சக மனிதர்களையும் ரசியுங்கள்!

17 டிசம்பர்

TATA Magic என்றொரு வாகனம் சென்னையில் பிரபலமாக இருக்கிறது. மினிவேன் போன்று இருக்கும். ஷேர் ஆட்டோ போன்று தூரத்திற்கு ஏற்றபடி பணம் வாங்குகிறார்கள். பேருந்து நெரிசலில் இருந்து விடுபடவும், ஆட்டோவில் சென்றால் கொடுக்க வேண்டிய அதிகப் படியான மீட்டர் வாடகையை மிச்சப் படுத்தவும் பெரும்பான்மையான நடுத்தர மக்கள் உபயோகப் படுத்தும் வாகனமாக அது ஆகிவிட்டது.

நேற்று அதில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. டிரைவர் சீட் அருகே ஒரு சீட்டில் இரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். டிரைவருக்குப் பின்னால் உள்ள எதிரும் புதிருமான இரண்டு நீண்ட இருக்கைகளில் (மூன்று பேருக்கானது), ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு பேராக எட்டு பேர் அமர்ந்திருக்க, அதற்கு நடுவிலுள்ள இடைவெளியில் ஒரு பெட்டி அதில் ஒரு யுவதி அமர்ந்திருந்தாள். அதற்கு எதிரே கதவை ஒட்டி எனக்கு இடம்.

கிட்டத்தட்ட எல்லோருக்குமே கொஞ்சம் இடைஞ்சலான பயணம்தான். இது போன்ற பயணம் எனக்கு ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. ஆனால் அதில் வழக்கமாகப் பயணம் செய்பவர்களுக்கு நெரிசலில் பயணம் செய்வது பழக்கமாகி விட்டது போலும். இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமலே பயணம் தொடர்ந்தது.

ஒவ்வொருவரையும் கவனித்தேன். எதிரேயுள்ள யுவதி தன்னுடைய செல்போனை ஆராய்ந்து கொண்டிருந்தாள். ஜன்னலோரமாக இருப்பவர்கள் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் எதையோ யோசித்துக் கொண்டு மேலே பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்குள் ஒரு எண்ணம். இவர்களின் மனநிலை எப்படி இருக்கும். விலைவாசியைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ, குடும்பத்தில் தற்போதைய செலவுகளை பற்றியோ கவலைப் பட்டுக் கொண்டிருப்பார்களா?

அல்லது ஆபீஸில் நடந்த விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருப்பார்களா? தெரியவில்லை.

“உங்க ஸ்டெயின்டு கிளாஸ் (கலர் பூச்சுள்ள கண்ணாடி) நன்றாக இருக்கிறது” என்று ஒரு குரல் கேட்டது. சட்டென என் எண்ணவொட்டம் கலைந்து குரல் வந்த திசையை நோக்கினேன். ஜன்னலோரமாக அமர்ந்திருந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர், வெளியே பைக்கில் வந்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். வண்டி ட்ராபிக் நெரிசலில் நின்றிருந்தது. அந்த இளைஞன் புன்னகைத்து நன்றி சொன்னான். சிறிது நேரத்தில் வண்டி நகர்ந்தது.

“உங்களுக்குத் தெரிந்தவரா?” என்று கேட்டேன்.

“இல்லை. அவர் அணிந்திருந்த கண்ணாடி அவருக்குப் பொருத்தமாக இருந்தது. அதனால் ரசித்து பாராட்டினேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷம்.” என்றார்.

எனக்கு ஒரே வியப்பு! இன்னும் ரசிப்புத்தன்மை மக்களிடம் இருக்கிறது. வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தாலும், இந்த ரசிப்புத்தன்மை அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

அவருடைய பாராட்டுதலைக் கேட்டு அந்த இளைஞனும் சந்தோஷமடைந்தான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் மிகவும் சந்தோஷமாக் இருந்தது. நண்பர்களே! உங்களை நீங்கள் ரசிப்பதோடு, சக மனிதர்களையும் ரசியுங்கள். மற்றவர்களுக்கும் சந்தோஷத்தை அளியுங்கள்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள். மீண்டும் சந்திப்போம்.

Advertisements

ஒரு பதில் to “சக மனிதர்களையும் ரசியுங்கள்!”

Trackbacks/Pingbacks

  1. ஆஸ்பத்திரியில் கவிஞர் கடிவேலு « rasippu - திசெம்பர் 20, 2011

    […] சக மனிதர்களையும் ரசியுங்கள் படித்து விட்டு, அதே போல TATA Magic க்கில் பயணம் செய்திருக்கிறார். அதில் பயணம் செய்த ஒரு பெண்ணைப் பார்த்து ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில் கவிதை சொல்லியிருக்கிறார். அவள் கோபத்தில் அறைய, உடன் இருந்தவர்கள் பின்னியெடுத்து விட்டார்கள். […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: