வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவம் (தொடர்ச்சி…)

29 ஜூன்

(பணமே வாழ்க்கையல்ல, என்று சொல்பவர்களுக்கு)

மேடையில் ஒருவர் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தார் அல்லவா?

குடும்பத்தில் பிரச்சினை எதனால் வருகிறது என்று கேட்டு, அதற்கு நகைச்சுவையாக ஒரு கணவன் மனைவிக்கிடையே நடக்கும் உரையாடலையும் சொன்னார். கூட்டத்தில் சிரிப்பு அலை மோதியது.

அவர் மறுபடி ஒரு கேள்வி கேட்டார், “வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவம் பற்றித் தெரிந்து கொண்டீர்களா?”. கூட்டத்திலிருந்து பதில் வருவதற்கு முன்பாக அவரே தொடர்ந்து,

“இந்த கூட்டத்தில் இருப்பவர்களில் சிலர், இவன் பணம் பணம் என்றே பேசிக்கொண்டிருக்கிறானே? பணம் மட்டுமேதான் வாழ்க்கையா? என்று நினைக்கக்கூடும். அவர்களுக்காக நான் எப்போதோ படித்த ஒரு கவிதையை இங்கு வாசிக்கிறேன்”.

பணம் இருந்தால் மெத்தையை வாங்கலாம்

      ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது!

பணம் இருந்தால் கடிகாரம் வாங்கலாம்

      ஆனால் நேரத்தை வாங்க முடியாது!

பணம் இருந்தால் புத்தகம் வாங்கலாம்

      ஆனால் அறிவை வாங்க முடியாது!

பணம் இருந்தால் பதவியை வாங்கலாம்

      ஆனால் மரியாதையை வாங்க முடியாது!

பணம் இருந்தால் மருந்தை வாங்கலாம்

      ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது!

பணம் இருந்தால் இரத்தம்கூட வாங்கலாம்

      ஆனால் உயிரை வாங்க முடியாது!

பணம் இருந்தால் காமத்தை வாங்கலாம்

      ஆனால் காதலை வாங்க முடியாது!

எனவே பணமே வாழ்க்கையல்ல – அதனால்

      வலியும் வேதனையுமே வாழ்க்கையில் மிஞ்சும்

என்றுரைத்த ஆருயிர் நண்பா! உண்மைதான்

      வலியும் வேதனையும் உனக்கு வேண்டாம்!

உயிரான நண்பன் உனக்காக அனைத்தையும்

      நானே தாங்கிக் கொள்கிறேன் – அதனால்

உன்னிடமுள்ள பணம் மற்றும் சொத்துக்களை

      என்னுடைய பெயருக்கு எழுதிக் கொடுத்துவிடு!

அவர் இந்தக் கவிதையை வாசித்து முடித்ததும், மறுபடியும் கூட்டம் சிரிப்புக் கடலில் மூழ்கியது. பிறகு அவரே தொடர்ந்து, “இதை நீங்கள் புரிந்து கொண்டால்தான், இதற்கடுத்து அந்தப் பணத்தை நேர்மையான வழியில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது பற்றி நான் சொல்வது உங்களுக்குப் புரியும்” என்றார். மேலும் தொடர்ந்து பேசினார்.

“உங்கள் வருமானத்தை சுருக்கிக் கொள்ளாதீர்கள். இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அபரிமிதமாகத்தான் இருக்கிறது. நீங்கள் மட்டும் ஏன் உங்கள் வாழ்க்கைக்கு, வசதிக்கு ஒரு எல்லையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமா? அதற்குரிய வாய்ப்பைக் கண்டு பிடியுங்கள். அதை முயற்சி செய்யுங்கள். முயற்சியில் வெற்றி பெற்று உங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை வாழுங்கள். மற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். செய்வீர்களா?”

அவர் அப்படிக் கேட்டதும் கூட்டம் முழுக்கவே உற்சாகம் தொற்றிக் கொண்டது. எனக்கும் மனம் லேசானது. இவர் சொல்வதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது புரிந்தது. ஏன் ஏராளமான பணம் சம்பாதிக்கக் கற்றுக் கொண்டு, நமக்கு விருப்பமான வாழ்க்கையை வாழக்கூடாது? என்று மனதின் ஓரத்தில் ஒரு கேள்வி எழுந்தது.

Advertisements

4 பதில்கள் to “வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவம் (தொடர்ச்சி…)”

 1. Pandian Govindarajan ஜூலை 7, 2012 இல் 9:36 முப #

  இனிய நண்பருக்கு
  இன்று உலகே ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திசைக்குத்தான்
  நீங்களும் வழிகாட்டுவதாக நினைக்கிறேன்.தரமான வாழ்வுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல என்ற எண்ணம் எனக்குண்டு..அத்தியாவசிய தேவைகளைபூர்த்தி செய்த ஒருவனிடம் காணும் மனமகிழ்வு பணத்தை கோடிகோடியாய் குவித்தவனிடம் இருப்பதில்லை என்பதை எண்ணிப் பாருங்கள்.

  இன்றைய வளரும் தலைமுறைக்கு நாம் கற்றுக்கொடுத்துக்கொண்டிருப்பதே பணத்தை எப்படி தேடிக்குவிப்பது என்ற குறுக்கு வழியைத்தான்.இப்படி குவிக்க நேரும் போட்டியில் நேர்மை எங்கே இருக்கிறது.
  கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படுகிற பிணக்குக்கு பணம் மட்டுமே காரணமல்ல..அவர்கள் மனோபாவமே மாறிப்போயிருப்பதுதான்.பண்ம் என்றால் பிணமும் வாயைத்திறக்கும் என்ற அச்சில் இந்த சமூகம் ஊறிக்கிடப்பதுதான்..
  அபரிதமான பணத்தை தேடி ஓட கற்றுத்தருவது இந்த சமூகத்தை மேலும் சீரழிக்கும்.அதைவிட நல்லபண்புகளையும் வாழ்வில் நம்பிக்கைகளையும் ஏற்படுத்துவதே மனித குலத்துக்கு பயனாய் விளையும்.
  சீரான எழுத்து நடை..பாராட்டுக்கள்.
  இனிய..
  வில்லவன் கோதை

  • rasippu ஜூலை 7, 2012 இல் 10:00 முப #

   தங்களுடைய ஆரோக்கியமான விமரிசனத்துக்கு மிகவும் நன்றி! தங்கள் கருத்துக்களை நான் மிகவும் மதிக்கிறேன். இந்த வலைப்பூவில் பணத்தின் முக்கியத்துவம் பற்றி உணர்த்துவது மட்டும் என் நோக்கமல்ல. மற்றும் பல நல்ல பண்புகளையும், சிறந்த மனோபாவத்தையும் எல்லோரும் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். விருப்பமான வாழ்க்கைக்குத் தேவையான அளவு பணம் கிடைத்துவிட்டால் மனிதனிடம் இயற்கையாக உள்ள நல்ல பண்புகள் வெளிப்படும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

 2. Ravichandran பிப்ரவரி 5, 2016 இல் 5:15 பிப #

  பணத்தின் முக்கியத்துவம்.
  ……………………………………….
  ஒருவனின் மதிப்பும், மரியாதையும்
  அவன் வைத்திருக்கும் பணத்தின் அளவை பொருத்தது.
  ………………………………..
  பசி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், பணத்திற்கு அவசியமே இல்லை
  ……………………………………..
  பணம் என்கிற மூன்றெழுத்து மந்திரம்தான்
  இந்த உலகையே ஆண்டு கொண்டு இருக்கிறது.
  ………………………………..
  ஒவ்வொரு வருடமும்
  பணமா பாசமா என்கிற போட்டியில்
  ஹாட்ரிக் வெற்றியையும் தாண்டி, தொடர்ந்து வெற்றியை தக்க வைத்து கொள்வது பணம் மட்டும்தான்.
  ……………………………………..
  உலகை ஆள பணத்தை படைத்தான் மனிதன், அது அன்று.
  பணமோ மனிதன் வாழும் உலகையே ஆள்கிறது, அது இன்று.
  ………………………………………
  தன்னை படைத்த கடவுளை விட
  தான் படைத்த பணம்தான் பெரியதென்கிறான் மனிதன்!
  ……………………………………
  பசி இல்லாமல் பட்டினி கிடப்பவர்களை விட
  பணம் இல்லாமல் பட்டினி
  கிடப்பவர்கள்தான் அதிகம்.
  …………………………………..
  பணம் எவ்வளவுதான் சேர்ந்தாலும்!
  போதும் என்ற மனம் மட்டும் யாரையுமே சேர்ந்ததில்லை.
  ………………………………
  பணம் மட்டும் மரத்தில் காய்ப்பதாக இருந்திருந்தால்
  இந்நேரம்
  அப்துல் கலாம் சொன்னதை விட
  பல மில்லியன் மரங்கள் இந்தியாவில் மட்டும் இருந்திருக்கும்.
  ………………………………
  பணம் இருந்தால்
  பல் இல்லாத கிழவனாலும்
  பதினாறு வயது குமரியை
  திருமணம் செய்ய முடியும்.
  …………………………….
  பணக்குரையை தீர்க்க
  கடவுளை தேடி
  கோயிலுக்கு சென்றவரிடம்,
  பணம் கொடுத்த பின்பே
  கடவுள் தரிசனம்,
  என்கிறார் கோயில் பூசாரி .
  ………………………………
  மந்திரம் சொன்னால் பணம் பெருகும் என்று
  பொய்யை சொல்லி,
  மந்திரவாதி பணம் சம்பாதிக்கின்ற
  யுக்திதான் அது.
  …………………………….
  இன்னும் எழுதுவேன்
  இப்படிக்கு
  ஏ.ரவிச்சந்திரன்
  8608324503
  7676204544
  இத புடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க . தின மலர்ல அனுப்புனேன் book ல வரவில்லை . உங்கள் கருத்துகளுக்கு imm waiting ,,,,,,,,

  • rasippu பிப்ரவரி 6, 2016 இல் 8:07 முப #

   தங்களது வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
   “திரைகடலோடியும் திரவியம் தேடு.”
   “அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை.”
   “பணம் பாதாளம் வரை பாயும்.”
   “ஏழை சொல் அம்பலம் ஏறாது.”
   போன்ற பல மூதுரைகளும் இதையே உணர்த்துகின்றன.
   மனிதன் தன் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சில மோசமான அனுபவங்களின் மூலம் பணத்தின் அருமையைப் புரிந்து கொள்கிறான். ஆனால் பணம் ஒரு சிலரை முற்றிலுமாக மாற்றி விடுகிறது.
   மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்வதற்கும், சமுதாயத்தில் தனக்கென ஒரு மதிப்பு வேண்டுமென்றாலும் அதற்கு பணத்தின் தேவை அவசியமாகிறது.
   பணத்தின் அருமையை உணர்ந்து, நேர்மையான வழியில் அதனை ஈட்ட முயற்சிக்க வேண்டும். அதனை நற்காரியங்களுக்கு செலவிட வேண்டும். அதுவே நிம்மதியான வாழ்க்கையைத் தரும் என்பது நமது கருத்து.
   இந்தியா வல்லரசாகும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம் எல்லோருக்கும் பொருளாதாரக் கல்வி (Financial Education) மிக அவசியம். நம் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே அதைப் போதிப்பது நலம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: