வெற்றிபெற்ற நெட்வொர்க்கின் மகத்தான சக்தி!

23 ஜூலை

கவிஞர் கடிவேலு நம்மிடம் விஞ்ஞானி ஐன்ஸ்டினைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார் அல்லவா? அப்போது நமக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. நம்மைப் பார்க்க உள்ளே நுழையும் போது வழக்கமாக அவர் சொல்லும் அப்பு….. வணக்கம்ப்பு….. இந்த தடவை மிஸ்ஸிங். ஒரு வேளை மறந்து விட்டாரோ?

அந்த ஐன்ஸ்டின் சொன்ன நகைச்சுவை இடுகையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

“விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிஸனைத் தெரியுமா?” கவிஞர் கடிவேலு நம்மிடம் கேட்ட கேள்வி நம் சிந்தனையைக் கலைத்தது.

“என்ன இப்படிக் கேட்கிறீர், எடிஸனைத் தெரியாமல் இருக்குமா? பல்பைக் கண்டு பிடித்தவர் அவர்தானே?” என்றோம்.

“அதுதான் இல்லை! எல்லோரும் அப்படித்தான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில் அவர் பல்பை நன்கு மேம்படுத்த மட்டுமே செய்தார். அதை ஒரு வெற்றிகரமான உற்பத்திப் பொருளாக, தொழிலாக மாற்றிக் காட்டினார்.” என்றார் கவிஞர் கடிவேலு.

நமக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்ன சொல்கிறார் இவர்?. இவர் சொல்வது உண்மைதானா? நம் சந்தேகத்தை அவரிடமே கேட்டோம்.

“என்ன சொல்கிறீர் கவிஞரே, உங்களுக்கு எப்படி இது தெரியும்?”

“சந்தேகம் இருந்தால், விற்பனையில் சாதனை படைத்த மிகச் சிறந்த புத்தகங்களை எழுதியுள்ள ராபர்ட் கியோஸாகி (Robert T. Kiyosaki) என்பவர் எழுதி, சமீபத்தில் வெளிவந்துள்ள ‘இருபத்தியோராம் நூற்றாண்டின் வியாபாரம்’ (Business of the 21st Century) என்ற புத்தகத்தை படித்துப் பாரும்.  உண்மை தெரியும்”. என்றார்.

மேலும் தொடர்ந்து, “நான் படித்ததைச் சொல்கிறேன். தினசரி பத்திரிக்கையை விற்பதில் வாழ்க்கையை ஆரம்பித்த இளைஞரான எடிஸன், தந்தி அனுப்பவும், பெறவும் தேவையான மோர்ஸ் கோடை (Morse Code) கற்றுக் கொண்டு, அந்த வேலையில் சேர்ந்து ஒரு வெற்றிகரமான தந்தி சேவகரானார். அப்போதுதான் தன்னை கோடீஸ்வரனாக்கும் ஒரு இரகசியத்தைக் கற்றுக் கொண்டார். அதாவது தந்தி என்னும் ஒரு கண்டுபிடிப்பு வெற்றியடைந்ததிற்குக் காரணம், அதற்குக் காரணமான, கம்பங்கள், வயர்கள், அதைக் கையாள்வதில் உள்ள திறமையான ஆட்கள் மற்றும் ரிலே ஸ்டேஷன் ஆகியவை அடங்கிய பெரிய நெட்வொர்க் தான் என்பதை உணர்ந்து கொண்டார்.”

நாம் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தோம்.

“எனவே, மின்சார விளக்கை (பல்பை) நடைமுறையில் சரியான பயன்பாடுள்ள ஒரு பொருளாக மாற்றி, அதை வெற்றிகரமான வியாபாரமாக மாற்ற, ஜெனரல் எலக்ட்ரிக் (General Electric)  கம்பெனியை அவர் நிறுவினார்; அதன் மூலம் பல்பு எரிவதற்குத் தேவையான மின்சாரத்தைக் வழங்க, மின்சாரக் கம்பங்களையும், மின் கம்பிகளையும், ஆட்களையும் கொண்ட மிகப் பெரிய நெட்வொர்க்கை உருவாக்கியதுதான் அவர் மிகப் பெரிய கோடீஸ்வரனாக உருவாக உதவியது. இதுதான் நெட்வொர்க்கின் சக்தி” என்று முடித்தார்.

“உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான விஷயம்தான்” என்றோம்.

“சரி, நான் கிளம்புகிறேன். இதோ இந்தக் கவிதையை படித்துப் பாரும்” என்று இரண்டாக மடித்த ஒரு பேப்பரை நம்மிடம் கொடுத்து விட்டு,

அப்பு….. வணக்கம்ப்பு…..  என்றபடி கிளம்பினார்.

பேப்பரை பிரித்து அதைப் படித்தேன்.

தான்நின்ற இடத்திலேயே தவமிருந்து – மேலும்

       தன்னினத்தை விருத்தி செய்ய செடிகொடிகள்

தேன்நிறைந்த மலர்களையே பிரசவித்து – மணம்பரப்பி

       வண்டினத்தை தேனுண்ண வாவென்றே அழைத்திடுமோ?

 

தான்விரும்பும் மலர்தேடி சென்றமர்ந்து – அமுதத்

       தேன்குடிக்கும் வண்ணத்துப் பூச்சியது – பசித்தாலும்

தேன்தேடி வேறுமலர் பறந்திடுமே யல்லாது

       தான்தின்ற இலைதேடி மறந்தும்கூட சென்றிடாதே!

 

இலைதின்று வாழ்ந்திருந்த லார்வாபுழுவே – பல

       திசைபறக்க கற்றுவிட்டால் நாடுவது மலர்தானே

இனத்தோடு இனம் சேர்தல் இதுதானோ!

       இயற்கையின் நெட்வொர்க் என்பதே தனிதானோ!

படித்து முடித்ததும் ஒரே மலைப்பாய் இருந்தது. ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மிகச் சாதாரணமாக, கவிதையில் சொல்லியிருக்கிறார் என்பது புரிந்தது. மறுபடி படித்துப் பார்த்தேன். படிக்கப் படிக்க நம்மை மேலும் மேலும் சிந்திக்கத் தூண்டியது. அர்த்தம் புரிந்த போது நமது வியப்பு பலமடங்கானது. இந்தக் கடிவேலு, கவிஞரா அல்லது சித்தரா என்றும் திகைப்பாக இருந்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: