வாழ்க்கையை ரசிக்கலாம் வாருங்கள்

13 டிசம்பர்

அன்பார்ந்த நண்பர்களே! வணக்கம்.

இது என்னுடைய முதல் தமிழ் வலைப்பூ.

ரசித்தவை என்றுதான் முதலில் பெயரிட நினைத்தேன். ஆனால் அது இறந்த காலத்தை மட்டுமே குறிக்கும் என்ற் காரணத்தால், மூன்று காலங்களுக்கும் பொருந்தும் விதமாக ரசிப்பு என்று பெயரிட்டிருக்கிறேன்.

ரசிப்புத்தன்மை என்பது மனித இனத்திற்கு மட்டுமே உரிய ஒரு அற்புதமான விஷயம். அதற்கு மொழி பேதமில்லை. வயது ஒரு பொருட்டல்ல. அந்தஸ்து தடையில்லை. எந்த நாடு என்ற கேள்வியில்லை. ஆண், பெண் வித்தியாசமில்லை. கற்றவர், கல்லாதவர் ஒரு பொருட்டல்ல. எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயம்.

ஆனால் இப்போது ஒரு கேள்வி. இந்த ரசிப்புத்தன்மை இன்றைய தேதியில் எத்தனை பேரிடம் உயிரோட்டமாக இருக்கிறது? ஒரு சிறு குழந்தைக்கு எதைப் பார்த்தாலும் வியப்புதான். எல்லாமே அதிசயம்தான். ஆனால் பழக பழக, அது வளர வளர அந்த அதிசயம் அர்த்தமற்றதாகி விடுகிறது.

அதற்கான காரணத்தை அலசுவதும், மறுபடியும் ரசிப்புத்தன்மைக்கு புத்துயிர் கொடுப்பதும், என்னுடைய அனுபவத்தின் மூலமாக தெரிந்து கொண்ட, மற்றவர்களுடைய அனுபவத்தின் மூலமாக கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு ஒரு தளம் அமைப்பதும், அதன் மூலம் மற்றவர்கள் பயனடைய உதவுவதுமே இந்த வலைப்பூவின் நோக்கம். ஏன் உங்களுடைய அனுபவ பகிர்வுக்கும் இதில் இடமுண்டு.

தன்னுடைய அனுபவத்தின் மூலமாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்பவன் அறிவாளியாக, விபரமறிந்தவனாக ஆகிறான். ஆனால் மற்றவர்களுடைய அனுபவத்தின் மூலமாக கற்றுக்கொண்டவன் புத்திசாலியாகிறான். அனுபவம் என்பது அவ்வளவு முக்கியமானது. அதையே கண்ணதாசன் தன்னுடைய வரிகளில் அருமையாக வடித்திருப்பார்.

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது யாதெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

`அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி

அனுபவம் என்பதே நான்தான் என்றான்!

அனுபவங்களை தெரிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள தயாராகுங்கள். உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடலாம். மீண்டும் சந்திப்போம்.

Advertisements

10 பதில்கள் to “வாழ்க்கையை ரசிக்கலாம் வாருங்கள்”

 1. Jagan திசெம்பர் 14, 2011 இல் 3:19 முப #

  Nice Blog. Design is great. Congrats for your new blog

  • rasippu திசெம்பர் 14, 2011 இல் 4:16 முப #

   நன்றி ஜெகன் அவர்களே!

 2. sureshteen திசெம்பர் 14, 2011 இல் 12:20 பிப #

  congrats for your new blog….. keep blogging…

  • rasippu திசெம்பர் 15, 2011 இல் 7:52 முப #

   உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ரிஷ்வன் அவர்களே!
   rasippu.wordpress.com இல்
   இன்றைய இடுகை உங்களை நீங்களே ரசியுங்கள்!

  • Jagan திசெம்பர் 15, 2011 இல் 8:11 முப #

   வாழ்த்துகள் நண்பரே, உங்கள் வலை பூ மென் மேலும் பிரபலம் அடைய வாழ்த்துகிறேன்

   அன்புடன்
   ஜெகன்

   • rasippu திசெம்பர் 15, 2011 இல் 9:07 முப #

    மிகவும் நன்றி ஜெகன் அவர்களே!
    நாளை rasippu.wordpress.com இல்
    கவிஞர் கடிவேலுவின் அறிமுகம்

 3. Pandian Govindarajan திசெம்பர் 30, 2011 இல் 7:23 முப #

  உங்கள் நடை நிதானமானது.அதேசமயம் ரசிக்கத்க்கது. வாழ்த்துக்கள் – வேர்கள்

  • rasippu திசெம்பர் 31, 2011 இல் 5:02 முப #

   உங்கள் பாராட்டுக்கு நன்றி திரு. பாண்டியன் அவர்களே.

 4. klikravi திசெம்பர் 3, 2013 இல் 1:31 முப #

  அன்பு பழனிச்சாமி அவர்களே; ஒரு முறை தென் கச்சி ஒரு ஜோக் நிகழ்வு சொன்னார். அதாவது மகிழ்ச்சி என்பது குழந்தைகளுக்கு மிகவும் சுலபமாக செலவே இல்லாமல் கிடைத்து விடுகிறது. ஐந்து ரூபாய் ‘கிலுகிலுப்பை’யை ஒரு குழந்தையின் முகத்துக்கெதிரே ஆட்டினால் அதன் ஒலியில் ஈர்க்கப்பட்டு விழுந்து விழுந்து ஆனந்தமாய் ரசித்து சிரிக்கிறது. இதையே ஒரு வயதான கிழவருக்கெதிரே ஆட்டினால் ‘என்ன விளையாடறியா? தள்ளிப்போடா’ என்று எரிந்து விழுவார். இவருக்கு சந்தோஷம் என்பது எதிலுமே கிடைக்காது போலும். என்று சொன்னார்.
  அதனால்தான் ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’என்றார்கள். ‘நீங்கள் குழந்தைகளைப் போல் ஆனாலன்றி என்னிடம் வரமுடியாது’ என்றார் இயேசு கிறிஸ்துவும்! ஆக மனதைக் கல்மிஷமில்லாமல் குழந்தையாக வைத்திருந்தால் என்றுமே வாழ்க்கையில் ஆனந்தம்தான்! நாம் childish ஆக இருக்கக்கூடாது. ஆனால் childlikeஆக இருக்கவேண்டும்.
  அன்புடன்: க்ளிக் ரவி

  • rasippu திசெம்பர் 3, 2013 இல் 4:36 முப #

   அன்பு ரவி அவர்களே; தங்களுடைய வருகைக்கும் பகிர்ந்து கொண்ட மேன்மையான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: