும் என்பதுதான்.

என்னோட அனுபவத்தில், வெளியில் எங்காவது ஐஸ்கிரீம் சாப்பிட்டாலோ, குளிர்பானங்கள் சாப்பிட்டாலோ, அடுத்த நாளிலிருந்து அவஸ்தைதான் என்பதை எழுதிக் கொடுத்து விடலாம். அன்று சாயந்திரமோ அல்லது அடுத்த நாளோ அதற்கான அறிகுறி தெரிய ஆரம்பிக்கும். மூக்கிலும் தொண்டையிலும் லேசாக ஒரு கரகரப்பு ஆரம்பிக்கும், குளிர்ச்சியாக தண்ணீர்கூட குடிக்கப் பிடிக்காது. மூக்கில் நீர் ஒழுக ஆரம்பிக்கும், தொடர்ச்சியான தும்மல், உடம்பை படாதபாடு படுத்தும். இரண்டு நாட்களுக்குத் தூக்கம் போய்விடும். தைலம் ஏதாவது போட்டால் பிரச்சினைதான் இன்னும் அதிகமாகும்.

பொதுவாக இதுபோல் அவஸ்தைக்கெல்லாம் மருத்துவரிடம் செல்ல மாட்டேன். அவர் எழுதிக் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டு அது வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்த வேண்டுமா என்ற ஜாக்கிரதை உணர்வுதான் காரணம். இதையெல்லாம் விவரமாகச் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ஜலதோஷத்தினால் அவஸ்தைப் படும் நமது நிலையைப் பார்த்து விட்டு ஆளாளுக்கு ஒரு வைத்தியம் சொல்வார்கள். அப்படித்தான் கவிஞர் கடிவேலு சொன்னபோதும் நினைத்தேன்.

நமது இயற்கையின் அதிசய நெட்வொர்க்கை புரிந்து கொள்வோம் இடுகையைப் படித்து விட்டு கவிஞர் கடிவேலு போன் பண்ணினார். அவருடைய கவிதைக்கு நாம் தந்த விளக்கம் நன்றாக இருந்ததாக பாராட்டினார். பிறகு எல்லாமே மனிதனின் மனோபாவம்தான் என்றார்.

அவர் சொல்லச் சொல்ல உம்.. கொட்டினேன். எதுவுமே பேசவில்லை. பேசமுடியவில்லை. இதை உணர்ந்த அவர் என்ன என்று விசாரித்தார். ஜலதோஷத்தினால் படும் அவஸ்தையைச் சொன்னேன். அதற்கு தான் ஒரு மாத்திரை வைத்திருப்பதாகவும், உடனே எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொன்னார். அடுத்த அரை மணி நேரத்தில் நம்மிடம் அதைக் கொடுத்தார்.

வாங்கிப் பார்த்தேன். BIO C என்று எழுதியிருந்தது. விலையைப் பார்த்தேன். மயக்கமே வந்து விட்டது. “ஒரு ஜலதோஷத்திற்கு மருந்து இவ்வளவு விலையா?” என்று கேட்டேன். “இதை மருந்து என்று சொல்லமுடியாது. உடலின் எதிர்ப்பு சக்தியை நல்ல நிலையில் வைத்திருக்க இது உதவுகிறது. வைட்டமின் `C’ குறைபாடுதான் இந்த ஜலதோஷத்திற்குக் காரணம். இதைப் பயன்படுத்திப் பாரும்” என்றார்.

விலையைப் பார்த்தால் பயமாக இருந்தது. ஆனாலும் கவிஞர் கடிவேலு மீது நம்பிக்கை இருந்ததால் அவர் சொல்வதை நம்பி அதை வாங்கிக் கொண்டேன். “ஒரு நாளைக்கு மூன்று மாத்திரைகள் சாப்பிட வேண்டும். இப்போது உமக்கு ஜலதோஷம் இருப்பதால் முதல் நாள் மட்டும் இரண்டு இரண்டாக மூன்று வேளைக்கு எடுத்துக் கொள்ளும்” என்றார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஜலதோஷத்தின் ஆரம்ப நிலையிலேயே அதை எடுத்துக் கொண்ட காரணத்தினால் அடுத்த நாள் நான் காலையில் கண் விழித்த போது, முதல் நாள் பட்ட அவஸ்தையே தெரியவில்லை. உடலும் நல்ல தெம்பாக இருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். இது என்ன வகையான மருத்துவம் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டி கவிஞரை அழைத்திருக்கிறேன்.

Advertisements

2 பதில்கள் to “ஜலதோஷமா? கவலை வேண்டாம்! ஒரு அதிசய அனுபவம்!”

  1. Sundaraganesan.S ஒக்ரோபர் 1, 2012 இல் 2:08 முப #

    Very useful tip for Cold.

    • rasippu ஒக்ரோபர் 1, 2012 இல் 5:47 முப #

      தங்களது பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி, நண்பர் சுந்தரகணேசன் அவர்களே!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: