கவிஞர் கடிவேலுவின் விளக்கம்

9 ஜூலை

வழிகாண முடியாமல் தவிக்கின்றார் – காரணம்

       விண்ணுக்கு போகுதுபார் விலைவாசி!

விழிபிதுங்க ஓடிஓடி சேர்த்தகாசு – கைப்பிடி

       மண்ணுக்கு ஆகிடுமோ நீயோசி!

கவிஞர் கடிவேலுவிடமிருந்து ஈமெயிலில் வந்த கவிதை இது. அதைப் படித்து முடித்து விட்டு நிமிர்ந்தபோது

அப்பு… வணக்கம்ப்பு……

என்றபடி கவிஞர் கடிவேலு நம் முன்னால் ஆஜரானார்.

“என்ன கவிஞரே, ரொம்பநாளாக உம்மிடமிருந்து தகவல் இல்லையே! ஏதாவது ஊருக்குப் போயிருந்தீரா?” என்று விசாரித்தேன்.

தன்னுடைய பிஸினஸ் விஷயமாக வெளியூருக்குப் போயிருந்ததாகச் சொன்னார். பிஸினஸில் தீவிரமாக இருப்பதால் எதுவும் எழுத முடியவில்லையாம். ஆனால் நமது இடுகை ஒவ்வொன்றையும் படித்து விடுவாராம். பாரிமுனை கருத்தரங்கத்தில் நடந்தவற்றை கடந்த இடுகைகளில் விவரித்த விதம் நன்றாக இருந்ததாக பாராட்டினார்.

அது இன்னும் முடியவில்லை. அது விஷயமாக எழுத வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று சொன்னேன்.

நமது கடைசி இடுகையான அன்றாட வாழ்வில் நகைச்சுவை பல விஷயங்களை உள்ளடக்கி இருந்தது என்று சொன்னார். அதாவது வாட்ச்மேன் தனியாளாக இருந்த போது அவனுடைய சம்பளமே போதுமானதாக இருந்ததென்றும், திருமணமான பிறகு அது போதவில்லை என்பதனால் மேல்நிலை தண்ணீர் தொட்டி கழுவுவது, கார்களை கழுவுவது போன்ற வேலைகளை செய்து மேலும் வருமானம் சம்பாதித்தான் என்பதும், யதார்த்த வாழ்க்கையை உணர்த்துவதாக இருந்தது என்றார்.

மாதச் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் மெஜாரிட்டியான நடுத்தர வகுப்பு மக்களின் நிலைப்பாடும் அதுதான். எவ்வளவுதான் சம்பளம் அதிகமானாலும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியில் குடும்பத்தை நடத்துவது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது. அந்த அடிப்படையில் உதித்ததுதான் தான் அனுப்பிய கவிதை என்றும் சொன்னார்.

நமது முந்தைய இடுகைக்கு மறுமொழி அளித்த நண்பர் பாண்டியன் அவர்கள், விரசமான சுவை என்று முடித்திருந்தார். அந்த இடுகையில் விரசமாக அப்படி எதுவுமில்லை என்பதே கவிஞர் கடிவேலுவின் எண்ணமும். அது என்பதற்கு அவனுடைய வேலை என்பதையோ, ஏன் ஒரு பேச்சுக்கு கை என்பதையோ கூட வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

நாம் பார்த்த, உணர்ந்த, ரசித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே நாம் எழுதுகிறோம். மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்களோ தெரியாது, அந்த நேரத்தில் அது சிரிப்பை உண்டாக்கியது என்னவோ நிஜம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: